த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

விஜய் ரசிகர்கள் இணையதளம் மூடல்!

கண்ணா… பணம் ஜனம் இரண்டும் ஒரே இடத்தில் இருந்தா வீணா கஷ்டம்தான்!
-ரஜினிகாந்த்

கீழ்வரும் செய்தி சிலருக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கலாம். எனினும் மீடியாவில் இன்று பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயமாக இதைப் பார்க்கவும்.

விஜய்க்கென்று அவரது ரசிகர்கள் இணைந்து விஜய்நெட்.காம் எனும் பெயரில் ஒரு இணையதளம் நடத்தி வந்தனர். முழுக்க முழுக்க ரசிகர்களின் தன்னார்வத்தில் நடத்தப்பட்டாலும், விஜய்யின் அதிகாரப்பூர்வ தளம் இதுதான் என்று கூறப்பட்டது. சில தினங்களுக்கு முன் இந்த தளம் திடீரென்று மூடப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே, அதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியாகியுள்ள ஒரு செய்தி (தட்ஸ்தமிழ்)!:

விஜய் ரசிகர்களின் இணையதளம் ‘ஷட் டவுன்’!!

அடுத்த சூப்பர் ஸ்டார் என பிரகடனப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேராதரவுடன் தொடங்கப்பட்ட விஜய்நெட்.காம் இணையதளத்தை, விஜய் ரசிகர்களே இழுத்து மூடுவதாக அறிவித்துள்ளனர்.

இது விஜய்க்கு பெரும் அதிர்ச்சி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோடம்பாக்கம் இளம் ஹீரோக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் சமாச்சாரமாகவும் இது மாறியுள்ளது.

நடிகர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சொந்தமாக இணையதளம் நடத்துகிறார்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் கலைஞானி கமல் தவிர!.

நடிகர் விக்ரம் பெரும் செலவு செய்து தனது தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அஜீத் உள்பட பல ரசிகர்களும் வளர்ந்து வரும் விஞ்ஞான வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கமலுக்கென்று சில ரசிகர்கள் இணைய தளம் நடத்த முயன்று, பின்னர் அவரது பெரும் கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டது தெரிந்திருக்கும். இப்போது அவரே மய்யம் என்ற தனது பத்திரிகையைத் தொடங்கப் போவதாகவும், அதை இணையதள வடிவிலும் தரப் போவதாகவும் கூறியிருந்தார். எதையும் தானே நேரடியாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்ற ‘பர்ஃபெக்ஷன் உணர்வு’ காரணமாக அவரது அந்த முயற்சி தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

ரஜினியின் நிலையே வேறு. அவர் இதுபோன்ற முயற்சிகளை ஊக்கப்படுத்தாவிட்டாலும், அவருக்கென்று ஏகப்பட்ட இணையத் தளங்கள், வலைப்பூக்கள் நடத்தப்படுகின்றன.

விஜய்யின் அதிகாரப்பூர்வ இணையதளம்:

இந்த சூழ்நிலையில்தான் விஜய்க்கென்று அவரது ரசிகர்களைக் கொண்டு ஒரு அதிகாரப்பூர்வ இணைய தளம் அணைக்கும் முயற்சியில் இறங்கினார்கள் எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் அவருக்கு நெருக்கமான சிலர். விஜய்நெட்.காம் (http://www.vijaynet.com/) எனும் பெயரில் சில இளைஞர்களால் நடத்தப்பட்ட இந்த தளம், இப்போது உள்ளடி வேலைகள் சிலவற்றால் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த உதவியும் செய்யாததாலும் விஜய்யின் ஸ்டில்கள், செய்திகளைக் கூட தர மறுப்பதாலுமே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக அந்த அறிவிப்பில் விஜய்நெட்.காம் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விஜய் தரப்பில் கருத்தறிய முயன்றபோது, ‘அப்புறமா பேசுங்க’ என்று கூறிவிட்டனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

விஜய்நெட்.காமில் அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள மூடல் அறிவிப்பு விவரம்:

அன்பு ரசிகர்களே,

விஜய் பேன்ஸ் நெட்வொர்க் எனும் இந்த தளத்தை மிகுந்த வருத்தத்துடன் இன்றோடு மூடுகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை. தளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரனிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே இதை மூடுகிறோம்.

ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள்.

எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணைய தளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை.

இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது.

எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம். விஜய் படங்களை ரசிக்கும் சாதாரண ரசிகர்களாகத் தொடர்வோம். ஆனால் அதற்காக அவர் படங்களைக் கொண்டாட மாட்டோம். உலக அளவில் அவரது படங்களைத் தூக்கிவிடும் ப்ரமோஷனல் வேலைகளில் இனி ஈடுபட மாட்டோம். இதுவரை எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இப்படிக்கு

விஜய்பேன்ஸ் நெட்வொர்க் நி்ர்வாகம்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த ஞானம்!

டிஸ்க்கி :



நன்றி: தட்ஸ்தமிழ்.காம் (ம) envazhi.com

9 comments:

good job guys

romba late!!!!!!!!!

ithu romba late!!!

iniyavathu vijaya pathiyum avonoda appa pathiyum jananga purinchukattum. sivanoda padathul vijayda moonchiya thooo... kadavuloda thanathila irunthu manushangala paaka mudiyathu endu soluvanga athuvum kevalam intha pannadayoda moonchi. ini yarukahavum kodi pidikathinga yarume unga kooda varamatanga unga appa ammava thavira.ipavavathu ellarum purichukatum. ana sila thirunthatha jenmanga apdi onnu ilannu sollungal.

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

அதாவது ஸ்டில் கிடைக்காததுனால அறிவு வந்திடுச்சாமா !!! கொடுமைடா சாமி. திரும்ப ஓப்பன் ஆகுதாம். இப்ப லேட்டஸ்ட் அப்படி தான் காம்பிக்குது. அந்த சைட் போய் பாருங்க. இவனுங்க அறிவு பத்து நிமிஷம் தான்

Thamizhana Thavitukka da pethanga ? Aal aaalluku 2011 il allaporumnu solrenga ?

good job guys
romba late!!!!!!!!!

http://pnaptamil.blogspot.com/2009/02/blog-post_5396.html

http://pnaptamill.blogspot.com

Ithu Romba Romba Late

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter