திருமங்கலம் இடைத் தேர்தலி்ல் அதிமுக தோல்வியுற்றதால், வெற்றி பெறும் என பந்தயம் கட்டிய அதிமுக பிரமுகர் ஒரு பக்க மீசையை எடுத்துள்ளார்.
விளாத்திகுளம் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் புவனேஸ்வரி. இவரது கணவர் முருகேசன். திமுக உறுப்பினராக உள்ளார். இவரிடம் அதிமுக பிரமுகர் பாலமுருகன் என்ற குரங்கு முருகன் என்பவர் திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்.
அப்படி இல்லாவிட்டால் எனது ஒரு பக்க மீசையை மழித்து கொள்கிறேன் என்று பந்தயம் கட்டினார்.
இந்நிலையில் திருமங்கலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஏற்கனவே சொன்னபடி, பாலமுருகன் விளாத்திகுளத்தில் உள்ள சலூனில் தனது ஒரு பக்க மீசையை மழித்துக் கொண்டார்.
//அதிமுக காரங்க மீசை வைத்திருப்பதும் ஒன்றுதான் வைக்காதிருப்பதும் ஒன்று தான். அம்மாவைக் கண்டதும் சகலதும் அடங்கி ஒண்ணுக்கு போறவங்களுக்கு மீசை எதற்கு??//
நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment