1,05,000 டாலர் சம்பளம், சகல வசதிகளுடன் கூடிய உலகின் மிகச் சிறந்த வேலை உங்களுக்குக் காத்திருக்கிறது... இப்படி ஒரு விளம்பரம் இணையத் தளத்தில் வெளியானால், அடுத்து நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மவுஸும் கையுமாக உட்கார்ந்து விடுவீர்கள் அல்லவா...!.
நீங்கள் மட்டுமல்ல... கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் அப்படித்தான் செய்தார்கள், இரு தினங்களுக்கு முன். விளைவு, அந்த விளம்பரம் வெளியிட்ட வெப்சைட்டின் சர்வரே 'உட்கார்ந்துவிட்டது'... பார்வையாளர்களால் ஏற்பட்ட ட்ராபிக் தாங்காமல்.
குயின்ஸ்லாந்து மாகாண அரசு சமீபத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹாமில்டன் தீவின் பொறுப்பாளர் பதவிக்கு ஒரு விளம்பரத்தை வெளியிட்டது, வெப்சைட்டில்.
இந்த வேலைக்கு தேர்வாகும் நபருக்கு மாதச் சம்பளம் மட்டும் 1,05,000 டாலர்கள். ரூபாயில் என்றால் 5 கோடிக்கும் மேல். அப்படி என்ன வேலை என்கிறீர்களா... அந்த தீவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில் பல பணிகளை மேற்கொள்ள வேண்டும். தீவின் அறியப்படாத புதிய பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சிறப்புகள் பற்றித் தெரிந்து அதை பயணிகளுக்குச் சொல்ல வேண்டும்.இந்த தீவின் கடல் பிரதேசம் யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரியச் சிறப்பு மிக்க பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மட்டும் 1500 வகை அரிய மீன்கள் மற்றும் 4000 வகை கடல் உயிரிகள் உள்ளன. கடற்பசு எனப்படும் அரிய வகை உயிரினமும் இந்த கடல் பகுதியில் உள்ளது.
இவற்றைப் பற்றி தெளிவாக அறிந்து சுற்றுலாப் பயணிகளுக்குச் சொல்வதும், அந்தத் தீவின் மற்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள உள்ளூர் மக்களின் நட்பைப் பெறுவதும்தான் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் வேலை.
இந்த வேலைக்கான விளம்பரம் வெப்சைட்டில் வெளியான 60 நிமிடங்களுக்குள் உலகம் முழுவதிலும் 3 லட்சம் பேர் பார்வையிட்டு, விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டார்களாம். அதற்குமேல் டிராபிக் நெரிசல் தாங்காததால் வெப்சைட் செயலிழந்துவிட்டதாம்.
இதுகுறித்து குயின்ஸ்லாந்து சுற்றுலா மந்திரி டெஸ்லே பாய்ல் கூறுகையில், இந்த அளவு விண்ணப்பங்கள் வரும், வெப்சைட்டே ஜாம் ஆகி நின்றுவிடும் என்றெலலாம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் பொறுப்பான பதவி. கிட்டத்தட்ட அந்த தீவுக்கே கேர்டேக்கர் என்று சொல்ல வேண்டும்.
இப்போதைக்கு இந்த 3 லட்சம் விண்ணப்பங்களிலிருந்து 11 பேரை தேர்வு செய்யப்போகிறோம். குறிப்பிட்ட நாடு என்றில்லாமல், உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு இறுதி நேர்முகத் தேர்வு குயின்ஸ்லாந்தில் நடக்கும், என்றார்.
அந்த அதிர்ஷ்டசாலி யாரோ என்றுதானே பெருமூச்சு விடுகிறீர்கள்! அதைவிட முக்கியம், உலகம் முழுக்க எந்த அளவு வேலையின்மை நிலவுகிறது என்ற உண்மை!!.
நன்றி: தட்ஸ்தமிழ் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
1 comments:
5 கோடி அல்ல. 50 லட்சம்.
Post a Comment