இது என்னோட கருத்து இல்ல சாமியோவ்..
ஓரு நணபர், தட்ஸ்தமிழ் டாட் காமில் வெளியான வில்லு விமர்சனத்திற்கு எழுதிய கருத்து இது...
உலக பொருளாதாரந் நெருக்கடித்தான் வில்லு படத் தோல்விக்கு காரணம்.
சமிபத்தில், வெளிவந்த வில்லு திரைப்படம்,நெஞ்சில் தில்லு இருபவர்கள் மட்டும்தான் பார்க்க முடியும் என்ற நிலையை எட்டியுள்ளது. இதற்க்கான காரணங்களை, காரியங்களை செய்வதே ..சீ அறிவதே இந்த பதிவின் நோக்கம்.இதை வில்லு பட விமரிசனம் என்று நினைத்துக்கொண்டால் மன்னிக்கவும். என்னால் மட்டுமல்ல உலகில் எவனாலும் அந்த படத்தை விமரிசிக்க முடியாது, ஏனென்றால் ஒரு படத்தை முழுமையாக பார்த்தவரே, அந்த படத்தை பற்றி விமரிசனம் செய்ய தகுதியுடையவர்; ஆனால், இந்த படத்தையோ ஒருவர் முழுமையாக பார்த்தால், நேரே சொர்கம் தான். விமரிசன்மெல்லாம் நஹி.
பிரபுதேவா ஒரு நல்ல டைருடக்குடருதான், ஆனால் பிரச்சனை கதையில்.அண்மைகாலமாகவே திரைகதையிலும், புதுவிதமான ஸ்டண்ட் காட்சிகளிலும் ஒரு வித மந்த நிலை ஹாலிவுட்டில் உருவாகியிருப்பதால், அதை பார்த்து காப்பியடிக்கும் தமிழ் சினிமாவும் அத்தகைய மந்த நிலைக்கு ஆட்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல் விஜய்கே உரிய கதைகளை படமாக எடுத்துக் கொண்டிருந்த் தெலுங்கு சினிமா உலகம் கூட இப்பொதெல்லாம் நல்ல படங்கள் எடுக்க முயற்ச்சித்துக் கொண்டிருப்பதால். விஜய்க்கு கதை கிடைப்பதில் ஒரு வித தேக்க நிலை உருவாகியுள்ளது. மஹேஷ் பாபுவும் இன்னும் அடுத்த படத்தை ரிலிஸ் செய்யவில்லை, பவன் கல்யாணும் தன் அண்ணன் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தில் பிஸியாகிவிட்டார்.பாவம் விஜய்.
அடுத்து, விஜய்க்கு கதை செய்ய கோலிவுட்டில் அதிக தகுதியும், அறிவும் உள்ளவரான பேரரசு இப்பொழுதெல்லம் அவர் எடுக்கும் படத்தில் கண்டிப்பாக ஒரு ஃபைட் சீன் கேட்பாதாலும், ஹீரோவை விட அதிக பஞ்ச் டைலாக் பேசுவாதாலும், முக்கியமாக தன் அடுத்த படத்திற்க்கு எந்த ஊரை பேராக வைக்கலாம் என்ற குழப்பத்தில் இருப்பதும் விஜைக்கு ஒரு பெரிய பின்னடைவு.
’அழகிய தமிழ் மகன்’, ‘குருவி’ என ஹாட்ரிக்க அடிக்க விஜய் முடிவு செய்துவிட்டபின் நயன்தாராவின் கவர்ச்சியால் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை என்பது நிதர்சனமான் உண்மை.
தமிழில் ஒரு ஜேம்ஸ்பாண்ட் முயற்ச்சி என்கிறார்கள், மேஜராக விஜய் வரும்போதே நமக்கு வயிறு வலியும் வந்துவிடுகிறது. கொஞ்ச நேரம் படம் பார்த்தால் தலைவலியும் சேர்ந்து வருகிறது.
மத்தத நீங்க கமெண்ட்ஸ்-ல சொல்லுங்க.....
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
13 comments:
//
அது மட்டுமில்லாமல் விஜய்கே உரிய கதைகளை படமாக எடுத்துக் கொண்டிருந்த் தெலுங்கு சினிமா உலகம் கூட இப்பொதெல்லாம் நல்ல படங்கள் எடுக்க முயற்ச்சித்துக் கொண்டிருப்பதால். விஜய்க்கு கதை கிடைப்பதில் ஒரு வித தேக்க நிலை உருவாகியுள்ளது.
//
இது தான் டாப்பு... இந்த படம் இந்தியிலிருந்து காப்பியாமே... முடியல...
வருகைக்கு நன்றி ஆளவந்தான்.
//இந்த படம் இந்தியிலிருந்து காப்பியாமே//
ஆமாங்க..தெலுங்குல மசால பட சரக்கு இப்ப கம்மியாம்; அதான் இந்தியில் வெளியான 'சோல்ஜர்' படத்தை ஆல்டர் செய்து விஜய்க்குப் சட்டையாகத் போட்டங்க.ஆனால் சட்டை சரியா பொருந்தல...
//
ஆமாங்க..இந்தியில் வெளியான 'சோல்ஜர்' படத்தை ஆல்டர் செய்து விஜய்க்குப் சட்டையாகத் தைத்திருக்கிறார்கள்.ஆனால் சட்டை சரியா பொருந்தல...
//
என்ன இப்பிடி சொல்லீட்டீஙக்.. ஹாலிவுட் தரத்தில் தமிழில் ஒரு சினிமா.. எனக்கு ரொம்ப பிடித்த படம் இது தான்.. இது எனக்கு 50வது ப்டமா இருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பேன்னு “மருத்துவர்” பேட்டி குடுத்திருந்தார்..
பேட்டியும் காமெடி தானா?
//பேட்டியும் காமெடி தானா?//
அவரோட பேட்டி பத்தி யாரும் பதிவு போடலனா, நானே பொட்டுடுவேன்... அவ்லோ மேட்டர் கீதுபா...
SUN, RAJ, VIJAY,JAYA, KALAIGNAR -என எல்லா சேனலிலும் விஜய், பிரபுதேவா இம்சை தாங்க முடியல சாமியோவ்...
ஹி ஹி ஹி...
டொப் டென் மூவீஸ் என்ன சொல்லுது ? :)
இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். இது முற்றிலும் தமிழனின் திரைப் படக் கல்லூரி மாணவர்களின் முயற்சி.
தமிழ் பாண்டு
//பவன் கல்யாணும் தன் அண்ணன் சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசத்தில் பிஸியாகிவிட்டார்.பாவம் விஜய்.
இதை வன்மையாக கண்டிக்கிறேன்!! விஜயும் இப்போது உண்ணாவிரதம் இருந்ததை உங்களுக்கு நினைவு படுத்தறேன்!!
//"உலக பொருளாதாரந் நெருக்கடித்தான் வில்லு படத் தோல்விக்கு காரணம்."//
ஆம் மக்கள் மனது பொருளாதார நெருக்கடி காரணமாக பலகீனமாக உள்ளது!!
அதனால் அவர்கள் ரிஸ்க் எடுப்பதில்லை! இந்த படத்தை "தில்" உள்ளவர்கள் மட்டுமே பார்கவேண்டும் என்று விளம்பரம் செய்வதால் தான் அவர்கள் போக வில்லை!! இந்த உண்மையை கூட கிண்டல் செய்யும் உங்களை மாதிரி ஆட்கள் உள்ளவரை எந்த "நல்ல" படமும் ஓடாது!!
//அவரோட பேட்டி பத்தி யாரும் பதிவு போடலனா, நானே பொட்டுடுவேன்... அவ்லோ மேட்டர் கீதுபா...
சிக்கிரம் போடு நைனா! (நானும் சில மேட்டர் நோட் பண்ணி வெச்சேன், நான் பதிவு போட லேட் ஆகும் போல இருக்கு!!)
வருகைக்கு நன்றி...
ஆளவந்தான்
எம்.ரிஷான் ஷெரீப்
SUREஷ்
Bhuvanesh
I don't watch movies without reading reviews. Unless recommended by some wise friends that this film has to be watched in a movie hall, I don't take any risk for commercial movies.
Saves my time, money and energy!
thalaivaa entha companyla work panreenga
pv_senthilnathan@yahoo.com
oru change ku dvd la padam pakalamnu partha... dvd blast achi anda alavuku kadi.... villu pdam peru matiri veluturusi....
Post a Comment