சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறீர்கள்? வருமான வரித்துறையிடமிருந்து இடம்மாறி ஒரு நிருபரின் வாயிலிருந்து வந்த இந்த கேள்விக்கு வேறொருவராக இருந்தால் எரிமலையாகியிருப்பார். ஆனால் த்ரிஷா சொன்ன பதிலோ பொறுமையின் சிகரம்.
'சர்வம்' படத்தின் பாடல் வெளியீ்ட்டு விழா சென்னை சிட்டிடவரில் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் நடந்தது. விழா முடிந்ததும் நிருபர்களைச் சந்தித்த விஷ்ணுவர்தன் கூறியதாவது:-
" 'பில்லா' படத்தின் எந்த பாதிப்பும் இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். ஆர்யாவுக்கு இதற்கு முந்தைய படங்களில் ஏற்பட்டுள்ள இமேஜை உடைக்கும் வகையில் இதில் அழகாக காட்டியிருக்கிறேன். அதேபோல த்ரிஷாவும் ஃபிரஷ்ஷாக தெரிவார். ஆர்யாவும் த்ரிஷாவும் மிகப் பொருத்தமான ஜோடி என்பது என் கருத்து. இந்த படத்திற்கு பிறகு இந்த ஜோடி ரசிகர்களால் விரும்பப்படும். இது தவிர தெலுங்கில் ஜே.டி.சக்ரவர்த்தி, மலையாளத்திலிருந்து ப்ருதிவிராஜ் அண்ணன் இந்திரஜித் ஆகியோரையும் நடிக்க வைத்திருக்கிறேன். 8 வயது சிறுவன் ரோஹனும், ராட்வைலர் என்ற அபூர்வ குணம் கொண்ட நாயும் படத்தின் மிக முக்கியமான இடத்தை நிரப்புகிறார்கள். ஒளிப்பதிவு ஹாலிவுட் தரத்திற்கு இருக்கும். இதில் த்ரிஷா கிளாமராக நடித்திருப்பது உண்மை. அதில் அழகுணர்ச்சிதான் இருக்குமே தவிர ஆபாசமிருக்காது" என்றார்.
விஷ்ணுவர்தன் சொல்லி முடித்த நொடியில் முதல் பாராவில் இருந்த கேள்வியை த்ரிஷாவிடம் கேட்டார் ஒரு நிருபர். நடிகர், நடிகைகள் சிலர் தீவு வாங்கிப்போடுகிறார்களே உங்களுக்கு அந்த ஐடியா இல்லையா?
"நான் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் பேங்கில்தான் போடுகிறேன். தீவு வாங்கும் எண்ணம் எனக்கு வந்ததில்லை. ஆர்யாதான் பிஸினஸெல்லாம் பண்றார். நீங்கள் அவரிடம் இந்த கேள்வியை கேளுங்கள்" என கூலாக பதில் சொன்ன த்ரிஷாவின் சமயோஜிதத்தை நிருபர் கூட்டத்தில் அமர்ந்திருந்த அவரது அம்மா உமா ரொம்பவே ரசித்ததை நாமும் ரசித்தோம்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் பிராண்டட் அம்பாஸிடராக போக விருப்பமா? என எழுந்த ஒரு கேள்விக்கு " யாரும் என்னை அணுகவில்லை. ஒருவேளை அந்த வாய்ப்பு கிடைத்தால் அதில் பங்கேற்பது எனக்கு பெருமைதான்" என பதிலளித்தார்.
2 comments:
Thrisha is brilliant and good person.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்
Post a Comment