நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.
உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?
உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.
உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".
உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".
உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".
உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".
உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".
உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".
உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".
உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".
உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".
உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".
உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".
உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".
உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".
உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".
******************************************************************
அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.
நன்றி : தமிழன்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
எட்டு ரூபாய் விற்க வேண்டிய தண்ணீர் பாட்டிலை, 15 ரூபாய்க்கு விற்றால், தட்டிக்கேட்பீர்களா? நுகர்வோர் கோர்ட்டுக்கு போவீர்களா?மாட்டடீர்கள் தானே; "ஆமா, அப்படியே போனாத்தான் நியாயம் கிடைத்து விடப்போகுது...' என்று மட்டும் தானே அலுத்துக்கொள்வீர்கள்.இப்படித்தான் பலரும் நினைத்து, சும்மா "பொருமலுடன்' இருந்து விடுகின்றனர். ஆனால், இதோ இவரை பாருங்கள்; பெட்டிக்கடையில் வாங்கிய வாட்டர் பாட்டில் கொள்ளை விலையை தட்டிக்கேட்கப்போய், அவமானப்பட்டாலும், துல்லியமாக "பிளான்' பண்ணி, கடைசியில் வெற்றியும் பெற்று, 50 ஆயிரம் இழப்பீடும் பெற்றுள்ளார்.பெங்களூரு நகரை சேர்ந்தவர் சுப்ரமணியா; வயது 79. கமர்ஷியல் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கினார். பிரபல கம்பெனியின் தண்ணீர் பாட்டிலை தந்த கடைக்காரர் 15 ரூபாய் தரும்படி கேட்டார்.
கடைக்காரர் கொடுத்த போன் நம்பரில் கம்பெனி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால், அவர்களோ,"எங்களுக்கு எதுவும் தெரியாது; நீங்கள் கம்பெனிக்கு எழுதி கேட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி விட்டனர்.கம்பெனி வெப்சைட்டை கண்டுபிடித்து, அதில் தொடர்ந்து தன் குறையை சொல்லி "இ-மெயில்' செய்தபடி இருந்தார். நாலைந்து மெயில்களுக்கு பதில் இல்லை. அதையெல்லாம் அப்படியே நகல் எடுத்து , பதிவும் செய்து கொண்டார்.போனார் நுகர்வோர் கோர்ட்டுக்கு. கோர்ட்டில் இருந்து கம்பெனிக்கு பறந்தது நோட்டீஸ். அப்போது தான் அலறியது அந்த பிரபல கம்பெனி. "அந்த பாட்டில், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் விற்க வேண்டிய பாட்டில். அதனால், அதன் விலை 15 ரூபாய் தான்' என்று பதில் அளித்தது.அடுத்த கேள்வியை போட்டது நுகர்வோர் கோர்ட்." அப்படியானால், ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு போக வேண்டிய தண்ணீர் பாட்டில், தெருக்கடையில் விற்கபட்டது எப்படி?' என்று கேட்டதும் அதிர்ந்தது கம்பெனி.எக்குதப்பாக சிக்கிக்கொண்ட கம்பெனிக்கு 50 ஆயிரம் அபராதம் போட்டது நுகர்வோர் கோர்ட். ஒரே மாதிரியான தண்ணீர் பாட்டிலுக்கு இரு வேறு விலை வைக்கப்பட்டது சரியல்ல.
நட்சத்திர ஓட்டலில் விற்கப்பட வேண்டுமானால், அந்த பாட்டிலை, தெருக்கடையில் விற்பனை செய்தது தவறு என்று கூறியது.நுகர்வோர் கோர்ட் நீதிபதி சித்தன் கவுடு கூறுகையில், "இழப்பீட்டில் 40 ஆயிரத்தை நுகர்வோர் கோர்ட்டுக்கு செலுத்த வேண்டும்; 10 ஆயிரத்தை மனுதாரர் சுப்ரமணியாவுக்கு அளிக்க வேண்டும்' என்று தீர்ப்பு அளித்தார்.
நன்றி: தினமலர்
கூகிள் இந்தியா நிறுவனம் தங்களது இன்டர்நெட் பஸ் சுவையை தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இன்டெர்நெட்டின் தேவை மற்றும் சேவைகளை அது அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்கிறது...
இந்த பஸ் தமிழ்நாட்டின் 15 நகரங்களை சுற்றி வர இருக்கிறது... தகவல் தொடர்பு, செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் கல்வி ஆகியவற்றை மையமாக கொண்டு இந்த பஸ் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்க உள்ளது..
இந்த பஸ் இன்று சென்னையில் அதன் பயணத்தை தொடங்குகிறது; அதன் பயண அட்டவணை கீழே....
05 பிப்ரவரி வேலூர்
06 பிப்ரவரி கிருஷ்ணகிரி
07 பிப்ரவரி சேலம்
11 பிப்ரவரி ஈரோடு
12 பிப்ரவரி திருப்பூர்
14 பிப்ரவரி கோவை
18 பிப்ரவரி திண்டுக்கல்
19 பிப்ரவரி மதுரை
23 பிப்ரவரி திருநெல்வேலி
25 பிப்ரவரி நாகர்கோவில்
27 பிப்ரவரி தூத்துக்குடி
02 மார்ச் புதுக்கோட்டை
03 மார்ச் திருச்சி
06 மார்ச் தஞ்சாவூர்
08 மார்ச் கும்பக்கோணம்
10 மார்ச் நெய்வேலி
12 மார்ச் கடலூர்
13 மார்ச் திருவண்ணாமலை
இந்த திட்டத்தின் மூலமாக மக்களுக்கு இணையத்தின் பயண்களையும், அது வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுனையாக இருக்க முடியும் என்பதையும் எடுத்துச்சொல்ல முடியும். இந்தியாவில் பல்வேறு நகருக்கு இந்த பேருந்து பயணிக்கப்போவதாக கூகிள் அறிவித்துள்ளது.
இந்த அட்டகாச பஸ்-இன் புகைப்படங்கள் கீழே...
இந்த இன்டர்நெட் பஸ் சேவை பற்றிய வீடியோ கீழே....
கூகிளின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். இந்த திட்டத்தின் பக்கத்தினை பார்க்கவும்

"தமிழ்நாடு ஹீரோ வாங்க' என தன்னை காங்.,தலைவர் சோனியா அழைத்தது பெருமையாக இருந்தது என வீர தீர செயலுக்காக டில்லி குடியரசு தின விழாவில் விருது பெற்ற தமிழக சிறுவன் மருதுபாண்டி தெரிவித்தார். திண்டுக்கல் தோமையார்புரம் கிழக்கு காலனியை சேர்ந்த முருகேசன் மகன் மருதுபாண்டியன். 8ம் வகுப்பு மாணவரான இவர், கடந்த ஆண்டு ஜூன் 26 அன்று காலை தனது ஒன்றரை வயது தங்கை ரேவதிக்கு ரயில் செல்வதை வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார்.
காலை 7.45 மணியவில் மதுரையிலிருந்து சென்ற வைகை எக்ஸ்பிரஸ், மருதுபாண்டி வீடு இருந்த பகுதியை கடந்து சென்றது. கடைசி பெட்டி சென்றவுடன் 3 அடி நீளத்திற்கு தண்டவாளம் பெயர்ந்து தூக்கி வீசப்பட்டது. அருகில் உள்ள ரயில்வே கேட்டிற்கு சென்று தகவல் கூறி விட்டு சிறுவன் திரும்பிய போது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட மருதுபாண்டி தனது தங்கையின் சிவப்பு கவுனை கொடிபோல் காட்டி ரயிலை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தை தவிர்க்க உதவிய சிறுவன் மருதுபாண்டி அகில இந்திய அளவில் வழங்கப்படும் வீர தீர செயலுக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதை பெற, ஜன., 16 ல் டில்லிக்கு பெற்றோர் மற்றும் தங்கையுடன் சென்றார்.டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய அமைச்சர்கள் அந்தோணி,ரேணுகா சவுத்திரி,டில்லி கவர்னர் ஆகியோர் இவர்களை பாராட்டி பரிசு வழங்கி விருந்தளித்துள்ளனர். காங்., தலைவர் சோனியாவை சந்தித்த போது,"தமிழ்நாடு ஹீரோ வாங்க' என்று தமிழிலேயே மருதுபாண்டியை அழைத்துள்ளார்.தொடர்ந்து துணை ஜனாதிபதி அன்சாரி பதக்கம் மற்றும் சான்றிதழை அளித்துள்ளார். விருது பெற்ற பின் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலை சந்தித்து சிறுவர்கள் அனைவரும் வாழ்த்துபெற்றுள்ளனர்.குடியரசு தின விழா அணிவகுப்பை காண விருது பெற்ற சிறுவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
டில்லி அனுபவம் குறித்து மருதுபாண்டி கூறியதாவது: காங்., தலைவர் சோனியா என்னை "தமிழ்நாடு ஹீரோ வாங்க' என்று அழைத்தது பெருமையாக இருந்தது. பல தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி. தமிழகத்தில் இருந்து சென்ற ஆண்டு யாரும் இந்த விருதுக்கு தேர்வாகவில்லை என தெரிவித்தனர். குளிர் கடுமையாக இருந்தது. ரயில்வே அமைச்சர் லல்லுபிரசாத்தை சந்திக்காதது தான் வருத்தம். சிறுவயதிலேயே பொதுநலத்தோடு செயல்பட்டால் எனக்கு கிடைத்தது போல் அங்கீகாரம் அனைவருக்கும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி ; தினமலர்

அன்றைய பொங்கல் தினம் திரு.ராமகிருஷ்ணன் (சென்னை - IIT முன்னால் மாணவர்) அவர்களுக்கு வித்தியாசமாய் அமைந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் கிராமம் - வறண்ட தமிழகபகுதிகளில் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு ஆண்டுக்கு அதிக பட்சம் ஒன்பது நாட்கள் மட்டுமே மழை பெய்யுமாம்.
ஆனால் இன்று, திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் தீவிர முயற்சியால் இக்கிராமத்தில் உள்ள முன்று குளங்களில் சுமார் ஏழு மில்லியன் லிட்டர் தண்ணீர் உள்ளது.
இக்கிராமத்துடனான இவரது உறவு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டது. இன்று இக்கிராம மக்கள் இவரை தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கின்றனர்.
டிசம்பரில் சென்னையில் நடைப்பெற்ற IIT கான்பிரன்சிற்க்கு வந்த முன்னால் IIT மாணவர்கள் அனைவரயும் இக்கிரமாத்திர்க்கு வரவழைத்து அவர்ககளுக்கு பொதுச்சேவை செய்ய ஒரு உந்துதலை ஏற்படுத்தியுள்ளார்.
டிராபிக்கில் மாட்டினால் கட்ட வேண்டிய கட்டணம் - ஒரு தொகுப்பு
LIST OF TRAFFIC OFFENCES, SECTION OF LAW AND FINE AMOUNT
Government Order No.HTD/44/TMA/2000 Dated 03.07.2000.
| SL NO. | TRAFFIC OFFENCES | SECTION OF LAW | FINE AMOUNT |
| 01. | Dangerous Drive | M.V.Act 184 | Rs.300-00 |
| 02. | Over Speeding | M.V.Act 183 | Rs.300-00 |
| 03. | Over Load | M.V.Act 113 | Rs.100-00 |
| 04. | Drunken Drive | M.V.Act 185 | Court Fine |
| 05. | Refuse to Go For Hire | 16 Class (P) | Rs.200-00 |
| 06. | Demanding Excess Fare | 16 Class (J) | Rs.200-00 |
| 07. | Defective Fare Meter | 16 Class (K) | Rs.100-00 |
| 08. | Defective Silencer | 16 Class 120 | Rs.100-00 |
| 09. | Emitting Black Somke | 190 Class (2) | Rs.300-00 |
| 10. | Shrill Horn | 190 Class (2) | Rs.100-00 |
| 11. | Without Permit | 190 Class 192 | Court Fine |
| 12. | Without Driving License | 190 Class 3/1 | Rs.300-00 |
| 13. | Jumping Traffic Signal | 190 Class 119 | Rs.100-00 |
| 14. | Wrong Parking | 190 Class 117 | Rs.100-00 |
| 15. | Cutting Yellow Lane/Lane Discipline | 190 Class 119 | Rs.100-00 |
| 16. | Defective Number Plate | 190 Class 50 | Rs.100-00 |
| 17. | No Entry | 190 Class 115 | Rs.100-00 |
| 18. | H.T.V. Prohibited | 115 R/w 177 | Rs.100-00 |
| 19. | Without Uniform | 14 R/w 177 | Rs.100-00 |
| 20. | Without I.C | 14 R/w 106 | Rs.500-00 |
| 21. | Without F.C | 14 R/w 56 | Court Fine |
| 22. | Defective Head Light | 14 R/w 106 | Rs.100-00 |
| 23. | Without Tail Light | 14 R/w 250 | Rs.100-00 |
| 24. | Footboard Traveling | 94 Class (2) | Rs.100-00 |
| 25. | Gents Traveling Ladies Seat in BMTC Bus | 94 Class (4) | Rs.100-00 |
| 26. | Using Mobile Phone while Driving | ----- | Rs.100-00 |
| 27. | Driving without wearing Seat Belt | ----- | Rs.100-00 |
KARNATAKA POLICE ACT & KARNATAKA TRAFFIC ACT
| 01. | Footpath Vendor | 92 (G) | Court Fine |
| 02. | Stray Cattle | 92 (e) | Court Fine |
| 03. | No Entry for Cycle | 92 (b) | Court Fine |
| 04. | without Light for Cycle | 92 (a) | Court Fine |
| 05. | Jay Walker | Rule 6, 18 K.T.C.Act | Court Fine |
மூலம் : http://125.17.140.50/trafic_spot_fines.htm
“Have you been to states before” ?
“No, Haven’t yet”. (எங்க..நமக்கு தெரிஞ்ச ஸ்டேட்ஸ் பெங்களூர், கேரளா அப்பறம் ஆந்திராதான்)
“Any other country” ?
“No”.
“What are you man, You have enough experience..Should have been to onsite atleast once”
“yeah…I could have been… But…”
-இந்த மாதிரி ஐடி இண்டஸ்ட்ரில ஒரு நாளைக்கு ஒரு ஒம்பது பேராவது ஒம்பது எடத்துல பேசிட்டு இருப்பாங்க..
“அல்மோஸ்ட் என்னோட பிரண்ட்ஸ், பேட்ஜ் மேட்ஸ் எல்லாரும் ஆன்சைட்ல இருக்காங்க? நமகெங்க….எழவு அதுக்கெல்லாம் நேரங்காலம் வரணுங்க”ன்னு முக்குக்கு மூணு பேராவது மூக்கால அழுதுட்ருப்பாங்க..
“ஏங்க…. நம்ப தம்பி இப்போ போறேன், அப்போ போறேன்னு சொல்லிகிட்டே இருக்காப்ல ஆனா ஒன்னும் போற மாறியே தெரியலையே, நம்ப அனந்தன் பையன் அமெரிக்கால இருக்கான், சகுந்தலா பொண்ணு சௌதில இருக்கான்னு”……!!!!
-சாயங்காலம் காப்பிய குடிச்சிட்டே வீட்டுக்கு வந்த ஒரம்பறை அளபறைய குடுத்திட்டிருப்பாங்க…
ஆன்சைட் - மென்பொருள் துறையினரின் வாழ்வில் தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான, அத்யாவசியமான ஒரு வார்த்தை.
சரி ஆன்சைட்னா என்னாங்க?
ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா.. வெள்ளக்காரன் தான் நமக்கெல்லாம் படி அளக்கற சாமி, அவனுக்கு ஒரு வேலை ஆகனும்னா…இந்த மாதிரி இந்த மாதிரி வேலை ஆகனும்னு அவன் டெண்டர் மாதிரி விடுவான். உடனே நம்மூர்ல இருக்கற கம்பெனி எல்லாம் வழக்கம் போல அடிச்சு புடிச்சு “எனக்கு செய்னு, எனக்கு மோதரம்னு” மன்னன் படத்துல ரஜினி கௌண்டமணி மாதிரி கெடைக்கற பீஸ் ஆப் ப்ரொஜெக்ட வெச்சுகிட்டு ஒரு வழியா புது ப்ராஜெக்ட்டுக்கு பூஜைய போட்ருவாங்க…. அது 20 பேரு செஞ்சு முடிக்கற வேலையா இருந்தா மொதல்ல ஒரு ரெண்டு பேர அந்த நாட்டுக்கு அனுப்பி அவனுக்கு என்னென்ன வேணும்னு பக்கத்துலையே இருந்து விசாரிச்சிட்டு அங்கிருந்துட்டே நம்மூர்ல இருக்கற ஒரு 8 பேர் கிட்ட வேலைய (உயிரை) வாங்கற process தான் Onsite-Offshore co-ordination.
இந்த ரெண்டு க்ரூப்க்கும் மாமியார் மருமக மாதிரி எப்பவுமே ஏழாம் பொருத்தம்தான். இவன கேட்டா அவன் ஓபி அடிக்கறாம்பான், அவன கேட்டா இவன் ஓபி அடிக்கறாம்பான் கடைசி வரைக்கும் சித்தி சீரியல்ல வர்ற சாரதா, பிரபாவதி மாதிரி பொகஞ்சுகிட்டே இருப்பாங்க..
இப்ப அந்த வெளிநாடு போற ரெண்டு பேரு யாருங்கறதுதான் இங்க மேட்டர்…
அப்படி போறதுனால என்னங்க…
நல்லா கேட்டிங்க….
** இங்க அஞ்சு மாசம் சம்பாதிக்கறத அங்க ஒரே மாசத்துல சம்பாதிச்சிரலாம்!
** நம்ப negotiation skills ம், business communication ம் நல்ல இம்ப்ரூவ் ஆகும்!
** நமக்கு வேலை ரீதியாவும், சமுதாய(கல்யாண சந்தை) ரீதியாவும் நல்ல மரியாதை கெடைக்கும்.
** இங்க நம்ம உருவகமா பார்த்து தெரிஞ்சுகிட்ட பல விசயங்கள அங்க உருவமா பார்க்கலாம்… அட, நான் வேலை சம்பந்தமாதாங்க சொல்றேன்.
அப்பறம் பெருசா ஒன்னுமில்லீங்க, நம்பளும் இந்த ஈபில் டவர், லண்டன் பிரிட்ஜ், பிரமிட், சுதந்திரதேவி சிலை, பைசா கோபுரம் இந்த மாதிரி பல எடங்கள்ல சம்பரதாயமா நின்னு கேமராவ மொறைச்சு பார்த்து பல ஸ்டில்லுகல எடுத்து மொத வேலையா ஆர்குட்லயோ, பிக்காசலயோ போட்டு ஊர் வாயில விழுக வேண்டியதுதான்…
இங்க அவனவன் 38 degree வெயில்ல காஞ்சிட்டு இருப்பான் அங்க நம்பாளு சுவிஸ்ல ஜெர்கின போட்டுட்டு snow fallல வெளயாடறா மாதிரி போட்டோவ போட்டு பொகைய கெளப்புவான்.
மொத்தத்துல மேனேஜ்மென்டை பொறுத்த வரை ஒரு resource அ ஆன்சைட் அனுபறதுங்கறது பொம்பள புள்ளைய கட்டிக் குடுக்கற மாதிரி…
மூத்தவ நல்லா பாடுவா, சமையல் சுமாராத்தான் பண்ணுவா….போக போக பழகிரும்…மத்த படி போற எடத்துல எப்படி இருக்கணும்னு சொல்லி வளத்திருகங்கற மாதிரி… இவருக்கு ஆன தெரியும் குதர தெரியும்னு கிளையன்ட் கிட்ட சொல்லி எப்படியாவது ஆன் சைட் அனுப்பிருவாங்க.
அதெப்டிங்க பெரியவள வீட்ல வெச்சுகிட்டு சின்னவள கட்டி குடுத்தா ஊரு தப்பா பேசாதுங்களாங்கறா மாதிரி சீனியர் resourse அ வெச்சு கிட்டு ஜூனியர் resourse யும் ஆன்சைட் அனுப்ப மாட்டாங்க…
ப்ராஜெக்ட் வந்ததுக்கப்புறம் போன்ல கூப்பிட்டு ” நம்ப கிட்ட ஏற்கனவே குழாய்வழியா (Pipeline ல) இருந்த “வருமோவராதோ” ப்ராஜெக்ட் வந்திருக்கு. நீங்க கெளம்பறதுக்கு தயாராகிகோங்கன்னு ஒரு 10 பேரு கிட்ட தனித்தனியா சொல்லுவாங்க, இவனுகளும் நெசமாத்தான் சொல்றியானு ஆனந்தி மாதிரி கேட்டுக்கிட்டு, உடனே ஷாட்ட இங்க கட் பண்ணி ஃபாரின்ல ஓபன் பண்ணிருவானுக. ஒரு ரெண்டு வாரத்துக்கு தரையிலயே நடக்க மாட்டானுக. பில்லா படத்துல வர்ற மாதிரி ரீ-ரெகார்டிங் இல்லாமையே நடப்பானுக, திரும்புவானுக, பாப்பானுக. மேல இருந்து கூப்பிட்டு தவிர்க்க முடியாத சில காரணங்களால வேறு ஒருத்தர் போறாரு நீங்க கொஞ்ச நாளைக்கு “ஏங்கடாபோங்கடா” ப்ரொஜெக்ட கன்டினியூ பண்ணுங்கன்னு சொன்னதுக்கப்புறம் தான் “I am Back” ன்னு தரைக்கே வருவாங்க..அப்பறம் கொஞ்ச நாளைக்கு “வார்த்தை தவறிவிட்டாய்”ன்னு ஸ்லோ மோஷன்ல நடக்க ஆரம்பிச்சிருவானுக!! ..
ஒரு ப்ராஜெக்ட் புதுசா வருதுன்னாலே, எல்லார் வாயிலையும் அவுல போட்ட மாதிரி ஆயிரும்…. அவன் போவான் இவ போவான்னு எல்லாரும் கெழக்க பார்த்திட்டு இருந்தா மேக்க ஒருத்தன் மொதல்லையே கெளம்பி போயிருப்பான்…
மேல இருக்கறவங்க, முதல்வன்ல ரகுவரன் சொல்ற மாதிரி அகலாது அணுகாது ஒரு தொலை நோக்கு பார்வையோட பாத்து ஒரு பொதுவான முடிவாத்தான் எடுப்பாங்க… “ஒன் டே squad ல ரெய்னாவுக்கு பதில கைப்ப எதுக்கு எடுத்தாங்க” ங்கற மாதிரி ஆக்ரோசமா ஆறு நாளைக்கு அத பத்தி பேசிட்டு அதுக்கப்றம் ஆறாவது நாள் அவங்கவங்க வேலைய அமைதியா பாக்க ஆரம்பிச்சிருவாங்க.
ஆன்சைட் போனவன் “அக்கறை சீமை அழகினிலே”, நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்” பாடிக்கிட்டு அந்த கெத்த அப்படியே மெயின்டையின் பண்ணிகிட்டிருப்பான்….நம்பாளு “சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா”, “இந்திய நாடு நம் நாடு இந்தியன் என்பது என்பேரு” ன்னு காந்தியவாதி ரேஞ்சுல பீலிங்ச போட்டுட்டு அவர அவரே ஆறுதல் படுத்திக்குவாரு.
சரி இப்போ ஒருத்தன(பேச்சுலர) செலக்ட் பண்ணிட்டாங்கன்னு வெச்சுகோங்க. மொதல்ல அவன் work permit எடுக்கணும் அப்பறம் visa எடுக்கணும்.. இதுக்கான காலக்கெடு நம்ப போற நாட்ட பொறுத்து மாறும். US னா ஒரு வருஷம் ஆகும் (அது வரைக்கும் நம்ப உசுரோட இருக்கோமோ இல்லையோ) Uk னா ஒரு மாசம் ஆகும். இதுல US விசா எடுக்கறதுல மட்டும் ஒரு உயரமானவெளிச்சம் (highlight)! என்னன்னா ஒரு கம்பெனி எத்தன விசாவ consulate ல submit பண்ணாலும், வருசத்துக்கு இவளோ பேரைத்தான் அனுப்புவாங்கன்னு ஒரு கணக்கு இருக்கு….அதனால சிக்கிம் சூப்பர், பூட்டான், மணிப்பூர் லாட்டரி மாதிரி computerised லாட்டரி சிஸ்டத்துல செலக்ட் பண்ணுவாங்க அப்புறம் இன்னார் இன்னார் செலக்ட் ஆயிட்டாங்கன்னு சேதி வரும்…அதுக்கும் பொறகு consulateகாரன் நாள் குறிச்சி கூப்புட்டனுப்சு, ஏன் போற எதுக்கு போறேன்னு விதி படத்துல டைகர் தயாநிதிய சுஜாதா கேக்கற மாதிரி கேட்டு, கொடஞ்சு நம்ப பாஸ்போர்ட்ல குமுக்குனு ஒரு குத்து குத்துனாதான் நம்ப பயலுக லேசா சிரிப்பானுக இல்லேனா மந்திரிச்சு உட்ட மாதிரி ஆயிருவானுக!
இந்த லாட்டரில பேரு வரதுக்குள்ள அவனவன் படர பாடு இருக்கே….அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி “விழுந்தா வீட்டுக்கு விழாட்டா நாட்டுக்குன்னு இருக்கறவன்” சந்தோசமா இருப்பான். “இந்த சாப்ட்வேர் வேலை எனக்கு புடிச்சிருந்துச்சு, என் பேரு அன்புசெல்வன்…US என்னோட 25 வருஷ கனவு, தவம்”னு கெளதம் பட ஹீரோ கணக்கா டயலாக் விடறவனெல்லாம் கொஞ்ச நாளைக்கு குவாட்டர் அடிச்ச கொரங்கு மாதிரியே திரியுவானுக!
நூத்துக்கு எண்பது சதவீதம் US இல்ல UK ல தான் ஆன்சைட் அமையும்…சரி ஒரு வழியா விசா கிடைச்சிருச்சுனா. மொதல்ல நமக்காக சொன்ன ப்ராஜெக்ட் இன்னும் நமக்காத்தான் இருக்கான்னு பாக்கணும். இல்லேன்னா அடுத்த பஸ் வெடியால அஞ்சுமணிக்குத்தான் அது வரைக்கும் இப்படி ஓரமா உக்காந்துக்கப்பான்னு இந்த கிராமத்துல எல்லாம் சொல்ற மாதிரி அடுத்த ப்ராஜெக்ட் வர்ற வரைக்கும் பேசாம உக்காந்திருக்க வேண்டியது தான்…

