ஆர்மோனியப் பெட்டியில் படுத்துறங்கும் பூனைக்குட்டி ஹாரிஸ் ஜெயராஜ். பாத்திரம் Harris கீழே விழுகிற சத்தம் கேட்டாலே பதறியடிக்கும் பூனை போல, சமீபகாலமாக சில விஷயங்களை பார்த்து பார்த்தே பதறிக் கொண்டிருக்கிறாராம். வேறொன்றுமில்லை, சினிமா தொழிலில் அரசியல்வாதிகளும் குதித்துவிட்டார்கள் அல்லவா? இவர்களின் பைனான்ஸ் தயவில் வளரும் படங்களுக்கு "ஹாரிசிடம் இசையமைக்க கேட்கலாமே?" என்ற ஐடியாவை போட்டுக் கொடுக்கிறார்களாம் சிலர். அவர்களும் சாவகாசமாக இசையமைப்பாளருக்கு போனை போட்டு, "தம்பி நம்ப ஊருதான். நீதான் மியூசிக் போடணும்னு ஒத்த காலிலே நிக்குது. கொஞ்சம் என்னான்னு பாருப்பா" என்கிறார்களாம் அசால்டாக!
சிலர் நேரடியாகவே ஸ்டுடியோ பக்கம் வந்து விடுகிறார்களாம்.
அவர்களை சமாதானப்படுத்தி அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறதாம் ஹாரிசுக்கு.
இப்படியே நிலைமை போனால், கம்போசிங்கிற்கு மட்டுமல்ல, முழு படத்திற்கும் வெளிநாட்டிலேயே 'டேரா' போட்டுவிடுவார் என்கிறார்கள் அவரது அருமை பெருமை தெரிந்தவர்கள். இப்படி மெல்லிசையில் மேளத்தை போட்டு அடிக்கிறீங்களே, நியாயமாய்யா...?
0 comments:
Post a Comment