நிதியை தவறாக கையாண்ட சர்ச்சை தொடர்பாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன தலைவர் ராமலிங்க ராஜூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது பதவி விலகலை அடுத்து ராம் மையாபதி சத்யம் நிறுவனத்தின் இடைக்கால செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமலிங்க ராஜூ சத்யம் நிர்வாகப் பதவியிலிருந்து விலகுவதாக அதன் போர்ட் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் இதுவரை சத்யம் நிறுவனத்திடம் கையிருப்பாக இருப்பதாகக் கூறப்பட்ட ரூ. 5,040 கோடி உண்மையில் கையிருப்பில் இல்லை என்றும், அது நிறுவனத்தின் கணக்கில் திரித்துக் காட்டப்பட்ட பணம் என்றும் ராமலிங்க ராஜூ ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சத்யம் நிறுவனம் ரூ. 2,700 கோடி கையிருப்பில் உள்ளதாகக் காட்டியது. ஆனால், உண்மையில் இருந்த பணம் ரூ. 2,112 கோடி தான். இந்த உண்மை போர்ட் உறுப்பினர்களுக்குக் கூட தெரியாது என்று கூறப்படுகிறது.
சத்யம் நிறுவன தலைவர் ராஜினாமா எதிரொலியால் சத்யம் பங்குகள் ரூபாய் 188-லிருந்து ரூபாய் 30-ஆக சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பங்கு விலைகளை ஏற்றுவதற்காக செயற்கையாக காட்டப்பட்ட இந்த முறைகேடான நடவடிக்கையே இன்று அந்த நிறுவனத்தின் கீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்துவிட்டது.
சத்யம் நிறுவனத்தின் இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பங்குச் சந்தையுமே கடும் சரிவை சந்தித்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 750 புள்ளிகள் சரிந்துள்ளது.
சத்யம் நிறுவனத் தலைவரின் இந்த மோசடி ஒட்டுமொத்த தகவல்தொழில்நுட்பத் துறையையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.வர்த்தக நிர்வாகம் குறித்து தங்களுக்கு தாங்களே பாராட்டிக் கொள்வதை கைவிட்டு கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பான பிக்கி கூறியுள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வர்த்தக நிர்வாகத்தில் உச்சபட்ச தரத்தைக் கையாண்டு வந்துள்ளது என்றும், தற்போது அந்த தரத்தை பின்பற்றாமல் சத்யம் நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தகவல்தொழில்நுட்ப நிறுகூனங்களின் அமைப்பான நாஸ்காம் கூறியுள்ளது.
சத்யம் நிறுவனத்தின் இந்த மோசடி என்ரான் நிறுவனத்தின் மோசடியைப் போன்றது என்றும் இதுகுறித்து செபி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தெரிவித்துள்ளது. சத்யம் நிறுவனத்தின் மோசடி காரணமாக இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்பு இல்லை என்றும் அது கூறியுள்ளது.
இதனிடையே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி குறித்து பெரும் மோசடிகள் விசாரணை அமைப்பு விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் பி.சி.குப்தா தெரிவித்துள்ளார்.
இதைன் காரணமாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ள ராமலிங்க ராஜூ கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி ; தினமலர் & நிகழ்வுகள்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
2 comments:
\\"சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சேர்மன் ராஜினாமா : மோசடி செய்ததாக ஒப்புதல்"\\
அடப்பாவி ...
வருகைக்கு நன்றி ஜமால்...
Post a Comment