பாலாவின் "நான் கடவுள்" தான் இன்றைய தேதியில் கோலிவுட்டின் பரபரப்பு, விறுவிறுப்பு, இன்னபிற.
ஆர்யா, பூஜா நடித்துள்ள இப்படத்தின் டிரெயிலரே மிரட்டி வந்துகொண்டிருக்கிறது.
இயக்குனர் பாலாவின் படைப்புகளில் இது ஒரு மைல்கல் ஆக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு!
தனது எண்ணப்படி மட்டுமே நடப்பேன் என்று பிடிவாதமாக இருக்காமல், ரசிகர்களுக்காகவும் ஒரு காரியத்தைச் செய்துள்ளாராம் பாலா.
அதாவது, 'நான் கடவுள்' படத்தில் அவர் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகளை எடுத்துள்ளார்.
ஒன்று... அவரது படைப்புக்கே உரிய அம்சமான சோகம், கொடூரம், ஷாக்..!
மற்றொன்று... ரசிகர்களின் மனதை ரொம்பவும் பாதிக்காத வகையில்..!
ஆரம்பத்தில் முதல் க்ளைமாக்ஸை இணைத்து வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த க்ளைமாக்ஸ்சை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் மட்டுமே இரண்டாவது க்ளைமாக்ஸுக்கு தாவப்படுமாம்!
நன்றி : நிகழ்வுகள் டாட் காம்
0 comments:
Post a Comment