மங்கு பொங்கல் தங்கு பொங்கல் என கிராமத்தில் சொலவடை சொல்வதுண்டு. தமிழ் சினிமாவை பொருத்தவரை இந்த பொங்கல் மங்கு பொங்கலாகவே அமைந்துள்ளது.
விழாக்காலங்களில் குறைவான படங்களே வெளியாவது தொடர்கதையாகி வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன் தீபாவளியாக இருந்தாலும் பொங்கல் விழாவாக இருந்தாலும் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவது வழக்கம். இதுவும் படிபடியாக குறைந்து 2006-ம் ஆண்டு முதல் அரை டஜனுக்கும் குறைவான படங்களே வெளியாகிவருகிறது. கடந்த் தீபாவளியன்றும் இப்படித்தான் சொற்ப படங்களே வெளியானது. இந்த பொங்கலுக்கும் இதே நிலைமைதான் நீடிக்கிறது.
இந்த பொங்கலுக்கு 'வில்லு', 'படிக்காதவன்', 'அ ஆ இ ஈ' 'காதல்னா சும்மா இல்ல ஆகிய நான்கு படங்களே வெளியாகியுள்ளது. ரிலீசாக தயார் நிலையில் உள்ள படங்களின் எண்ணிக்கையை கணக்குப் போட்டால் ஐம்பதை தாண்டும். சரி அந்த பட்டியலை கிடப்பில் போட்டுவிட்டு ரிலீசான படங்களின் விவரங்களை பார்ப்போம்.
'வில்லு' ஐங்கரன் இண்டர் நேஷனல் தயாரிப்பில் பிரபுதேவா இயக்கியுள்ள இப்படத்தில் நாயகன் விஜய், நாயகி நயன்தாரா. விஜய்க்கு இதில் இரட்டை வேடம். பாடல் காட்சிகளையும், சண்டைக்காட்சிகளையும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளாராம் பிரபுதேவா. நீர், நிலம், ஆகயம் என பஞ்சபூதங்களில் மூன்று பூதங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
'படிக்காதவன்'. தனுஷ்-தமன்னா நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். காமெடி, ஆக்ஷ்னும் கலந்து திரைக்கதையில் ஜாலி ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளாராம் இயக்குனர். காமெடியில் விவேக் கலக்குகிறாராம். ஒரு பாடல் காட்சியில் குள்ள அப்புவாக நடித்துள்ளார் தனுஷ்.
'அ ஆ இ ஈ' ஏவி.எம்.தயாரிக்க எஸ்.டி.சபா இயக்கியுள்ளார். தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற சந்தமாமா படத்தின் ரீ-மேக் இது. அக்கா தங்கையாக மோனிகாவும், சரண்யாவும் நடிக்க, கதாநாயகர்களாக நவ்தீப், அரவிந்த் ஆகாஷ் நடித்துள்ளனர். மோனிகாவின் தந்தையாக பிரபு நடித்துள்ளார்.
'காதல்னா சும்மா இல்ல'. ரவி கிருஷ்ணா - தேஜாஸ்ரீ நடித்துள்ள இப்படத்தை ஒற்றன் படத்தை இயக்கிய இளங்கண்ணன் இயக்கியுள்ளார். வித்யாசாகர் மணிசர்மா, E.S..மூர்த்தி ஆகிய மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
நன்றி ; சினிசௌத் டாட் காம்
0 comments:
Post a Comment