த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts


ஆசினுக்கு மும்பையில் நண்பர்கள் இன்னும் சரியாக செட் ஆகவில்லை என்று தெரிகிறது. குறிப்பாக திரையுலகில் ஆசினுக்கு வேண்டப்பட்டவர்கள் ரொம்பக் குறைச்சல் என்று எண்ணத் தோன்றுகிறது அவரைப் பற்றி அங்கு ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு 'வாசனை'யான வதந்தியைப் பார்த்தால்.

முன்னணிக்கு வரும் ஹீரோயின் குறித்து திரையுலகில் வதந்திகள் கிளப்பப்படுவது சகஜமானதுதான். அது தமிழ் சினிமா என்று மட்டுமல்ல இந்திய சினிமா உலகம் முழுவதும் அது இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஆசின் குறித்து மும்பையில் ஒரு வதந்தியை கிளப்பி விட்டுள்ளனராம். அது, ஆசின் ஷூட்டிங் முடித்து விட்டு கழற்றிக் கொடுக்கும் உடைகளை காஸ்ட்யூம் டிசைனரிடம் கொடுக்க முடியவில்லையாம்.

காரணம், அதில் வியர்வை நாற்றம் மூக்கைத் துளைக்கிறதாம். இதனால் ஆசினுக்கான காஸ்ட்யூம்களை திரும்பி வாங்குவதற்கு காஸ்ட்யூம் டிசைனர்கள் பெரும் அவஸ்தைப்படுகிறார்களாம். (எப்படியெல்லாம் கெலப்புரங்காப்பா... )

ஆனால் இது சுத்தமான வதந்தி என்று நடுநிலையாளர்கள் கூறுகின்றனர். எந்தக் காலத்தில் இருந்து கொண்டு ஆசினைப் பற்றி இப்படிப் பேசுகிறார்கள் இவர்கள் என்கிறார்கள் இந்த நடுநிலையாளர்கள்.

ஆசின் முன்னணிக்கு வருவதைப் பிடிக்காதவர்களே இப்படி வதந்தியை கிளப்பி விடுவதாக ஆசின் தரப்பு புலம்புகிறதாம்.

முன்னணிக்கு வருவதற்குள் எத்தனையை சமாளிக்க வேண்டியிருக்கிறது, சகிக்க வேண்டியிருக்கு...

நன்றி: தட்ஸ்தமிழ்


நடிகர் விஜய்யின் பெயரையும், நடிகர் அஜித்தின் பெயரையும் இணைத்து விஜித் எனும் பெயரில் புதுமுக நாயகன் அறிமுகமாகும் படம் ராகவன்.

பிரான்சு நாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்த விஜித் நடிப்பின்மீது கொண்ட தீவிர ஆசையின் காரணமாக தான் பார்த்து வந்த பல லட்சம் ரூபாய் வேலையை உதறிவிட்டு கதாநாயகன் கனவோடு கோடாம்பாக்கத்தில் ராகவன் படத்தின் மூலம் அடியெடுத்து வைக்க உள்ளார்.

விஜித் ஜோடியாக ராதிகா மல் கோத்ரா எனும் மும்பையை சேர்ந்தவர் நடிக்கிறார். அகினா புரொடக்ஷன் என்னும் புதிய பேனரில் செல்வராஜ் என்பவரது தயாரிப்பில் செல்வராகவனின் அஸிஸ்டண்ட் பராந்தாமன் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின் கங்கைஅமரன் இசை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

கதைப்படி வழிப்பாட்டு தலங்களில் குண்டு வைக்க நினைக்கும் சமூக விரோத கும்பலை அடையாளம் காணும் ஹீரோ அவர்களை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தருகிறார் என்பது ராகவன் பட க்ளைமாக்ஸ்.

ஒளிப்பதிவு: கெவின் சுரோஷ். எடிட்டிங் : லெனின்.


டிஸ்க்கி:
1.IT வேலை போனா, இந்த மாதிரி ஒரு வழி இருக்க....

2.அப்படின்னா இவரோட டைட்டில் 'அல்டிமேட் தளபதி'யா? ???

3. ரகல் (ரஜினி+கமல்), தம்பு (தனிச்+சிம்பு) ---- இப்படி நெறைய பேர் கெலம்புவாங்க போல இருக்கே..


நன்றி: தினமலர்

சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறீர்கள்? வருமான வரித்துறையிடமிருந்து இடம்மாறி ஒரு நிருபரின் வாயிலிருந்து வந்த இந்த கேள்விக்கு வேறொருவராக இருந்தால் எரிமலையாகியிருப்பார். ஆனால் த்ரிஷா சொன்ன பதிலோ பொறுமையின் சிகரம்.

'சர்வம்' படத்தின் பாடல் வெளியீ்ட்டு விழா சென்னை சிட்டிடவரில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது. விழா முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த விஷ்ணுவர்தன் கூறியதாவது:-

" 'பில்லா' படத்தின் எந்த பாதிப்பும் இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். ஆர்யாவுக்கு இதற்கு முந்தைய படங்களில் ஏற்பட்டுள்ள இமேஜை உடைக்கும் வகையில் இதில் அழகாக காட்டியிருக்கிறேன். அதேபோல த்ரிஷாவும் ஃபிரஷ்ஷாக தெரிவார். ஆர்யாவும் த்ரிஷாவும் மிகப் பொருத்தமான ஜோடி என்பது என் கருத்து. இந்த படத்திற்கு பிறகு இந்த ஜோடி ரசிகர்களால் விரும்பப்படும். இது தவிர தெலுங்கில் ஜே.டி.சக்ரவர்த்தி, மலையாளத்திலிருந்து ப்ருதிவிராஜ் அண்ணன் இந்திரஜித் ஆகியோரையும் நடிக்க வைத்திருக்கிறேன். 8 வயது சிறுவன் ரோஹனும், ராட்வைலர் என்ற அபூர்வ குணம் கொண்ட நாயும் படத்தின் மிக முக்கியமான இடத்தை நிரப்புகிறார்கள். ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும். இதில் த்ரிஷா கிளாமராக நடித்திருப்பது உண்மை. அதில் அழகுணர்ச்சிதான் இருக்குமே தவிர ஆபாசமிருக்காது" என்றார்.

விஷ்ணுவர்தன் சொல்லி முடித்த நொடியில் முதல் பாராவில் இருந்த கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டார் ஒரு நிருபர். நடிகர், நடிகைகள் சிலர் தீவு வாங்கிப்போடுகிறார்களே உங்களுக்கு அந்த ஐடியா இல்லையா?

Trisha, Arya, Vishnuvardhan

"நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பேங்கில்தான் போடுகிறேன். தீவு வாங்கும் எண்ணம் எனக்கு வந்ததில்லை. ஆர்யாதான் பிஸினஸெல்லாம் பண்றார். நீங்கள் அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்" என கூலாக பதில் சொன்ன த்ரிஷாவின் சமயோஜிதத்தை நிருபர் கூட்டத்தில் அமர்ந்திருந்த அவரது அம்மா உமா ரொம்பவே ரசித்ததை நாமும் ரசித்தோம்.

ஐபிஎல் கிரிக்கெட்டின் பிராண்டட் அம்பாஸிடராக போக விருப்பமா? என எழுந்த ஒரு கேள்விக்கு " யாரும் என்னை அணுகவில்லை. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்தால் அதில் பங்கேற்பது எனக்கு பெருமைதான்" என பதிலளித்தார்.

விஜய் ரசிகர்கள் இணையதளம் மூடல்!

கண்ணா… பணம் ஜனம் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தா வீணா கஷ்டம்தான்!
-ரஜினிகாந்த்

கீழ்வரும் செய்தி சிலருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். எனினும் மீடியாவில் இன்று பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயமாக இதைப் பார்க்கவும்.

விஜய்க்கென்று அவரது ரசிகர்கள் இணைந்து விஜய்நெட்.காம் எனும் பெயரில் ஒரு இணையதளம் நடத்தி வந்தனர். முழுக்க முழுக்க ரசிகர்களின் தன்னார்வத்தில் நடத்தப்பட்டாலும், விஜய்யின் அதிகாரப்பூர்வ தளம் இதுதான் என்று கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன் இந்த தளம் திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, அதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தி (தட்ஸ்தமிழ்)!:

விஜய் ரசிகர்களின் இணையதளம் ‘ஷட் டவுன்’!!

அடுத்த சூப்பர் ஸ்டார் என பிரகடனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட விஜய்நெட்.காம் இணையதளத்தை, விஜய் ரசிகர்களே இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளனர்.

இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோடம்பாக்கம் இளம் ஹீரோக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரமாகவும் இது மாறியுள்ளது.

நடிகர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சொந்தமாக இணையதளம் நடத்துகிறார்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கலைஞானி கமல் தவிர!.

நடிகர் விக்ரம் பெரும் செலவு செய்து தனது தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அஜீத் உள்பட பல ரசிகர்களும் வளர்ந்து வரும் விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கமலுக்கென்று சில ரசிகர்கள் இணைய தளம் நடத்த முயன்று, பின்னர் அவரது பெரும் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டது தெரிந்திருக்கும். இப்போது அவரே மய்யம் என்ற தனது பத்திரிகையைத் தொடங்கப் போவதாகவும், அதை இணையதள வடிவிலும் தரப் போவதாகவும் கூறியிருந்தார். எதையும் தானே நேரடியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்ற ‘பர்ஃபெக்ஷன் உணர்வு’ காரணமாக அவரது அந்த முயற்சி தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் நிலையே வேறு. அவர் இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தாவிட்டாலும், அவருக்கென்று ஏகப்பட்ட இணையத் தளங்கள், வலைப்பூக்கள் நடத்தப்படுகின்றன.

விஜய்யின் அதிகாரப்பூர்வ இணையதளம்:

இந்த சூழ்நிலையில்தான் விஜய்க்கென்று அவரது ரசிகர்களைக் கொண்டு ஒரு அதிகாரப்பூர்வ இணைய தளம் அணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர். விஜய்நெட்.காம் (http://www.vijaynet.com/) எனும் பெயரில் சில இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த தளம், இப்போது உள்ளடி வேலைகள் சிலவற்றால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த உதவியும் செய்யாததாலும் விஜய்யின் ஸ்டில்கள், செய்திகளைக் கூட தர மறுப்பதாலுமே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் விஜய்நெட்.காம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஜய் தரப்பில் கருத்தறிய முயன்றபோது, ‘அப்புறமா பேசுங்க’ என்று கூறிவிட்டனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

விஜய்நெட்.காமில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள மூடல் அறிவிப்பு விவரம்:

அன்பு ரசிகர்களே,

விஜய் பேன்ஸ் நெட்வொர்க் எனும் இந்த தளத்தை மிகுந்த வருத்தத்துடன் இன்றோடு மூடுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே இதை மூடுகிறோம்.

ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள்.

எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணைய தளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது.

எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம். விஜய் படங்களை ரசிக்கும் சாதாரண ரசிகர்களாகத் தொடர்வோம். ஆனால் அதற்காக அவர் படங்களைக் கொண்டாட மாட்டோம். உலக அளவில் அவரது படங்களைத் தூக்கிவிடும் ப்ரமோஷனல் வேலைகளில் இனி ஈடுபட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இப்படிக்கு

விஜய்பேன்ஸ் நெட்வொர்க் நி்ர்வாகம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ஞானம்!

டிஸ்க்கி :



நன்றி: தட்ஸ்தமிழ்.காம் (ம) envazhi.com

சிம்பு நடிக்கப் போகும் அடுத்த படத்திற்கு கெட்டவன், நல்லவன், மோசமானவன் என்ற ரேஞ்சுக்குப் பெயர் வைக்காமல் விண்ணைத் தாண்டி வருவாயா என்று 'மிதவாத' பெயரை சூட்டியுள்ளனர்.



இது இன்னும் ஒரு காதல் கதை. இருப்பினும் வில்லங்கம் இல்லாத வித்தியாசமான காதலைக் காட்டவுள்ளனர்.

இப்படத்தின் விளம்பர டிசைன்கள் வெளியாகியுள்ளன. விளம்பரமே வித்தியாசமாகஇருக்கிறது. இருப்பினும் படத்தின் கலைஞர்கள் குறித்த விவரம் எதுவுமே அதில் இல்லை.

இப்படத்தில் சிம்புவுடன், திரிஷா இணைந்து நடிக்கிறார். இது மட்டும் விளம்பரத்தில் இடம் பெற்றுள்ளது.

இப்படத்தை அனேகமாக கெளதம் இயக்கலாம் என கருதப்படுகிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்.எஸ். இன்போடெய்ன்மென்ட் பிரைவேட் லிமிட்டெட் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

நன்றி: தட்ஸ்தமிழ் டாட் காம்

படத்துக்குப் படம் கெட்டப் மாற்றுவதில் ஆரம்ப காலத்திலேயே கமலுக்கு இணையான ஆர்வம் காட்டியவர் 'தல' அஜீத்.

சிட்டிசன், வரலாறு போன்ற படங்களில் அவரது வித்தியாசமான தோற்றம் 'அட' சொல்ல வைத்தது.

அதற்குப் பின் கொஞ்ச காலம் 'அஜீத்'தாகவே வந்து போன அஜீத்துக்கு மீண்டும் வித்தியாசமான கெட்டப்பில் வர ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது அவரது நண்பர் சரண் இயக்கும் 'அசல்' படத்தில்.

இந்தப் படத்துக்காக அருவா மீசையும் அசத்தல் லுக்குமாக வரப்போகிறாராம் அஜீத். விருமாண்டியில் கமல் வருவாரே அந்த மாதிரி. இந்தப் படத்தில் பிரபுவும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.

மார்ச்சில் படப்பிடிப்பு துவங்குகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்தப் படத்தின் மூலம் அஜீத் - சரண் கூட்டணி, மீண்டும் தங்களை ஒரு வசூல் கூட்டணி என நிரூபிக்க சகல முஸ்தீபுகளுடனும் களமிறங்குகிறது.



மார்ச்சிலேதான் படப்பிடிப்பு. ஆனால் இப்போதிலிருந்தே விருமாண்டி மீசையோடு திரிகிறார் அஜீத். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த மீசையை 'அசல்' படப்பிடிப்பு முடியும் வரை தொடர்வாராம் தல! (மேலதிக புகைப்படங்களுக்கு இங்கேசொடுக்கவும் )

இதற்கிடையில் சம்பளத்தை குறைக்க நடந்த பேச்சு வார்த்தையில் பெரும் வெற்றி. சுமார் இரண்டு கோடி வரை தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள சம்மதித்திருக்கிறார் அஜீத். காக்காய் உட்கார கள்ளு பானை உடைஞ்சு விழுந்த மாதிரி, இந்த சம்பளக் குறைப்புக்கு பிறகு ஒட்டு மொத்த தமிழ் சினிமா ஹீரோக்களும் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறார்களாம்.


நன்றி: தமிழ்சினிமா டாட் காம் () தட்ஸ்தமிழ் டாட் காம்

இதை சொல்லியது யாராக இருக்கும். உங்கள் மூளையை ரொம்ப கசக்க வேண்டாம்; எல்லாம் அவர் அப்பா கம் PRO Mr.S.A.C தான்.

சமிபத்தில் அவரது பேட்டி மாலைமலர் பத்திரிகையில் வெளியாகியது... இந்த செய்திக்கு (இணைக்கப்பட்டுள்ள பேப்பர் கட்டிங்கை பாருங்கள்) எந்த விளக்கமும் முன்னுரையும் தேவையில்லை. படிக்கும் போதே சிரிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.


டிஸ்க்கி:
1: எப்போ விஜயகாந்த் போல வில்லு படத்துல அவர் கொடி பறக்க விட்டாரோ.. எங்களுக்கு அப்பவே தெரியும்...
2: அரசியல் ஒரு சேவைனு சொல்லாம 'தொழில்'நு சொல்லி - உங்களை நீங்களே கேவல படுத்துறிங்க..
3. ரசிகர்கள் என்று சொல்வது கொச்சையா? (விஜய் fans கொஞ்சம் கவனிங்க..)


நீங்க சொல்ல வேண்டியத கமெண்ட்ஸ்'ல சொல்லிட்டு போங்க தல....


நன்றி : சிம்பிள் சுந்தர் (onlyrajini.com )

சிவாஜி புரடக்ஸன் தயாரிப்பில் அல்டிமேட் ஸ்டார் 'அஜித்' நடிப்பில் உருவாகும் 'அசல்' திரைப்படத்திாக, புதிய 'முறுக்கு-மீசை' வளர்க்கிறார் அஜித். அந்த கெட்-அப்பில் அஜீத்தின் புகைப்படங்கள் கீழே.. (இவை சத்யபாமா கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது...)























நன்றி: starajith.com

இது என்னப்பா புது கதை...??

தமிழ் பேசும் ‘ஸ்லம்டாக்’கில் நம்ப சிம்பு - ஹீரோ நடிகருக்கு குரல் (Dupping) கொடுக்க போறாராம்... அனில் கபூருக்கு எஸ்.பி.பி குரல் (Dupping) கொடுக்க போறாராம்...போலிஸ்காரன் இர்பான் கானுக்கு ராதாரவி குரல் (Dupping) கொடுக்க போறாராம்...

டேனி பாய்ல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறப்பாக இசை அமைத்ததற்காக ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்தது. அவருக்கு ஆஸ்கர் விருதும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை பால்கன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் நடராஜன் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்கிறார். தமிழில் ‘நானும் கோடீஸ்வரன்’ என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. ஹீரோ தேவ் படேலுக்கு சிம்புவும் அனில் கபூருக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியமும், இர்பான் கானுக்கு ராதாரவியும் டப்பிங் பேசியுள்ளனர். நானும் கோடீஸ்வரன் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது.

விரைவில் .....


















நீங்க சொல்ல நினைக்கிறதா கமெண்ஸ்ல சொல்லுங்க....



பிப்ரவரி 22 ம் தேதி நடைபெறவுள்ள 81 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒட்டி சற்று முன் அனைத்து பிரிவுகளிலும் பரிந்துரைப்புகள்(Nomination) வெளியிடப்பட்டுள்ளன.A.R.ரஹ்மான் சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Slumdog Millionaire படத்திற்காக சிறந்த இசையமைப்பு பிரிவின் கீழ் ஒரு முறையும், சிறந்த பாடல் பிரிவின் கீழ் இரண்டு பாடல்களுக்காக (இரண்டும் Slumdog Millionaire படத்திலிருந்து)இரு முறையும் என மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.Slumdog Millonaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,இயக்குனர்,ஒளிப்பதிவு,எடிட்டிங்,ஓலிப்பதிவு எடிட்டிங்,ஒலி இணைப்பு,திரைக்கதை என்ற பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமான ஸ்லம்டாக் மில்லியனர், உலக அளவில் பேசப்படும் திரைப்படமாக உருமாறி உள்ளது. மும்பை குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இளைஞன் ஒருவன் (டீ பாய்) கோன்பனேகா குரோர்பதி போன்ற டிவி பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி பல கட்டங்களைக் கடந்து கோடீஸ்வரன் ஆவதே கதை.

லண்டனைச் சேர்ந்த டேனி போய்லே என்பவர் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் அனில் கபூர், தேவ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த வாரத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இது ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டம் எனக் கூறப்பட்டது.

அதற்கேற்றவாறு தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் 3 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை (சைமன்), சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங் மற்றும சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் உள்பட மொத்தம் 10 பிரிவுகளில் இந்தத் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவின்போது ஸ்லம்டாக் மில்லியனருக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ”இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இறைவன் கருணையாலும், மக்களின் பிரார்த்தனையாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடந்துள்ளது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.



மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.

http://www.oscars.org/awards/81academyawards/nominees.html



நன்றி :

பொங்கலுக்கு ரிலீஸான `வில்லு' ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். (எல்லா டி.வி -லயும் பேட்டி கொடுத்து பாத்தாச்சி.. ஆனா தியட்டேர்ல கூட்டம் தான் காணோம்; அதான் அண்ணாத்த நேர theatreke போய் கூட்டம் சேக்கிறார் போல...)

முதல்கட்டமாக நேற்று அவர் கோவை சென்றார். ரசிகர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தார்கள்.கோவை கங்கா, கே.ஜி.காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்தார். அவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது:

நான் இதுவரை நடித்த படங்களில், முதல் 10 நாட்களில் அதிக வசூல் செய்த படம், `வில்லு'தான்.(அப்பா 'கில்லி' வசூல் எல்லாம் எந்த கணக்கு...) கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் இதுவரை என் முந்தைய படங்கள் செய்திராத வசூல் சாதனையை வில்லு செய்து இருக்கிறது.(அப்படி என்ன உலக சாதனை பண்ணிடுச்சு?? )

அதனால் அந்த தியேட்டர்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்திக்க தோன்றியது. இன்று கோவை வந்திருக்கிறேன். இதையடுத்து பொள்ளாச்சி, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கும் செல்வேன்.(உசார் மக்கா... உசாரு.... )

இந்த வெற்றியை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் முதல் படத்திலிருந்து இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வருகிறீர்கள். இந்த ஆதரவு எனக்கு எப்போதும் வேண்டும்.(நீங்க CM ஆகிரவரைக்கும்தானே..) உங்கள் மீது நான் வைத்திருக்கும் அன்பும் எப்போதும் மாறாது என்றார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: வில்லு படம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறப்படுகிறதே?

விஜய்: எல்லா படங்களுக்கும் இதுபோன்ற வதந்திகள் வரத்தான் செய்யும். அதை நாம் கண்டுக்கவே கூடாது. அதையும் தாண்டி ஜெயிக்கணும் என்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும். (இப்ப புரியுதா theatre விசிட்டோட நோக்கம் என்னன்னு...)

கேள்வி: அடுத்த படம் எப்போது?

பதில்: என் அடுத்த படம், வேட்டைக்காரன். ஏவிஎம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும். (அயன் போல இந்த படமும் AVM - சன்னிற்கு வித்துடுமன்னு கேட்டு சொல்லுங்க...)

நன்றி : thatstamil.com

“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!

சூப்பர் ஸ்டார் நாற்காலியை அடையாமல் விடமாட்டேன்…” என்று ஒரு காலத்தில் மனம் போனபடியெல்லாம் பேட்டி கொடுத்துகொண்டிருந்த அஜீத் இன்று அடக்கத்தின் சிகரமாய் காணப்படுகிறார். தேவையின்றி பத்திரிக்கைகளில் பேசுவதில்லை. யாருக்கும் சவால் விடுவதில்லை. தான் பாட்டுக்கு தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த மாற்றம் அவருள் எப்படி நிகழ்ந்தது?

இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.


அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.


சூப்பர் ஸ்டாரும் அஜீத்தை பரிவுடன் உபசரித்து, பில்லா ரீமேக்கிற்கு ஒப்புதலும் ஆசியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், “Living with Himalayan Masters” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். (திரையுலகில் சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலருக்கு ரஜினி இந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் தெரியுமா?)

பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.


மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.

வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)


அஜீத்தின் குழந்தையின் பெயர் அனுஷ்கா. பார்க்க அச்சு அசலாக அஜீத் போலவே இருக்கும் அந்த குட்டி தேவதைக்கு தற்போது ஒரு வயது நிரம்பி இரண்டாம் வயது ஆரம்பித்துவிட்டது.

இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.

திருவள்ளுவர் கூறுவது போல,

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல் - குறள்

பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”

சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: OnlyRajini.com (சிம்பிள்_சுந்தர்)

இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகப் போகும் நான் கடவுள் திரைப்படத்தை எதிர்க்க இப்பவே தயாராகி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிக கண்மணிகள்...

ஏற்கனவே சில இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளித்து ரிலீஸ் ஆகும் நான் கடவுளுகு புதிய பிரச்சினை ரெடி..

அஜித்துக்கும் நான் கடவுளுக்கும் உள்ள தொடர்பை பார்க்க ஒரு ஃப்ளாஸ்பேக் ...


2006 - ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது.. 'அஜித் - பாலா' காம்பினஷன் கோலிவுட் - இல் பரபரப்பாக பேசப்பட்டது... இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு , பரமசிவன் , திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்) . மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை.. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்..

இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது..


அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா.. ஹோடேலில் காத்திருந்த அஜித்திற்கு அதிர்ச்சி... பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிவாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து.. அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே காட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர்
பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார். (பணச்சிக்களில் மாண்டிகொண்டு பாடபிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்துள்ளார் அஜித் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ...)



லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட 'அஜித்'திற்கே இந்த நிலைமையா? என யோசித்த மற்ற நடிகர்கள் இதில் உடனடியாக 'நடிகர் சங்கம்' நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்; புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என அதன் தலைவர் அறிக்கை கொடுத்தார்; இதை பெரிய பிரச்சினையாக்க விரும்பாத அஜித் புகார் கொடுக்காமல் பிரச்சினைக்கு அப்போது முற்று புள்ளியிட்டார்..

இந்த காட்டுமிராண்டி தனத்தை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதனமாயினர்.. ஆனால் பாலா-வின் 'நான் கடவுள்' ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதனமாயினர் என்பதே உண்மை...



இப்போது 'நான் கடவுள்' ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge' எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்... என்ன மாதிரியான 'Revenge' என்பது போக போகத் தான் தெரியும்...


ஷக்தி சிதம்பரத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ராகவ லாரன்ஸின் நடிப்பி்ல் உருவாகி வரும் ராஜாதி ராஜா படத்தின் இசையமைப்பாளராகியுள்ளார் நடிகர் கருணாஸ்.

87ம் ஆண்டே மெட்ராஸுக்கு வந்து விட்டவர் கருணாஸ். வந்தவருக்கு இருந்த ஒரே கனவு, எப்படியாவது நல்ல இசையமைப்பாளராகி விட வேண்டும் என்பதே.

ஆனால் சினிமாவில் அதற்கான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இருந்தாலும் தடைக்கற்களை, படிக்கற்களாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருந்த கருணாஸ், அப்படியே பாப், கானா பாடல்களுக்கு களம் மாறினார்.

மேடைகளில் பாப், காணா பாடல்களைப் பாடி கலக்க ஆரம்பித்தார். இப்படியே கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாப், காணா, ஜிங்கிள்ஸ் உள்ளிட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் கருணாஸ்.

கருணாஸுக்கு இசையும் நன்கு வரும் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. காரணம், நந்தாவில் அவர் காட்டிய நடிப்புத் திறமை, அந்த அளவுக்கு கருணாஸின் இசை பரிமாணத்தை மறைத்து விட்டது.

நடிப்பில் முங்கிப் போய் விட்ட கருணாஸ், சமீபத்தில்தான் திண்டுக்கல் சாரதி மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.

ஆனால் ஷக்தி சிதம்பரம்தான், கருணாஸை, ஒரிஜினல் தளத்திற்குக் கூட்டிப் போயுள்ளார். ராஜாதி ராஜா படத்தின் இசையமைப்பாளராக கருணாஸை புக் செய்துள்ளார் ஷக்தி சிதம்பரம். தனது இசை நண்பரான பால்.ஜேவுடன் இணைந்து கருணாஸ் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்திற்கு முதலில் இசையமைப்பதாக இருந்தவர் தினா. தற்போது தினா நீக்கப்பட்டு விட்டார்.

இந்த புதிய வாய்ப்பு குறித்து கருணாஸ் கூறுகையில், இந்த வாய்ப்பை அளித்த ஷக்தி சாருக்கு முதலில் எனது நன்றிகள். இதை நான் எதிர்பார்க்கவில்லை.

3 பாடல்களை முடித்து விட்டேன். எனக்கும் பால்.ஜேக்கும் நல்ல நட்பும், தோழமையும் உண்டு. நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டுள்ளோம். எனவே இந்தப் புதிய பணி எங்களுக்கு சுமையாக இல்லை.

மயிலாப்பூரில்தான் எனது இசைக்கு பிள்ளையார் சுழி போட்டேன். அம்புஜம் மாமி என்பவர்தான் எனக்கு கர்நாடக இசை கற்றுக் கொடுத்தார் என்றார் கருணாஸ்.

கருணாஸும், பால்.ஜேவும் சேர்ந்து இசையுலகின் புதிய புயலைக் கிளப்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி : தட்ச்த்தோல் டாட் காம்

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    statistics

    Site Counter

    Free Counter