த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

நீங்கள் "மானாட மயிலாடுங்கள்" அங்கே "மனிதர்களை வேட்டையாடுகிறது" சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்களுக்கு "அரசி" தொடரவேண்டும், அங்கே எம் உறவுகளுக்கு "வாய்கரிசி" போடுகிறது சிங்களப் பேரினவாத பேய்கள்.

உங்கள் "ஜோடி நம்பர் வண்" கலக்குது, அங்கே எத்தனை "ஜோடிகள்" கலையுது ?

உங்கள் "ராமாயணம்" பிரம்மாண்டமானது, ஆனால் அங்கே நிஜத்தில் நடக்குது.

உங்களுக்கு "நீயா நானா ?" எங்களுக்கு "வாழ்வா சாவா ?".

உங்களுக்கு "கோஃபி வித் அனு" எங்களுக்கு "பச்சைத்தண்ணி வித் செல்லு".

உங்களுக்கு "சிரித்து வாழ்வோம்" எங்களுக்கு "சாவிலும் வாழ்வோம்".

உங்களுக்கு "ஓடி விளையாடு பாப்பா" எங்களுக்கு "ஓடி ஒழிந்து கொள்ளு பாப்பா".

உங்களுக்கு "ராக மாலிகா" எங்களுக்கு "சாக முகாரி ராகமா?".

உங்களுக்கு "அசத்தப் போவது யாரு!" எங்களுக்கு "அடுத்துப் போகப்போவது யாரு!".

உங்களுக்கு "நடந்தது என்ன?" எங்களுக்கு "நடக்கிறது என்ன?".

உங்களுக்கு "நீ பாதி நான் பாதி" எங்களுக்கு "உயிர் பாதி உடல் பாதி".

உங்களுக்கு "ச ரி ங ம" எங்களுக்கு "சா நீ தமிழா".

உங்களுக்கு "திரை விமர்சனம்" எங்களுக்கு "தெரு தரிசனம்".

உங்களுக்கு "அதிரடி சிங்கர்" எங்களுக்கு "அதிரடி ஆட்லறி".

உங்களுக்கு "அரட்டை அரங்கம்" எங்களுக்கு "கொலை அரங்கம்".

உங்களுக்கு "சின்னத் திரை" எங்களுக்கு "வெற்றுத் தரை".

உங்களுக்கு "ராணி மஹா ராணி" எங்களுக்கு "சா நீ தினம் சா நீ".

******************************************************************
அன்பானவர்களே, எம்மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை வெளிக்காட்டுங்கள்.
உண்மைகளைத் தயங்காமல் ஒளிபரப்புங்கள்.
அவர்களை சாவின் வழிம்பில் இருந்து காப்பாற்றுங்கள்.
மத்திய அரசின் நாடகத்தை அம்பலப்படுத்துங்கள்.
உலகத்தின் கவனத்தை எமைநோக்கித் திருப்புங்கள்.

நன்றி : தமிழன்

5 comments:

எங்களுக்கு பணம் தான் முக்கியம்.நாங்கள் கருத்துக் கணிப்பிலே ஏற்பட்ட விரோதத்தையே மறந்து சமாதானம் ஆகி விட்டோமே.தி.மு.க இந்தி எதிர்ப்பில் வளர்ந்தது ஆனால் நாங்கள் மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என்பதற்காக எங்களை தகுதி படுத்திக் கொண்டோம்! எங்களது நிறுவனத்தில் எங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று உங்களுக்கு தெரியுமா?மனித இனத்திற்கே நாங்கள் விரோதி என்பது தமிழ் பேசும் அப்பாவிகளுக்கு தெரியாது "மெத்த படித்தவன் தப்பு செய்தால் 'அய்யோ' என்று போவான்" என்று பாரதி சொனதாக ஞாபகம்.ஆனால் எங்கள் பண வசதி எங்களை நல்லதை நினைக்க வைக்காது

சரியான சவுக்கடி தல , ஆனா என்ன தான் சொன்னாலும் சில ஜென்மங்களுக்கு புத்தி வராது , இந்த மாதிரி எத்தன பதிவு எழுதினாலும் அவங்க திருந்த மாட்டாங்க .அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்க நிகழ்ச்சி (trp ல) முதலிடம் பிடிக்கணும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி obeserver and anony

யோவ் போய் வேலையை பாருய்யா
இந்த ஈழ தமிழர்கள் டிவியில் கூட இதே நிகழ்சிகளை தான் மறு ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இவனுங்க பாலிடிக்ஸ் தெரியாம நீர் வேற இப்படி எல்லாம் எழுதிகிட்டு.

சரி யாழ்பாணத்தில் இருந்து எதுக்கு இஸ்லாமியர்களை ஒரே நாளில் விடுதலைபுலிகள் அடித்து விரட்டினார்கள் . உமக்கு தெரியுமா?

இலங்கை மக்கள் அனுபவிக்கும் வேதனைகளை காட்டி புலி தான் தப்பிக்க முயல்கிறது.இலங்கை தமிழர்கள் அனுபவிக்கும் வேதனைகளுக்கு முடிவு வர வேண்டுமானால் புலிகள் ஒழிக்கபட வேண்டும்.

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter