பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட்டிலும் ஹீரோக்கள் சட்டையை கழற்றும் ஸ்டைல் பரவி வருகிறது.
இந்தி சினிமாவில் சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் சட்டையை கழற்றி தங்களது சிக்ஸ் பேக் உடல் கட்டை காட்டும் ஸ்டைல் பிரபலம். அதே பாணி இப்போது தமிழ் சினிமாவில் பரவி வருகிறது.
பொல்லாதவன் படத்துக்காக சிக்ஸ் பேக் உடல்கட்டை மாற்றிய தனுஷ், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழற்றி நடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா அதே போல நடித்தார்.
இப்போது அயன் படத்திலும் மேலாடை இல்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
சத்யம் படத்துக்காக சிக்ஸ் பேக் ஆன விஷால், இப்போது நடித்து வரும் தோரணையிலும் சட்டை அணியாமல் பாடல் காட்சிகளில் நடித்துள்ளார். அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய்யும் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவும் இது போல நடித்துள்ளனர்.
1977 படத்தில் சரத்குமாரும் தனது சிக்ஸ் பேக்கை காட்ட உள்ளார். :-0
இந்தி சினிமாவில் சட்டை அணியாமல் நடித்த நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருப்பதாக பாலிவுட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து ஆண் ரசிகர்களை கவரும் நம் நடிகர்கள், சட்டையை கழற்றி பெண் ரசிகைகளையும் கவர நினைக்கிறார்கள். அதனால்தான் இந்த ஸ்டைல் பரவி வருகிறதுÕ என்றார் இயக்குனர் ஒருவர்.
தமிழ் சினிமாவில் கிளாமர் என்ற வார்த்தையை இதுவரை ஹீரோயின்களுக்காக மட்டுமே பயன்படுத்திவந்தனர். இனி ஹீரோக்களிலும் கிளாமரை பார்க்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.
நன்றி : honey தமிழ்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment