உலக அளவில் 2008-ல் மோசமான அளவில் நஷ்டமடைந்த தொழிலதிபர்கள் பட்டியலில், இந்தியாவின் அனில் அம்பானி முதலிடத்தை வகிக்கிறார்.
2008-ல் மிக மோசமான அளவில் நஷ்டத்துக்கு ஆளான தொழிலதிபர்கள் பட்டியலை, "பில்லியனர் ப்ளோஅப்ஸ் ஆஃப் 2008' என்ற தலைப்பில் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவின் அனில் அம்பானி முதலிடத்தை வகிப்பது வியப்புக்குரிய அம்சம்.
உலகின் மிகுதியான லாபத்தை ஈட்டிய தொழிலதிபர்கள் பட்டியலில் இருந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே இந்த நிலையை அவர் எட்டியுள்ளார் என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.
அதாவது, ஒரே ஆண்டில் 42 பில்லியன் டாலர்களில் இருந்து 12 பில்லியன் டாலர்கள் என 2008-ல் 30 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார்.
இந்த நஷ்ட தொழிலதிபர்கள் பட்டியலில் அனிலின் சகோதரர் முகேஷ் அம்பானி, லஷ்மி மிட்டல் மற்றும் கே.பி.சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment