காங்கிரஸ் எம்பியாகிறார் ஷாரூக்?
வடக்கு மும்பை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நடிகர் ஷாரூக்கான் நிறுத்தப்படக் கூடும் என்று காங்கிரஸ் கட்சி சூசகமாக தெரிவித்துள்ளது.
இத்தொகுதியின் தற்போதைய எம்பி கோவிந்தா. இவர் மீது கட்சியில் அதிருப்தி நிலவுகிறது. அதேநேரம் மீண்டும் போட்டியிட கோவிந்தாவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கிருபா சங்கர் சிங் இவ்வாறு கூறியுள்ளார்-
ஷாரூக்கானை இந்தத் தொகுதியின் எம்பியாக்க விரும்புகிறோம். கட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு ஷாரூக்கானுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறோம்.
தேர்தலில் போட்டியிட ஷாரூக் கொண்டால் கோவிந்தாவுக்கு பதில் வடக்கு மும்பை தொகுதியில் அவருக்கு சீட் தரப்படும் என்றார்.
ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் ஆதரவாக செயல்பட்டு வருபவர் ஷாரூக்கான். தனிப்பட்ட முறையில் சோனியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமானவர்.
0 comments:
Post a Comment