த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

எட்டு ரூபாய் விற்க வேண்டிய தண்ணீர் பாட்டிலை, 15 ரூபாய்க்கு விற்றால், தட்டிக்கேட்பீர்களா? நுகர்வோர் கோர்ட்டுக்கு போவீர்களா?மாட்டடீர்கள் தானே; "ஆமா, அப்படியே போனாத்தான் நியாயம் கிடைத்து விடப்போகுது...' என்று மட்டும் தானே அலுத்துக்கொள்வீர்கள்.இப்படித்தான் பலரும் நினைத்து, சும்மா "பொருமலுடன்' இருந்து விடுகின்றனர். ஆனால், இதோ இவரை பாருங்கள்; பெட்டிக்கடையில் வாங்கிய வாட்டர் பாட்டில் கொள்ளை விலையை தட்டிக்கேட்கப்போய், அவமானப்பட்டாலும், துல்லியமாக "பிளான்' பண்ணி, கடைசியில் வெற்றியும் பெற்று, 50 ஆயிரம் இழப்பீடும் பெற்றுள்ளார்.பெங்களூரு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியா; வயது 79. கமர்ஷியல் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினார். பிரபல கம்பெனியின் தண்ணீர் பாட்டிலை தந்த கடைக்காரர் 15 ரூபாய் தரும்படி கேட்டார்.

"நான் எட்டு ரூபாய் தந்து தானே வாங்குவேன்; இப்ப 15 ரூபாய் தரச்சொல்றீங்களே' என்று கேட்டுள்ளார் பெரியவர்.கடைக்காரரோ," அதெல்லாம் எனக்கு தெரியாது. 15 ரூபாய் கொடுங்க; இல்லாட்டி வைத்துவிட்டுப்போங்க' என்றார்.அப்படியும் சமாதானம் அடையவில்லை சுப்ரமணியா. "சார், என் நேரத்தை வீணாக்காதீங்க. வாங்கினா வாங்குங்க. உங்களுக்கு சந்தேகம் வந்தா, கம்பெனி அதிகாரிங்க போன் நம்பரை தாரேன்; போன் பண்ணி பேசிக்குங்க' என்று கூறினார்.தண்ணீர் பாட்டிலை 15 ரூபாய் தந்து வாங்கிக்கொண்ட சுப்ரமணியா, அந்த பாட்டில் தண்ணீரை குடிக்கவில்லை; பாட்டிலை பத்திரப்படுத்திக்கொண்டார்.

கடைக்காரர் கொடுத்த போன் நம்பரில் கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், அவர்களோ,"எங்களுக்கு எதுவும் தெரியாது; நீங்கள் கம்பெனிக்கு எழுதி கேட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி விட்டனர்.கம்பெனி வெப்சைட்டை கண்டுபிடித்து, அதில் தொடர்ந்து தன் குறையை சொல்லி "இ-மெயில்' செய்தபடி இருந்தார். நாலைந்து மெயில்களுக்கு பதில் இல்லை. அதையெல்லாம் அப்படியே நகல் எடுத்து , பதிவும் செய்து கொண்டார்.போனார் நுகர்வோர் கோர்ட்டுக்கு. கோர்ட்டில் இருந்து கம்பெனிக்கு பறந்தது நோட்டீஸ். அப்போது தான் அலறியது அந்த பிரபல கம்பெனி. "அந்த பாட்டில், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விற்க வேண்டிய பாட்டில். அதனால், அதன் விலை 15 ரூபாய் தான்' என்று பதில் அளித்தது.அடுத்த கேள்வியை போட்டது நுகர்வோர் கோர்ட்." அப்படியானால், ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு போக வேண்டிய தண்ணீர் பாட்டில், தெருக்கடையில் விற்கபட்டது எப்படி?' என்று கேட்டதும் அதிர்ந்தது கம்பெனி.எக்குதப்பாக சிக்கிக்கொண்ட கம்பெனிக்கு 50 ஆயிரம் அபராதம் போட்டது நுகர்வோர் கோர்ட். ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டிலுக்கு இரு வேறு விலை வைக்கப்பட்டது சரியல்ல.

நட்சத்திர ஓட்டலில் விற்கப்பட வேண்டுமானால், அந்த பாட்டிலை, தெருக்கடையில் விற்பனை செய்தது தவறு என்று கூறியது.நுகர்வோர் கோர்ட் நீதிபதி சித்தன் கவுடு கூறுகையில், "இழப்பீட்டில் 40 ஆயிரத்தை நுகர்வோர் கோர்ட்டுக்கு செலுத்த வேண்டும்; 10 ஆயிரத்தை மனுதாரர் சுப்ரமணியாவுக்கு அளிக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்தார்.
நன்றி: தினமலர்


0 comments:

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter