சிவாஜி பிலிம்ஸ் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கௌதம் மேனன் திடீரெனக் கழட்டிவிடப்பட்டார் என்று சில தினங்களுக்கு முன் செயதிகள் வெளியானது நினைவிருக்கலாம்.
அப்போதைக்கு இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் மௌனம் சாதித்து வந்த கௌதம் மேனன், இப்போது அதுகுறித்து பதிலளித்துள்ளார்.
மேனன் அளித்துள்ள பதில்:
வாரணம் ஆயிரம் என்னைப் பொருத்தவரை வெற்றிப் படம்தான். இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டுள்ள படம். இப்போது 'சென்னையில் ஒரு மழைக்காலம்' படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்தப்படம் முடிந்ததும் 'ஜொஸ்சி' என்ற தெலுங்கு படத்தையும் இயக்குகிறேன்.சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜீத் நடிக்கவிருந்த படத்தை நானாகத்தான் இயக்க மறுத்தேன். தயாரிப்பாளர் என்னை நீக்கியதாகக் கூறுவது தவறு.
அஜீத் படத்தை இயக்க அழைப்பு வந்தபோது நான் வாரணம் ஆயிரம் படத்தின் இறுதி கட்ட வேலைகளில் இருந்தேன். பட வேலைகளை முடிக்க எனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்கவில்லை. உடனே கதை கேட்டு நிர்ப்பந்தித்தார். அதற்கு என்னால் உடன்பட முடியவில்லை.
எனவே தான் அஜீத் படத்தை இயக்கவில்லை. மற்றபடி அஜீத்துடன் எனக்கு எந்த மோதலும் இல்லை.
அஜீத்தும் நானும் இன்னொரு படம் மூலம் கண்டிப்பாக சேருவோம். அஜீத் சிறந்த நடிகர். பெரிய ரசிகர் பட்டாளமே அவருக்கு இருக்கிறது.
வெளியில் நான் செல்லும்போது என்னை சந்திக்கும் பலரும், 'எப்ப எங்க தல படத்தை டைரக்டர் செய்யப் போறீங்க?' என்று கேட்கிறார்கள்.
ரசிகர்களுடன் அவர் மிகவும் நெருக்கமாக உள்ளார். அதனால்தான் அவர்கள் இத்தனை அன்பு செலுத்துகிறார்கள். அவருடன் நான் பணியாற்றுவது மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என்கிறார் கௌதம்.
டிஸ்க்கி :
இதற்க்கு முன்பு கௌதம் இயக்கிய "காக்க காக்க " - அஜித் நடிக்க வேண்டிய படம். சில தவிர்க்க முடியாத காரணத்தால் அஜித் விலகி கொண்டார்..."சூர்யா" வந்த வைப்பை கப்பென பிடித்து கொண்டார். இப்படம் சூர்யா-விற்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது..
நன்றி: தட்ஸ்தமிழ் டாட் com
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
5 comments:
ஒரு வித்தியாசமான தலையை கௌதம் காண்பிப்பார் என்று நினைக்கிறேன். அஜீத் என்ன இருந்தாலும், கொஞ்சம் பொறுத்திருக்கலாம். காக்க காக்கவைத்தான் நழுவவிட்டார். அன்று கௌதம் புது இயக்குநர். ஆனால், இன்று அவர் வெற்றி இயக்குநர். தல இன்னும் கவனம் செலுத்துவதில்லை என்று தெரிகிறது.
வருகைக்கு நன்றி அனானி நண்பரே..
படத்தை நழுவ விட்டதில் வருத்தம் இருந்தாலும், இதில் அஜித்தி தவரு இல்லை. தயாரிப்பு தரப்பு தான் முழுக்க காரணம். நம்பிக்கையுடன் இருப்போம்; மீண்டும் அஜித்+கௌதம் இணைவார்கள்..
அஜித் தவற விட்டு சூர்யா நடித்த படங்கள் நந்தா, கஜினி, காக்க காக்க..
//அஜித் தவற விட்டு சூர்யா நடித்த படங்கள் நந்தா, கஜினி, காக்க காக்க..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 'vinoth gowtham'.
"ஜெமினி'- கூட அஜித் தவற விட்ட படம் தான்..
இந்த பதிவுக்கு ஓட்டு போட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. (நாமளும் தமிலிஷ்ல பாபுலருங்கோ...)
Post a Comment