த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label அஜித். Show all posts
Showing posts with label அஜித். Show all posts

பெங்களூர் எலஹங்கா விமானப்படை மைதானத்தில் நடக்கும் ஏரோ இந்தியா சர்வதேச விமாணக் கண்காட்சியான 'ஏர் ஷோ-2009', விமானங்களுடன் சேர்த்து 'நட்சத்திரங்களின்' வருகையால் மிகக் கலர்புல்லாக காட்சியளிக்கிறது.

அங்கு சாகஸங்களை நிகழ்ச்சி வரும் சர்வதேச போர் விமானங்கள், காட்சி அரங்குகளிலும் வைக்கப்பட்டுள்ள விமானங்கள், ரேடார்கள், ஏவுகணைகளைக் காண முன்னணி திரை/ விளையாட்டு நட்சத்திரங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் ஒருவயது மகள் அனோஷ்காவுடன் ஏர்ஷோவை கண்டுகளித்தார். காதுவரை நீண்ட மீசை, கறுப்பு கோட் சூட்டில் அசத்தலாக வந்த அஜீத், சும்மா ஓரிடத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கவில்லை.

கையோடு கொண்டு வந்திருந்த கேமிராவுடன் புகைப்படக்காரர்களுடன் ஒருவராக களத்தில் குதித்து விமானங்களை 'சுட்டுத் தள்ளினார்'.


நிருபர்கள் அடையாளம் கண்டுகொண்டுவிட்டு அவரை படமெடுக்க ஆரம்பித்தனர். அட, நாம எப்பவும் கிடைப்போமே.. இந்த ஷாட்ஸ் கிடைக்குமா என்று தனக்கு மேலே பறந்த சுகோய்-30எம்கேஐ விமானத்தை ஆர்வமாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தார் அஜீத்.


நாளை ப்ரியங்கா சோப்ரா, லாரா தத்தா மற்றும் 'கிரிக்கெட் தொழிலதிபராக' புது அவதாரம் எடுத்துள்ள ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் ஏர்ஷோவுக்கு வருகிறார்களாம்.

அப்ப, நிச்சயமா யாரும் ஏர்ஷோவைப் பார்க்கப் போறதில்லை!!

நன்றி: startajith.com (ம) thatstamil.com

படத்துக்குப் படம் கெட்டப் மாற்றுவதில் ஆரம்ப காலத்திலேயே கமலுக்கு இணையான ஆர்வம் காட்டியவர் 'தல' அஜீத்.

சிட்டிசன், வரலாறு போன்ற படங்களில் அவரது வித்தியாசமான தோற்றம் 'அட' சொல்ல வைத்தது.

அதற்குப் பின் கொஞ்ச காலம் 'அஜீத்'தாகவே வந்து போன அஜீத்துக்கு மீண்டும் வித்தியாசமான கெட்டப்பில் வர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது அவரது நண்பர் சரண் இயக்கும் 'அசல்' படத்தில்.

இந்தப் படத்துக்காக அருவா மீசையும் அசத்தல் லுக்குமாக வரப்போகிறாராம் அஜீத். விருமாண்டியில் கமல் வருவாரே அந்த மாதிரி. இந்தப் படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் மூலம் அஜீத் - சரண் கூட்டணி, மீண்டும் தங்களை ஒரு வசூல் கூட்டணி என நிரூபிக்க சகல முஸ்தீபுகளுடனும் களமிறங்குகிறது.



மார்ச்சிலேதான் படப்பிடிப்பு. ஆனால் இப்போதிலிருந்தே விருமாண்டி மீசையோடு திரிகிறார் அஜீத். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த மீசையை 'அசல்' படப்பிடிப்பு முடியும் வரை தொடர்வாராம் தல! (மேலதிக புகைப்படங்களுக்கு இங்கேசொடுக்கவும் )

இதற்கிடையில் சம்பளத்தை குறைக்க நடந்த பேச்சு வார்த்தையில் பெரும் வெற்றி. சுமார் இரண்டு கோடி வரை தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் அஜீத். காக்காய் உட்கார கள்ளு பானை உடைஞ்சு விழுந்த மாதிரி, இந்த சம்பளக் குறைப்புக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறார்களாம்.


நன்றி: தமிழ்சினிமா டாட் காம் () தட்ஸ்தமிழ் டாட் காம்

சிவாஜி புரடக்ஸன் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் 'அஜித்' நடிப்பில் உருவாகும் 'அசல்' திரைப்படத்திாக, புதிய 'முறுக்கு-மீசை' வளர்க்கிறார் அஜித். அந்த கெட்-அப்பில் அஜீத்தின் புகைப்படங்கள் கீழே.. (இவை சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது...)























நன்றி: starajith.com

அல்டிமேட் ஸ்டார் அஜித்+அழகு தேவதை ஷாலினி+குட்டி தேவதை அனுஷ்கா கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள் இங்கே..












மேல் அதிக படங்களுக்கு : http://www.starajith.com/media_display.php?id=1100

“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் நாற்காலியை அடையாமல் விடமாட்டேன்…” என்று ஒரு காலத்தில் மனம் போனபடியெல்லாம் பேட்டி கொடுத்துகொண்டிருந்த அஜீத் இன்று அடக்கத்தின் சிகரமாய் காணப்படுகிறார். தேவையின்றி பத்திரிக்கைகளில் பேசுவதில்லை. யாருக்கும் சவால் விடுவதில்லை. தான் பாட்டுக்கு தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த மாற்றம் அவருள் எப்படி நிகழ்ந்தது?

இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.


அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.


சூப்பர் ஸ்டாரும் அஜீத்தை பரிவுடன் உபசரித்து, பில்லா ரீமேக்கிற்கு ஒப்புதலும் ஆசியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், “Living with Himalayan Masters” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். (திரையுலகில் சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலருக்கு ரஜினி இந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் தெரியுமா?)

பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.


மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.

வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)


அஜீத்தின் குழந்தையின் பெயர் அனுஷ்கா. பார்க்க அச்சு அசலாக அஜீத் போலவே இருக்கும் அந்த குட்டி தேவதைக்கு தற்போது ஒரு வயது நிரம்பி இரண்டாம் வயது ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

திருவள்ளுவர் கூறுவது போல,

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - குறள்

பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”

சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: OnlyRajini.com (சிம்பிள்_சுந்தர்)

இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகப் போகும் நான் கடவுள் திரைப்படத்தை எதிர்க்க இப்பவே தயாராகி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிக கண்மணிகள்...

ஏற்கனவே சில இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளித்து ரிலீஸ் ஆகும் நான் கடவுளுகு புதிய பிரச்சினை ரெடி..

அஜித்துக்கும் நான் கடவுளுக்கும் உள்ள தொடர்பை பார்க்க ஒரு ஃப்ளாஸ்பேக் ...


2006 - ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது.. 'அஜித் - பாலா' காம்பினஷன் கோலிவுட் - இல் பரபரப்பாக பேசப்பட்டது... இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு , பரமசிவன் , திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்) . மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை.. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்..

இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது..


அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா.. ஹோடேலில் காத்திருந்த அஜித்திற்கு அதிர்ச்சி... பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிவாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து.. அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே காட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர்
பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார். (பணச்சிக்களில் மாண்டிகொண்டு பாடபிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்துள்ளார் அஜித் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ...)



லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட 'அஜித்'திற்கே இந்த நிலைமையா? என யோசித்த மற்ற நடிகர்கள் இதில் உடனடியாக 'நடிகர் சங்கம்' நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்; புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என அதன் தலைவர் அறிக்கை கொடுத்தார்; இதை பெரிய பிரச்சினையாக்க விரும்பாத அஜித் புகார் கொடுக்காமல் பிரச்சினைக்கு அப்போது முற்று புள்ளியிட்டார்..

இந்த காட்டுமிராண்டி தனத்தை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதனமாயினர்.. ஆனால் பாலா-வின் 'நான் கடவுள்' ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதனமாயினர் என்பதே உண்மை...



இப்போது 'நான் கடவுள்' ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge' எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்... என்ன மாதிரியான 'Revenge' என்பது போக போகத் தான் தெரியும்...

சினிமா எக்ஸ்பிரஸ்கட்டுரையின் தொடர்ச்சி...

முந்தய பகுதி : 'தல' போல வருமா - பகுதி 1

பெரிதாய்
பார்க்க கிழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்








முந்தய பகுதி : 'தல' போல வருமா - பகுதி 1

நன்றி : ajithfans.in


சிவாஜி பிலிம்ஸ் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கௌதம் மேனன் திடீரெனக் கழட்டிவிடப்பட்டார் என்று சில தினங்களுக்கு முன் செயதிகள் வெளியானது நினைவிருக்கலாம்.

அப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வந்த கௌதம் மேனன், இப்போது அதுகுறித்து பதிலளித்துள்ளார்.

மேனன் அளித்துள்ள பதில்:

வாரணம் ஆயிரம் என்னைப் பொருத்தவரை வெற்றிப் படம்தான். இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டுள்ள படம். இப்போது 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்தப்படம் முடிந்ததும் 'ஜொஸ்சி' என்ற தெலுங்கு படத்தையும் இயக்குகிறேன்.சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கவிருந்த படத்தை நானாகத்தான் இயக்க மறுத்தேன். தயாரிப்பாளர் என்னை நீக்கியதாகக் கூறுவது தவறு.

அஜீத் படத்தை இயக்க அழைப்பு வந்தபோது நான் வாரணம் ஆயிரம் படத்தின் இறுதி கட்ட வேலைகளில் இருந்தேன். பட வேலைகளை முடிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்கவில்லை. உடனே கதை கேட்டு நிர்ப்பந்தித்தார். அதற்கு என்னால் உடன்பட முடியவில்லை.

எனவே தான் அஜீத் படத்தை இயக்கவில்லை. மற்றபடி அஜீத்துடன் எனக்கு எந்த மோதலும் இல்லை.

அஜீத்தும் நானும் இன்னொரு படம் மூலம் கண்டிப்பாக சேருவோம். அஜீத் சிறந்த நடிகர். பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருக்கிறது.

வெளியில் நான் செல்லும்போது என்னை சந்திக்கும் பலரும், 'எப்ப எங்க தல படத்தை டைரக்டர் செய்யப் போறீங்க?' என்று கேட்கிறார்கள்.

ரசிகர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். அதனால்தான் அவர்கள் இத்தனை அன்பு செலுத்துகிறார்கள். அவருடன் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என்கிறார் கௌதம்.

டிஸ்க்கி :
இதற்க்கு முன்பு கௌதம் இயக்கிய "காக்க காக்க " - அஜித் நடிக்க வேண்டிய படம். சில தவிர்க்க முடியாத காரணத்தால் அஜித் விலகி கொண்டார்..."சூர்யா" வந்த வைப்பை கப்பென பிடித்து கொண்டார். இப்படம் சூர்யா-விற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது..


நன்றி: தட்ஸ்தமிழ் டாட் com



வில்லு படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத்தின் - மை நேம் இஸ் பில்லா பாடல் இடம் பெறுகிறது. வடிவேலுவும், நயனதாராவும் இந்தப் பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டுள்ளனராம்.

ஏற்கனவே போக்கிரி படத்தில் ஆசினுடன், சுட்டும் விழிச் சுடரே பாடலுக்கு சுர்யா கெட்டப்பில் ஆட்டம் போட்டு கபடிகலம் செய்திருந்தார் வடிவேலு. அது சூர்யா ரசிகர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுதியது...

இப்பொது பழைய பாணியில் வில்லு படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடலை வைத்துள்ளனராம். பில்லா படத்தில் இடம் பெற்ற மை நேம் இஸ் பில்லா பாடலில் வடிவேலுவை இதில் ஆட விட்டுள்ளனராம்.

போக்கிரியில் நாயகி ஆசின் ஆடியது போல, இப்பாடலில் நயனதாரா வடிவேலுவுடன் ஆடியுள்ளாராம். பில்லா கெட்டப்பில் படு சூப்பரான காஸ்ட்யூமுடன் நயனதாராவுடன் ஆட்டம் போட்டுள்ளாராம் வடிவேலு.


ஒருபடத்தை ஹிட் செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு...


சமிபத்தில், சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் - அல்டிமேட் ஸ்டார் அஜித் பற்றிய கட்டுரை வெளியிட்டு இருந்தது(jan 05, 2009). நடிகன் என்பதற்கு அப்பாற்பட்டு , சிறந்த மனிதன் என்ற முறையில் நானும் அவரது கோடன கோடி ரசிகர்களில் ஒருவன்.

அந்த கட்டுரை உங்கள் பார்வைக்காக இங்கே.... (பெரிதாய் பார்க்க கிழே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யவும்)





நன்றி: starajith.com

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter