'சித்தரம் பேசுதடி', 'அஞ்சாதே' வெற்றிக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் மூன்றாவது படமான 'நந்தலாலா'விற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தை இயக்கியதோடு மனநலம் குன்றிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மிஷ்கின். 'கத்தாழ கண்ணால...' பாடல் புகழ் ஸ்னிக்தா சிறுவனின் தாயாக நடித்துள்ளார்.
அஸ்வத் ராம் என்ற சிறுவயது சிறுவனை படம் முழுவதும் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் மிஷ்கின். நடிகை ரோகிணியும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சிறப்புத்தோற்றத்தில் நாசர் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் டூப் போடாமலேயே நடித்துள்ளார் மிஷ்கின். அப்போது ஏற்பட்ட வலிக்கு இன்னமும் தைலம் தடவிக்கொண்டிருக்கிறாராம்.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் இதுவரை எந்த படத்திலும் இடம்பெறாத வகையில் மிக நீண்ட க்ளோசப் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. நிஜமான நரிக்குறவர்ளை படத்தில் நடிக்கவைத்துள்ளார் இயக்குனர். 'எலியே எலியே...' என்னும் பாடலை நரிக்குறவ பெண்ணை சரோஜா அம்மாள் உடுக்கை அடித்து சொந்தக்குரலில் பாடியுள்ளார்.
இளையராஜாவின் பின்னணி இசைக்காக ஹங்கேரியில் இருக்கும் புத்தாபெஸ்ட் இசைக்குழு கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். படத்தில் இடம்பெறும் சில வாகனங்களை மிஷ்கின் பிரத்யேகமாக வடிவமைத்து காட்சிகளுக்கு பயன்படுத்தியுள்ளார். லக்ஷ்யா என்னும் திரு நங்கையும் படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பரத நாட்டிய கலைஞரும் ஆவர். சில காட்சிகள் நிஜ மனநல காப்பகத்தில் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுக்கும் 40 நாட்கள் பயிற்சி கொடுத்த பிறகே படப்பிடிப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார் மிஷ்கின். க்ளைமாக்ஸ் காட்சிக்காக பிரமாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி பல நிமிடங்கள் ஸ்லோ மோஷனில் வருமாம்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இளையராஜா இசையில் மெலடி பாடல் ஒன்றை பாடியுள்ளார் ஜேசுதாஸ். படத்தின் காட்சிகள் படப்பிடிப்பு தளத்திலேயே எடிட் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஃபைனல் கட்டிரோ என்ற ஷாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மிஷ்கினின் முந்தைய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த மகேஷ் முத்துசுவாமி மூன்றாவது முறையாக மிஷ்கினுடன் இணைந்துள்ளார்
0 comments:
Post a Comment