த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label வர்த்தகம். Show all posts
Showing posts with label வர்த்தகம். Show all posts



சத்யம் நிறுவனத்தை ஐபிஎம் கம்ப்யூட்டர்ஸ் கையகப்படுத்துவதைத் தவிர்க்க, மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்டீஸை சத்யமுடன் இணைக்க வேண்டும் என ராமலிங்க ராஜு கூறியதாக தெரியவந்துள்ளது. சத்யம் முன்னாள் இயக்குநர்களில் ஒருவர்தான் இப்போது இந்த உண்மையை வெளியிட்டுள்ளார்.

சத்யம் நிறுவனத்தின் இன்றைய மோசமான நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டதே மேடாஸ் டீல்தான். மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் மற்றும் மேடாஸ் இன்ப்ரா நிறுவனங்களை ராஜுவின் மகன் தேஜா ராஜு கவனித்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த இரு நிறுவனங்களையும் சத்யம் கம்ப்யூட்டர்ஸுடன் இணைக்க தீவிரமாக முயன்றார் ராமலிங்க ராஜு. ஆனால் இயக்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது அவர்களை ஒப்புக் கொள்ள வைக்க, ராஜு சில காரணங்களைக் கூறியுள்ளார். அதில் முக்கியமானது, சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த, ஐபிஎம் முயன்று வருகிறது, என்பதாகும்.

"ஐபிஎம் கைக்கு சத்யம் போனால், அடுத்த கட்டமாக வேலை இழப்புகள் தொடர் கதையாகிவிடும். கிட்டத்தட்ட நிறுவனத்தின் பணியாளர்களில் 50 சதவீதத்தினரைக் குறைத்து விடுவார்கள். சத்யம் நிறுவனம் கம்ப்யூட்டர் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தினால்தானே ஐபிஎம் கையகப்படுத்தும்... அதுவே, ஐபிஎம்முக்குப் பிடிக்காத வேறு தொழில்களிலும் நம்முடைய கவனத்தைத் திருப்பினால், ஐபிஎம் நம் பக்கம் திரும்பாது. நிறுவனம் தப்பித்து விடும். எனவே மேடாஸை இணைப்பதில் தாமதமில்லாமல் செயல்பட வேண்டும்" என இயக்குநர் குழுவை வலியுறுத்தியுள்ளார் ராஜூ. இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.


உண்மையில் இதற்கு சில உறுப்பினர்கள் உடனடியாக சம்மதித்து கையெழுத்தும் போட்டார்களாம். ஆனால் பெரும்பாலேர் தங்களுக்கு இந்த டீலில் சந்தேகமிருப்பதாகத் தெரிவிக்க, அதுவே பின்னர் இத்தனை விவகாரங்களும் வெடிக்கக் காரணமாகியிருக்கிறது.

உண்மையில் ஐபிஎம் நிறுவனம் சத்யத்தைக் கையகப்படுத்த முயற்சித்ததா... இந்தக் கேள்விக்கு ஐபிஎம் தரப்பில் இதுவரை பதிலில்லை.

புதிய சிஇஓ


சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக விப்ரோவின் முன்னாள் துணைத் தலைவர் விவேக் பால் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவேக் பாலின் பெயர் இந்தப் பதவியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும், சத்யம் நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்துப தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

1999-2005 ஆண்டுகளில் விப்ரோவின் துணைத் தலைவராக இருந்தவர் விவேக் பால். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். விப்ரோ மெடிக்கல்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.

விப்ரோவிலிருந்து விலகி பின்னர், டிபிஜியில் இணைந்தார். சத்யம் - மேடாஸ் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, இவர்தான் ராமலிங்க ராஜூவுக்கு பதில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.அரசு நியமித்துள்ள சத்யம் இயக்குநர் குழுவின் சிஇஓ தேர்வுப் பட்டியலில் விவேக்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எம்பஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ராவ் பெயரும் சத்யம் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ராமலிங்கராஜு உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் நீட்டிப்பு

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்றைக்கே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜு சகோதரர்ளை செபி விசாரிக்கவும் ஹைதராபாத் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது.

ஜனவரி 12ம் தேதி ராமலிங்கராஜு, ராமராஜு, சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வட்லாமணி சீனவாஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு ஹைதராபாத் கோர்ட் தள்ளி வைத்தது.

ஜனவரி 23ம் தேதி வரை 3 பேரும் சிறைக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. மேலும், ராஜு உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி செபி தாக்கல் செய்துள்ள மனுவும் இன்றே விசாரணைக்கு வந்தது.

செபி விசாரணைக்கு அனுமதி மறுப்பு

முதலில் செபியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

செபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ராஜு நீதிமன்றக் காவலில்இருப்பதால் விசாரணை தாமதமாகிறது. எனவே அவரை விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் சார்பில் ஆஜரான வக்கீல் பரத் குமார், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து வருகிற 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் அதுவரை செபியை விசாரிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறி விட்டார்.

இதையடுத்து ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது, போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிக்க கோரி காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராமலிங்க ராஜுவின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிப்பது தொடர்பாக ஜனவரி 17ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து ஜனவரி 19ம் தேதி வரை ராமலிங்க ராஜுவின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.

மேலும் 3 புதிய இயக்குநர்கள்

இதற்கிடைய சத்யம் இயந்குநர்கள் குழுவில் மேலும் 3 புதிய இயக்குநர்களை நேற்று அரசு நிர்ணயித்துள்ளது.

சிஐஐயின் நிறுவனர் தருண் தாஸ், இந்திய தணிக்கை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிஎன் மனோகரன், எல்ஐசியின் சூர்யகாந்த் பாலகிருஷ்ண மைனாக் ஆகியோர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

சத்யத்தை மீட்க நிதியுதவிக்கு முன்வரும் நிறுவனங்கள்

தொடர்ந்து ஒரு வாரகாலமாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்தியாக கொடுத்துக் கொண்டிருந்த சத்யம் தரப்பிலிருந்து முதல்முறையாக ஒரு நல்ல செய்தி...

புதிய இயக்குநர்கள் நியமனத்தால் சற்று நம்பிக்கை பெற்ற நிதி நிறுவனங்கள் சில, சத்யத்தை நெருக்கடியிலிருந்து மீட்க நிதியுதவி தர முன்வந்திருக்கின்றன.

இதைவிட முக்கியமான செய்தி, சத்யம் நிறுவனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ரூ.1700 கோடி உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியத் துவங்கியிருப்பதுதான்.

சத்யம் இயக்குநர் குழுவுக்கு அரசு மேலும் 3 இயக்குநர்களை நியமித்ததைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப் போவதாக இல்லை என தற்காலிகமாக முடிவெடுத்துள்ளனர். இதுவே அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் கைவிட்டுப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சத்யம் நிறுவன பேங்கர்கள், மீண்டும் கணிசமான முதலீட்டை இறக்கத் தயாராகியுள்ளனர். ஆனால் இது சத்யம் நிறுவனத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல. அரசு அளித்துள்ள உறுதியினால்.

இன்னொருபக்கம், சத்யம் நிறுவனத்துக்கு, வரவேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று புதிய இயக்குநர்கள் குழு கணக்குப் பார்க்கத் துவங்கியுள்ளது.

இதுவரை, ரூ.1700 கோடி அந்நிறுவனத்துக்கு வரவேண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தத் தொகை கூடிய விரைவில் வந்துவிடும் என்றும், இதே போல இன்னும் பலகோடி ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் இயக்குநர் குழுவின் உறுப்பினர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.

'சத்யம் நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ள தொகை முழுவதுமாகக் கிடைத்தாலே போதும், எந்த நிதியுதவியும் அந்த நிறுவனத்துக்குத் தேவையில்லை. சத்யம் மூடப்பட்ட நிறுவனம் அல்ல. இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டின் பெரிய ஐடி நிறுவனம். எனவே நிதிப் பிரச்சினை விரைவில் தீரும் என்றே நம்புகிறேன்', என்றார் பரேக்.

'மைனாம்பதி ஓடவில்லை!!'

இந்நிலையில் சத்யம் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுவது குறித்து தீபக் பரேக்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், 'மைனாம்பதியும், சில மூத்த அதிகாரிகளும் வெளிநாடுகளில் உள்ள சத்யம் நிறுவன வாடிக்கையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் உள்ளனர். அவர்களில் பலரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் உள்ளனர், மைனாம்பதி உள்பட', என்றார் பரேக்.

நன்றி ; தட்ஸ்தமிழ் டாட் காம்

சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பினாமி வங்கிக் கணக்குகள் குறித்து வருமான வரித்துறை கடந்த 2002ம் ஆண்டிலேயே செபி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய மாநில அரசை எச்சரித்திருந்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

ஆனால், ராஜூவுக்கு நெருக்கமானவரான நாயுடு அதை அப்படியே கிடப்பில் போட்டார். அதே போல செபியும் இதை கண்டு கொள்ளவி்ல்லை.

கடந்த 2002ம் ஆண்டு துவக்கத்தில் சத்யம் நிறுவனத்தின் பல்வேறு கிளைகளில் ஹைதராபாதைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்ட் நடத்தினர்.

அப்போது ராமலிங்க ராஜூ தனது உறவினர்கள், நண்பர்கள் பெயரில் ஏராளமான வங்கிகளில் பல்வேறு கணக்குகளை வைத்திருந்தது தெரியவந்தது.அந்த கணக்குகளில் ரூ. 30 கோடியளவுக்கு நிதி இருந்தது. இந்தப் பணத்தை சத்யம் பங்குகளை சந்தையிலிருந்து அவ்வப்போது வாங்கவும் விற்கவும் ராஜூ பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.

இது செபியின் இன்சைடர் டிரேடிங் (insider-trading) வர்த்தக விதிகளுக்கு முரணானதாகும். இதையடுத்து இது குறித்து பங்கு வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபிக்கும், மாநில போலீசாருக்கும் வருமான வரித்துறை தகவல் தந்தது.

ஆனால், இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. அதே போல செபியும் இதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கு முக்கியக் காரணம் அப்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தான் என்று கூறப்படுகிறது. ராஜுவுக்கு மிக நெருக்கமாக இருந்த நாயுடு இந்த விசாரணைகளை முடக்கினார் என்று தெரிகிறது.

ரூ. 2,065 கோடி சுருட்டிய ராஜூ:

அதே போல சத்யம் நிறுவன வருவாய் மற்றும் லாபம் கணிசமாக உயர்ந்துவிட்டது என ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் பொய்யாகக் கூறி ரூ.2,065 கோடிகளை தனிப்பட்ட முறையில் சம்பாதித்துள்ளார் ராமலிங்க ராஜூ.

சத்யம் நிறுவனத்தின் பங்குகள் விலை உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தி காட்டி இருக்கிறார்.

நிறுவனம் நல்ல நிலையில் செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காக பல நிறுவனங்களை கையகப்படுத்தி உள்ளார். இப்படி ஒவ்வொரு முறை அவர் செய்யும் போதும் சத்யம் பங்குகள் விலை அதிக அளவில் உயர்ந்து வந்தன.

ஒவ்வொரு முறை பங்கு விலை உயரும் போதும் ராமலிங்க ராஜூ தனது பெயரிலும் குடும்பத்தினர் பெயரிலும் உள்ள பங்குகளை விற்றுள்ளார். இதன் மூலம் எக்கச்சக்க லாபம் கிடைத்துள்ளது.

2005ம் ஆண்டு 2 நிறுவனங்களை கையகப்படுத்தியதுடன், லாபம் அதிகமாக இருந்ததாக கணக்குக் காட்டி இருக்கிறார். அப்போது சத்யம் நிறுவன பங்கு 2 மடங்கு அதிகரித்தது. 2006ம் ஆண்டும் இதே போல செய்துள்ளார். அப்போதும் விலை ஏறியது சத்யம் பங்குகள் ரூ.726 வரை விற்றது. இந்த நேரத்தில் ராமலிங்கராஜூ தனது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் இருந்த 4.84 சதவீத பங்குகளை விற்றார். இதன் மூலம் மட்டும் அவருக்கு ரூ.1,126 கோடி கிடைத்தது.

இதே போல 2001ல் இருந்து 2008 வரை 14 சதவீத பங்குகளை விற்று மொத்தத்தில் ரூ.2,065 கோடி சம்பாதித்துள்ளார்.

தனது பெயரில் இருந்து பெரும் பகுதி பங்குகளை விற்று விட்டதால் கடந்த மார்ச் மாதம் முடிவில் 8.74 சதவீத பங்குகள் மட்டுமே அவர் கைவசம் இருந்தது.

இதன் மதிப்பு ரூ.2,400 கோடியாகும். 2001ம் ஆண்டுவாக்கில் ராமலிங்க ராஜூ மற்றும் அவரது குடும்பத்தினரிடம் 22.89 சதவீத பங்குகள் இருந்தன. அதாவது 7.19 கோடி பங்குகள் இவர்களிடம் இருந்தன. இதன் பெரும் பகுதியை கொஞ்சம், கொஞ்சமாக விற்று பணத்தை தங்கள் வசம் எடுத்து கொண்டனர்.

இந்த நேரத்தில் தான் நஷ்டத்தில் இயங்கி வந்த தனது குடும்ப நிறுவனம் மேடாஸ் (Satyam திருப்பிப் போட்டால் Maytas!!) இன்ப்ராவை சத்யம் நிறுவனத்தை வாங்க வைக்கும் முயற்சி நடந்தது.

ஆனால் பங்குதாரர்கள் இந்த அளவு எதிர்ப்பார்கள் என்று ராஜு எதிர்பார்க்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அது கைவிடப்பட்டது.

நன்றி : தட்ஸ்தமிழ் டாட் காம்

இந்தியாவில், "விப்ரோ' உட்பட ஐந்து நிறுவனங்கள் மற்றும் ஒரு தனி நபரை, தன் வர்த்தகத்திற்கு சரிப்படாதவர்கள் என்று, உலக வங்கி தடை செய்திருக்கிறது.சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் மோசடி பெரிதாகப்படும் போது, இத்தகவல் வெளியாகியிருக்கிறது. பொதுவாக, தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக உலக வங்கி தடை செய்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர் எண்ணிக்கை நூறாகும் என்ற பட்டியலும் வெளியாகியிருக்கிறது.உலக வங்கியின் நடைமுறைகளை மீறி அதன் வர்த்தகம் பெற வழிகளை மீறியது அல்லது அதன் பணியாளரைச் சரிக்கட்டி செயல்பட முயல்வது ஆகியவை குற்றங்கள். அதற்கு தண்டனையாக உலக வங்கி சேவை மற்றும் உதவிகள் முடக்கப்படும்.

"மெகா சாப்ட்' தடை அந்த விதிகளின் படி ஏற்கனவே சத்யம் கம்ப்யூட்டர்ஸ் தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது தடை செய்யப்பட்டதில் மற்றொரு ஐ.டி., நிறுவனமான "விப்ரோ' அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. விப்ரோக்கு அடுத்த நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், "மெகா சாப்ட்' என்ற சாப்ட்வேர் நிறுவனமும் இத்தடைப் பட்டியலில் அடங்கும். மற்ற நிறுவனங்கள் சிறியவை.இதில், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதால், காலவரையற்ற தடை "மெகா சாப்ட்' மீது விதிக்கப்பட்டிருக்கிறது. "விப்ரோ டெக்னாலஜிஸ்' விஷயத்தில், "வங்கிப் பணியாளர்களுக்கு முறைகேடான சலுகை யை அளித்ததால்' என்று குற்றம் சாட்டப்பட்டு, நான்காண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஊழல் மற்ற முறைகேடுகள் வரவில்லை.இந்த தடை குறித்து உலகவங்கியிடம், "இது முரண்பட்ட தகவல், நாங்கள் ஏதும் விதிமீறல் செய்யவில்லை' என்ற விளக்கம் விப்ரோ சார்பில் தரப்பட்டிருக்கிது.

ஆனாலும், உலக வங்கி தன் தடையை அறிவித்திருக்கிறது. இத்தடை உத்தரவு குறித்து விப்ரோ அதிகாரிகள் கூறுகையில், "எதிர்காலத்தில் உலக வங்கி வர்த்தகம் வராது என்பதால், எங்களுக்கு பாதிப்பு பெரிய அளவில் ஏற்படாது' என்றனர். அதே சமயத்தில் உலக வங்கித் தடை தகவலை "செபி'க்கும் "விப்ரோ டெக்னாலஜிஸ்' நிறுவனம் அனுப்பி விளக்கத்தை தந்திருக்கிறது.இம்மாதிரி உலக வங்கி விதித்த தடைகளில் அதிகம் சிக்கிய நிறுவனங்கள் பிரிட்டன் மற்றும் இந்தோனேசியாவில் உள்ளன. அதே போல அமெரிக்காவிலும் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் கணிசமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ. 1,641 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு வரவு-செலவு அறிக்கையை இன்போசிஸ் இன்று வெளியிட்டது. சந்தையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட இன்போசிஸ் வருவாயும் லாபமும் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இன்போசிஸ் வருமானம் 36 சதவீதம் உயர்ந்து ரூ. 5,429 கோடியாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 3,999 கோடியாக இருந்தது.

அதே போல லாபமும் ரூ. 1,641 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 1,231 கோடியாக இருந்தது. உலக அளவிலான பொருளாதாக மந்த நிலையிலும் கூட அதன் லாபம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த காலாண்டில் இன்போசிஸ் கூடுதலாக 30 கிளையன்டுகளை (ஆர்டர்கள்) பெற்றுள்ளது.

மேலும் 2,772 புதிய ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இன்போசிஸ், அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 1,03,078 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டுச் செல்வோர் எண்ணிக்கையும் இந்த காலாண்டில் பெருமளவில் குறைந்துவிட்டது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இன்று இன்போஸிஸ் பங்குகள் விறுவிறுப்பாக கைமாறத் தொடங்கின. ஒரே நேரத்தில் 19.75 லட்சம் பங்குகள் அதிகபட்சமாக தலா ரூ.1,218 வீதம் விற்பனையாகின. இது நேற்றைய விலையை விட 5.31 சதவீதம் அதிகமாகும்.

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter