கோலிவுட்டில் பழைய தமிழ்ப் படங்களை ரீமேக் செய்யும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட பத்து சூப்பர் ஹிட் பழைய படங்கள் ரீமேக் ஆக போகிறதாம். இந்த டிரென்ட் மிகவும் மோசமானது என்று பழம் பெரும் படைப்பாளிகள் வேதனைப்படுகின்றனராம்.
முன்பெல்லாம் இந்தி ஹிட், தெலுங்கு ஹிட், மலையாள ஹிட் படங்களை தமிழில் ரீமேக் செய்வார்கள். பலர் ஆங்கிலப் படங்களை பார்த்து காப்பி அடித்து படம் எடுத்ததும் உண்டு (இப்போதும் அது தொடர்கிறது).
இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்ப் படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்த டிரென்ட் ஆரம்பத்தில் லேசு பாசாக இருந்தது.
ஆனால் பில்லா படத்தின் ரீமேக்கும், நான் அவனில்லை ரீமேக்கும் ஹிட் ஆனதால் தற்போது ரீமேக் மோகம், சுனாமி அலைகளைப் போல கோலிவுட்டை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளது.
சுப்ரமணியபுரம் ஹிட்டைத் தொடர்ந்து அதே டைப்பிலான படங்கள் மீது தற்போது மோகம் திரும்பியுள்ளதாம். சிலர், பாலைவனச்சோலை படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போது முரட்டுக்காளை, நூற்றுக்கு நூறு, ஆகிய படங்கள் ரீமேக் ஆகி வருகின்றன.
இதைத் தொடர்ந்து ஜானி, மூன்று முகம் ஆகிய ரஜினி படங்கள் ரீமேக் ஆக காத்துள்ளன. சிவாஜி கணேசனின் புதிய பறவையும் ரீமேக் ஆகப் போகிறது. அதேபோல பலே பாண்டியாவையும் ரீமேக் செய்யவுள்ளனர்.
இயக்குநர்-நடிகர் மனோபாலா, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதேபோல கமல்ஹாசனின் சூப்பர் ஹிட் படமான கல்யாண ராமனையும் ரீமேக் செய்யப் போவதாக பேச்சு அடிபடுகிறது. சிகப்பு ரோஜாக்களும் இந்த ரீமேக் பட்டியலில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
இப்படி ஏற்கனவே வந்த படங்களை ரீமேக் செய்வது தமிழ் சினிமாவின் சுயத்திற்கு விழும் பெரும் அடியாகும் என சில மூத்த இயக்குநர்கள் கருத்து தெரிவித்துள்ளனராம்.
இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்கள் சுய சிந்தனையுடன், நல்ல படங்களைக் கொடுப்பதை விட்டு விட்டு இப்படி ரீமேக் மோகத்திற்கு பலியாவது தமிழ் சினிமாவுக்கும், அவர்களுக்கும் நல்லதல்ல என்கிறார்கள் இவர்கள்.
டிஸ்க்கி : ஏற்கனவே 100 க்கு 5 படங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. புதிதாய் வருபவர்கள் புது ஐடியாக்களோடு வராமல் பழைய கதையோடு வந்தால் கட்டாயம் தயாரிப்பாளருக்கு தலைமேல் துண்டுதான்.
நன்றி; தட்ஸ்தமிழ் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
3 comments:
சிவாஜி கணேசனின் புதிய பறவையும் ரீமேக் ஆகப் போகிறது. //
நெஜமாவா??
நான் நேத்துதான் பதிவு போட்டிருக்கேன் புதுசு ஒன்னு சீக்கிரம் போடனுமா?
//ஏற்கனவே 100 க்கு 5 படங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. புதிதாய் வருபவர்கள் புது ஐடியாக்களோடு வராமல் பழைய கதையோடு வந்தால் கட்டாயம் தயாரிப்பாளருக்கு தலைமேல் துண்டுதான்.
அந்த ஐந்தும் ரீமேக் படங்களாய் இருப்பது தான் பிரச்சனை!!
நான் அவன் இல்லை, பில்லா ஹிட் ஆனதால் இந்த கிராக்கி! சில ரீமேக் படங்கள் ஊத்தி கொண்டால் இந்த நிலை மாறிவிடும் என்று நினைக்கிறேன்!! மாற்ற படி சென்னை-28, மொழி, பூ, சுப்ரமணிய புறம், பருத்திவிரன்,கற்றது தமிழ், போன்ற படங்கள் வருவது கடந்த ரெண்டு ஆண்டுகளாக தான்! மாற்றம் வந்து கொண்டு இருக்கிறது என்று நினைக்கிறேன்!!
வந்ததுக்கு நன்றி நைனா...
குடுகுடுப்பை
Bhuvanesh
Post a Comment