இந்தியாவில், "விப்ரோ' உட்பட ஐந்து நிறுவனங்கள் மற்றும் ஒரு தனி நபரை, தன் வர்த்தகத்திற்கு சரிப்படாதவர்கள் என்று, உலக வங்கி தடை செய்திருக்கிறது.சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மோசடி பெரிதாகப்படும் போது, இத்தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக உலக வங்கி தடை செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எண்ணிக்கை நூறாகும் என்ற பட்டியலும் வெளியாகியிருக்கிறது.உலக வங்கியின் நடைமுறைகளை மீறி அதன் வர்த்தகம் பெற வழிகளை மீறியது அல்லது அதன் பணியாளரைச் சரிக்கட்டி செயல்பட முயல்வது ஆகியவை குற்றங்கள். அதற்கு தண்டனையாக உலக வங்கி சேவை மற்றும் உதவிகள் முடக்கப்படும்.
"மெகா சாப்ட்' தடை அந்த விதிகளின் படி ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தடை செய்யப்பட்டதில் மற்றொரு ஐ.டி., நிறுவனமான "விப்ரோ' அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. விப்ரோக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், "மெகா சாப்ட்' என்ற சாப்ட்வேர் நிறுவனமும் இத்தடைப் பட்டியலில் அடங்கும். மற்ற நிறுவனங்கள் சிறியவை.இதில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதால், காலவரையற்ற தடை "மெகா சாப்ட்' மீது விதிக்கப்பட்டிருக்கிறது. "விப்ரோ டெக்னாலஜிஸ்' விஷயத்தில், "வங்கிப் பணியாளர்களுக்கு முறைகேடான சலுகை யை அளித்ததால்' என்று குற்றம் சாட்டப்பட்டு, நான்காண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஊழல் மற்ற முறைகேடுகள் வரவில்லை.இந்த தடை குறித்து உலகவங்கியிடம், "இது முரண்பட்ட தகவல், நாங்கள் ஏதும் விதிமீறல் செய்யவில்லை' என்ற விளக்கம் விப்ரோ சார்பில் தரப்பட்டிருக்கிது.
ஆனாலும், உலக வங்கி தன் தடையை அறிவித்திருக்கிறது. இத்தடை உத்தரவு குறித்து விப்ரோ அதிகாரிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் உலக வங்கி வர்த்தகம் வராது என்பதால், எங்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாது' என்றனர். அதே சமயத்தில் உலக வங்கித் தடை தகவலை "செபி'க்கும் "விப்ரோ டெக்னாலஜிஸ்' நிறுவனம் அனுப்பி விளக்கத்தை தந்திருக்கிறது.இம்மாதிரி உலக வங்கி விதித்த தடைகளில் அதிகம் சிக்கிய நிறுவனங்கள் பிரிட்டன் மற்றும் இந்தோனேசியாவில் உள்ளன. அதே போல அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் கணிசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment