நடிகர் விஜய்யின் பெயரையும், நடிகர் அஜித்தின் பெயரையும் இணைத்து விஜித் எனும் பெயரில் புதுமுக நாயகன் அறிமுகமாகும் படம் ராகவன்.
பிரான்சு நாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்த விஜித் நடிப்பின்மீது கொண்ட தீவிர ஆசையின் காரணமாக தான் பார்த்து வந்த பல லட்சம் ரூபாய் வேலையை உதறிவிட்டு கதாநாயகன் கனவோடு கோடாம்பாக்கத்தில் ராகவன் படத்தின் மூலம் அடியெடுத்து வைக்க உள்ளார்.
விஜித் ஜோடியாக ராதிகா மல் கோத்ரா எனும் மும்பையை சேர்ந்தவர் நடிக்கிறார். அகினா புரொடக்ஷன் என்னும் புதிய பேனரில் செல்வராஜ் என்பவரது தயாரிப்பில் செல்வராகவனின் அஸிஸ்டண்ட் பராந்தாமன் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பின் கங்கைஅமரன் இசை அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
கதைப்படி வழிப்பாட்டு தலங்களில் குண்டு வைக்க நினைக்கும் சமூக விரோத கும்பலை அடையாளம் காணும் ஹீரோ அவர்களை எவ்வாறு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தருகிறார் என்பது ராகவன் பட க்ளைமாக்ஸ்.
ஒளிப்பதிவு: கெவின் சுரோஷ். எடிட்டிங் : லெனின்.
டிஸ்க்கி:
1.IT வேலை போனா, இந்த மாதிரி ஒரு வழி இருக்க....
2.அப்படின்னா இவரோட டைட்டில் 'அல்டிமேட் தளபதி'யா? ???
3. ரகல் (ரஜினி+கமல்), தம்பு (தனிச்+சிம்பு) ---- இப்படி நெறைய பேர் கெலம்புவாங்க போல இருக்கே..
நன்றி: தினமலர்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
2 comments:
\\பிரான்சு நாட்டில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்த விஜித் நடிப்பின்மீது கொண்ட தீவிர ஆசையின் காரணமாக தான் பார்த்து வந்த பல லட்சம் ரூபாய் வேலையை உதறிவிட்டு கதாநாயகன் கனவோடு கோடாம்பாக்கத்தில் ராகவன் படத்தின் மூலம் அடியெடுத்து வைக்க உள்ளார்.\\
Lay off ஆகியிருப்பார் :-)
//ரகல் (ரஜினி+கமல்)//
or கஜினி
Post a Comment