த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...



சத்யம் நிறுவனத்தை ஐபிஎம் கம்ப்யூட்டர்ஸ் கையகப்படுத்துவதைத் தவிர்க்க, மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்டீஸை சத்யமுடன் இணைக்க வேண்டும் என ராமலிங்க ராஜு கூறியதாக தெரியவந்துள்ளது. சத்யம் முன்னாள் இயக்குநர்களில் ஒருவர்தான் இப்போது இந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த இரு நிறுவனங்களையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸுடன் இணைக்க தீவிரமாக முயன்றார் ராமலிங்க ராஜு. ஆனால் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க, ராஜு சில காரணங்களைக் கூறியுள்ளார். அதில் முக்கியமானது, சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஐபிஎம் முயன்று வருகிறது, என்பதாகும்.

"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள். சத்யம் நிறுவனம் கம்ப்யூட்டர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால்தானே ஐபிஎம் கையகப்படுத்தும்... அதுவே, ஐபிஎம்முக்குப் பிடிக்காத வேறு தொழில்களிலும் நம்முடைய கவனத்தைத் திருப்பினால், ஐபிஎம் நம் பக்கம் திரும்பாது. நிறுவனம் தப்பித்து விடும். எனவே மேடாஸை இணைப்பதில் தாமதமில்லாமல் செயல்பட வேண்டும்" என இயக்குநர் குழுவை வலியுறுத்தியுள்ளார் ராஜூ. இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.


உண்மையில் இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.

உண்மையில் ஐபிஎம் நிறுவனம் சத்யத்தைக் கையகப்படுத்த முயற்சித்ததா... இந்தக் கேள்விக்கு ஐபிஎம் தரப்பில் இதுவரை பதிலில்லை.

4 comments:

//
சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.
//

நம்புற மாதிரி இல்லையே...அக்கவுண்ட் புக்ஸ பல வருஷம் மோசடி செய்து வந்ததா ராஜூவே சொல்றாரு... ஆக, பிரச்சினையின் மூல காரணம் அவர்கள் செய்த மோசடி அல்லவா??

//
"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள்.
//

இதே காரணத்தினால் தான் இல்லாத பணத்தை இருப்பதாக கணக்கு காட்டி, செபி, முதலீட்டாளர்கள் என்று எல்லாரையும் ஏமாற்றினார்களா?

ஐ.பி.எம் கையகப்படுத்த முயற்சித்தது என்று நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்..ஆனால், மேடாஸ் பிரச்சினை தான் ஆரம்பம் என்று ராஜூவே சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது...பல வருடங்களாக செய்த மோசடி தான் இதற்கு காரணம்..

அதே போல ஐ.பி.எம். வந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் என்ற நல்ல எண்ணம் என்று ராஜூவை தேவதூதனாக ஆக்க முடியாது...செய்வதை எல்லாம் செய்துவிட்டு இப்பொழுது ஐ.பி.எம் மீது பழி போடுவது போல் இருக்கும்!

Why would IBM buy a company like Satyam. IBM has got very deep roots in India now. No idiot would over state his earnings and pay more tax, just to keep the share prices afloat. I think the issue is much much bigger than this. In my opinion Ramalinga Raju had gotten into a Political vortex and unable to come out.

Just see the haste with which the state CB-CID had acted to freeze the accounts of Satyam, before SEBI could put their eyes on the accounts. The AP police have got no idea on the magnitude of the crime done by Ramalinga Raju.

ராஜூ பணத்தை சுருட்டிட்டு,ஸ்டாககையும் வித்திட்டு பணம் இல்லன்னு சொல்லிட்டார்னு நெனக்கிறேன்

வருகைக்கு நன்றி குடுகுடுப்பையாரே..
இதைத்தான் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூட சொல்லுது..

http://thatstamil.oneindia.in/news/2009/01/20/business-new-york-times-says-sathyam-raju-siphoned.html

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter