த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

சூப்பர் ஸ்டார் தொடர்பான எத்தனையோ போஸ்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். பிறந்த நாள், பட ரிலீஸ், பட பூஜை, திருமண நாள் இப்படி பல தரப்பட்ட நாட்களுக்கு பலவிதமான போஸ்டர்களை நம் ரசிகர்கள் எழுப்புவர்.

ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.

அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?

சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.

இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.

போஸ்டர் கூறும் செய்தி என்ன?

“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.

இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”

தற்போது புரட்சி தலைவரைப் போல மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை கலாநிதி மாறனின் தயாரிப்பது என்ன ஒரு ஒற்றுமை…!! வாவ்….!!!! இதை கண்டுபிடித்து போஸ்டர் எழுப்பிய அந்த ரசிகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.


அதுமட்டுமா, அமரர் எம்.ஜி.யாருக்கு எப்படி என்றும் நினைவில் நிற்கும்படி ‘புரட்சி தலைவர்’ என்று ஒரு பெயர் அமைந்ததோ அதே போல தமிழகத்தில் நாளை அரசியல் புரட்சி ஏற்படுத்தப் போகும் சூப்பர் ஸ்டாருக்கும் இப்போதே ஒரு அருமையான பெயரை சூட்டியுள்ளனர் இந்த ரசிகர்கள்.

நன்றி : சுந்தர் ( http://onlysuperstar.com )

8 comments:

ஓஹ்! புரட்சி வீரன் ...

வீணாப்போனவங்களுக்கான வெட்டி பதிவு..

இன்னும் இத்தனை நாளுக்குத்தான் இப்படி சினிமா நடிகர்களுக்கு புரட்சி... அப்படின்னு பட்டம் கொடுத்து, அவனுங்க அரசியலுக்கு வந்தா நாடு பொன்னாடா மாறிடும்னு நம்பிட்டு திரிவீங்க?!?

அப்படி என்னங்க, அவனுங்க புரட்சி பண்ணிட்டாங்க?

வரலாற்று உண்மை என்னன்னா, அந்த காலத்திலேருந்து இந்த காலம் வரைக்கும் அரசியல்வாதிகளோ, அவரது புதல்வர்களோ கோடிக்கணக்கில் பணம் சம்பாரிச்சு வைச்சுருக்காங்கறது தான்!

This Post is only for Super Star Rajanikanth, Fan"s....!!!!

ssrk

என்னத்த சொல்றது,தமிழர்களின் ஹீரோ மோகத்தை

வருகைக்கு நன்றி குடுகுடுப்பையாரே...

/என்னத்த சொல்றது,தமிழர்களின் ஹீரோ மோகத்தை//

--தமிழ்ர் என்பதை விட இந்தியர்கள் அனைவருக்கும் இந்த ஹிரோ மோகம் உண்டு..(உதாரணம்; Rajini, kamal, vijay, ajith, mammooty, mohanlaal, siranjeevi, mahesh babu, jr NTR, raj kumar,Ganesh, Sharuk, Amir khan, Salmaaan, Abitabh)

MGR did not get amount to act the ENGAL THANGAM movie..he was acted this movie for DMK.

BUT,
Rajini gets more Crores to act this movie. he acts this movie for his family.

So,Please don't Compare

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter