த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

சூப்பர் ஸ்டார் தொடர்பான எத்தனையோ போஸ்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். பிறந்த நாள், பட ரிலீஸ், பட பூஜை, திருமண நாள் இப்படி பல தரப்பட்ட நாட்களுக்கு பலவிதமான போஸ்டர்களை நம் ரசிகர்கள் எழுப்புவர்.

ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.

அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.

இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.

போஸ்டர் கூறும் செய்தி என்ன?

“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.

இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”

தற்போது புரட்சி தலைவரைப் போல மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை கலாநிதி மாறனின் தயாரிப்பது என்ன ஒரு ஒற்றுமை…!! வாவ்….!!!! இதை கண்டுபிடித்து போஸ்டர் எழுப்பிய அந்த ரசிகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.


அதுமட்டுமா, அமரர் எம்.ஜி.யாருக்கு எப்படி என்றும் நினைவில் நிற்கும்படி ‘புரட்சி தலைவர்’ என்று ஒரு பெயர் அமைந்ததோ அதே போல தமிழகத்தில் நாளை அரசியல் புரட்சி ஏற்படுத்தப் போகும் சூப்பர் ஸ்டாருக்கும் இப்போதே ஒரு அருமையான பெயரை சூட்டியுள்ளனர் இந்த ரசிகர்கள்.

நன்றி : சுந்தர் ( http://onlysuperstar.com )

எந்திரனை வைத்து இன்னும் என்னென்ன கதைகள் பின்னப் போகிறார்களோ...

நமக்குத் தெரிந்து சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்கள்தான் எந்திரனின் கதை.

ஆனால் இப்போது இன்னும் புதுசு புதுசாக, தினுசு தினுசாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இணைய தளங்களில்.

அப்படி வந்துள்ள ஒரு கதை இது. சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் தான் கையெழுதிய கம்யூட்டர் மானிட்டரில் தலையை மோதிக் கொண்டிருப்பார். நல்ல வேளை... மனிதர் அந்தக் கொடுமையை அனுபவிக்கவில்லை.

இதோ நம்மாளுங்க விடும் கரடி... ஸாரி கதை!

"ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு 'ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். வரும் 2,200ம் ஆண்டில் 'ரோபோ' எப்படி இருக்கும்? அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற்பனையாக வைத்து, முடிவில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார். இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார்.

ரஜினி கண்டுபிடித்த 'ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண்டது என்பது விசேஷ அம்சமாகும். இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.

இதற்கிடையே ரஜினி-ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த 'ரோபோ'வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான். வில்லன் கையில் சிக்கிய 'ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்துவிடுகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் காதல் உட்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடுகிறது. ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரஜினி.

இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே 'அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப்படுகிறது. எந்திரன் 'ரோபோ' ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். 'ரோபோ'வுக்கு 'அவுட்டோர்' சூட்டிங் கிடையாது. இந்த 'ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பலவகை அட்டகாசங்களைச் செய்கிறது.

'ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது 'இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல்படி ஆடும் 'ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது. ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடும் ஒரு காதல் காட்சி 'கம்யூட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது. இந்தப்படத்தில் ஏ,ஆர்.ரகுமான் இதுவரை இல்லாத அளவுக்கு இசையில் 'காமெடி' கலந்து பல புதுமையான டியூன்களை உருவாக்கி உள்ளார். 'எந்திரன்' 2010ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ் விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்."

இன்னும் என்னென்ன கதைகள் இவர்களிடம் ஸ்டாக் இருக்கிறதோ...!!

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter