அமீர்கான் நடித்து வெளிவரும் இந்தி 'கஜினி' இதுவரை மற்ற படங்கள் செய்யாத சாதனைகளை சந்திக்கிறது.
தமிழில் சக்கை போடு போட்ட 'கஜினி'யை இந்தியிலும் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அமீர்கான்-அசின் நடித்துள்ள இப்படம் நாளை வெளியாகிறது.
இதுவரை இந்திய படங்கள் செயதிராத சில சாதனைகளை இப்படம் படைக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்காக 1200 பிரிண்டுகள் போடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எந்த படத்திற்கும் இவ்வளவு பிரிண்டுகள் போட்டதில்லை.இந்திய சினிமாவில் எந்த படமும் எட்டிப் பிடிக்காத ரூ.100 கோடி என்ற வியாபார இலக்கையும் இந்தப் படம் எட்டியுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்பு 300 சிறப்பு காட்சிகள் நடத்தப்படுகிறது. இந்தி படங்களில் இத்தனை சிறப்பு காட்சிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. பட ரிலீசுக்கு முதல் நாள் இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதற்கு 30 சதவீதம் வரை டிக்கெட் விலையை சில மல்டிபிள்ஸ் தியேட்டர்கள் உயர்த்தி உள்ளன. இருந்தாலும் இந்த காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் உடனடியாக விற்று தீர்ந்துவிட்டன.
இந்த வருடத்தில் ஆரம்பத்தில் ரிலீசான 'தோஸ்தானா', 'சிங் இஸ் கிங்' படங்கள் சிறப்பு காட்சிகள் மூலம் முறையே ரூ.75 லட்சம், ரூ.50 லட்சத்தை வசூலித்திருக்கின்றன. இதை 'கஜினி' முறியடித்து ரூ.1 கோடிவரை வசூலிக்கும் என கூறப்படுகிறது.
வேறு எந்தப் படத்துக்கும் இத்தனை சிறப்புக் காட்சிகள் நடத்தப்படவில்லை. மேலும் இம்மாதிரியான காட்சிகள் பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், 'கஜினி' படத்தின் சிறப்பு காட்சிகள் சிறு நகரங்களிலும் நடத்தப்படுகிறது என்கிறார் மும்பை பன் சினிமாஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி விஷால் கபூர்.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment