த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

சந்த்ராயன்-1 விண்கலம் தனது ஏவப்பட்ட முதல் 75 நாட்களில் 40,000படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டை சேர்ந்த செயற்கோளும் இவ்வளவு படங்கள் அனுப்பியதில்லை என்பதால் புதிய சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன்-1 விண்கலம், நவம்பர் 8ம் தேதி நிலவின் 100 கி.மீ. சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

நவம்பர் 14ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து எம்ஐபி (Moon Impact Probe) துணைக் கலம் வீடியோ, ரேடார், ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவற்றுடன் நிலவில் தரையிறங்கியது.

தற்போது இது டெரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) மூலம் படங்களை எடுத்து பெங்களுரூக்கு அருகில் உள்ள பயாலலுவில் இருக்கும் இந்திய ஆழ் விண்வெளி மையத்துக்கு அனுப்பி வருகிறது. பின்னர் அங்கிருந்து இஸ்ரோவுக்கு அனுப்படுகிறது.

சந்த்ராயன்-1 சராசரியாக ஒரு நாளுக்கு 535 படங்கள் என, முதல் 75 நாட்களில் 40 ஆயிரம் படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டை சேர்ந்த செயற்கோளும் இவ்வளவு படங்கள் அனுப்பியதில்லை என்பதால் இது புதிய சாதனையாக இருக்கும் என இஸ்ரோ நம்புகிறது.

எம்ஐபி எடுத்த படங்களில் சில 5 மீட்டர் அளவுக்கு துல்லியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சந்த்ராயன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ 2012ல் சந்த்ராயன் 2 விண்கலனையும், 2020ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தயாரித்து வருகிறது. இது குறித்து சந்த்ராயன் திட்டக் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், 2015ல் பூமிக்கு மேல் 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இந்தியர் ஒருவரை கொண்ட விண்கலம் செலுத்தப்படும். நிலவுக்கு இந்தியர் ஒருவரை அனுப்புவதிலும் இஸ்ரோ ஆர்வமாக இருக்கிறது. அடுத்த கட்டம் இது தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

டிஸ்க்கி :
இந்த செய்தியை கேள்வி பட்ட வில்லு-விஜய், "நான் Flightல fight எல்லாம் போட கத்து வச்சிருக்கேன்; so நான் தானுங்கன்னா நிலவுக்கு போவேன்" என்று அடம்பிடிப்பத்கவும்; விஜயகாந்த் அவர்கள், "டேய் நான் தாண்ட கேப்டன், so எனக்கு தான் எல்லா rights இருக்கு' என்று கூறி சென்னையில் ஆர்ப்பட்டம் ஒன்றை அறிவித்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன...

நீங்க என்ன சொல்றீங்க...

4 comments:

பரவாயில்லை அப்படியாவது அவர்களை அனுப்பி வையுங்கள்

பரவாயில்லை அப்படியாவது அவர்களை அனுப்பி வையுங்கள்

தயவு செய்து அப்படியாவது ரெண்டு பேரையும் பூமியை விட்டு தூரமா அனுப்பி வையுங்க...

வாங்க iskon, Ramesh

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter