த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...



ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹோ பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.



விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.



எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.


இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார். ஆஸ்கர் மேடையில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். (மேடையில் தமிழில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற போது உண்மையிலேயே புல்லரிக்க தான் செய்தது.)

அந்த வீடியோ காட்சி கீழே ...






ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது. (வீடியோ கீழே.. )




முதல் தமிழ் கலைஞர்!

இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு ‘காந்தி’ படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.

கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ ஆஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்துவமனைக்கே ஆஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங்கினர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்.


அவருடன், ஸ்லம்டாக் படத்தில் சவுண்ட் மிக்சிங்கிற்கான ஆஸ்கர் விருதைப் பெறுபவர்களில் ஒருவர், இந்தியாவின் ரெசுல் பூக்குட்டி என்பது பெருமைக்குரியது.


ஒரே படத்துக்காக, இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்று இரண்டு விருதுகளைப் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் ரஹ்மானையே சேரும்.


ஏற்கெனவே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட உயரிய விருதுகள் பலவற்றையும் வென்று, ரஹ்மான் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்ததும் குறிப்பிடத்தக்கது.






விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்


1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.

ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபுரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.

ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.

இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ரியாக புரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.


திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராகரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.

ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்குசீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.



இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.


ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின்ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.


இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை .ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக்மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரதுபாம்பேட்ரிம்ஸ் பிரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் பாம்பே ட்ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.

1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டுடைம்ஸ் பத்திரிகை வெளியிட்டடாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்றபெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.




இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், .ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன.

ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை .ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.


இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. ‌‌ இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரிங்ஸ், திஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். ‌ புகழ்பெற்றடைம் பத்திரிகை அவருக்கு தந்திருக்கும்பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.


ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்குரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடியபயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள்மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.


டிஸ்க்கி:


  • உலகத்திலேயே, அதிக எண்ணிக்கையில் பாடகர்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மானாகத்தான் இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம். "திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போறப்ப ஏற்படுற வலி எனக்கு தெரியும்".

  • பொதுவாக, ஒரு படத்தின் இசையமைப்பாளரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார். இயக்குனரை இசையமைப்பாளர் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? மின்சார கனவு படத்தில் முதலில் புக் செய்தது ரஹ்மானை. ரஹ்மானிடம், யாரை இயக்குனராக போடலாம் என்று கேட்ட போது, அவர் சொன்னது, தன்னுடைய ஆரம்ப கால நண்பரும், விளம்பரப்பட இயக்குனருமான ராஜிவ் மேனனை.

  • ஹ்மானின் இசை காதில் விழாமல் ஒரு தமிழனால், இந்தியனால் ஒரு நாளை கழிக்க முடியாது. சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே. ஏர்டெல்லின் ரிங் டோனும் அவருடையதே.

32 comments:

சூப்பர் பதிவு ஷாஜி..

செய்திகளை சேகரித்து எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.

வீடியோக்களுக்கும் நன்றி ( வேறெங்கும் தேட வேன்டியதில்லை.

ஏ.ஆர்.ரகுமான் தான் ஒரு சிற‌ந்த்த இசையமைப்பாளர் மட்டுமல்ல சிற‌ந்த தமிழர் என்றும் நிரூபித்துவிட்டார். எவ்வளவு புகழ் வந்தாலும் தனது தாய் மொழியை மற‌க்காமல் மேடையில் சொன்னார்.அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

அருமையான தொகுப்பு தல............ ரஹ்மானின் சாதனை தமிழனுக்கு(இந்தியனுக்கு) பெருமை

Thank u Shai.
thank u very much for this blog,
thanks for oscar award committee for give award to A.R.REHMAN.

by
Sheik,
Tiruvannamalai.

அஸ்ஸலாமு அலைக்கும்!

ரஹ்மானின் இந்த விருது இஸ்லாமியர்களுக்கான கவுரவம்.

எல்லாம் வல்ல அல்லாவை வணங்கிடுவோம்!

சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே//

இது உண்மையா ஷாஜி? ஆனந்த் என்ற இசையமைப்பாளருடையது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்>

:)

/ஆ! இதழ்கள் said...

சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே//

இது உண்மையா ஷாஜி? ஆனந்த் என்ற இசையமைப்பாளருடையது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்//

---உறுதியாக தெரியவில்லை...

//அ.மு.செய்யது said...

சூப்பர் பதிவு ஷாஜி..

செய்திகளை சேகரித்து எழுதி அசத்தியிருக்கிறீர்கள்.

வீடியோக்களுக்கும் நன்றி ( வேறெங்கும் தேட வேன்டியதில்லை.
//

-வருகைக்கு நன்றி...

/கார்த்திக் said...

ஏ.ஆர்.ரகுமான் தான் ஒரு சிற‌ந்த்த இசையமைப்பாளர் மட்டுமல்ல சிற‌ந்த தமிழர் என்றும் நிரூபித்துவிட்டார். எவ்வளவு புகழ் வந்தாலும் தனது தாய் மொழியை மற‌க்காமல் மேடையில் சொன்னார்.அவரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
//

-வருகைக்கு நன்றி... நாளைக்கே கட்-அவுட் வெச்சிடுவோம்....

Superb.

Hats off to AR.Rehmann.
God of Music.

//அபுசலீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

ரஹ்மானின் இந்த விருது இஸ்லாமியர்களுக்கான கவுரவம்.

எல்லாம் வல்ல அல்லாவை வணங்கிடுவோம்!
//

நிச்சயம் இது மிகப்பெரிய கவுரவம். (உல்க அலவில் சாதித்த மற்ற இஸ்லாமியர்கள் அப்துல் கலாம், சானியா மிர்சா, அஸாருதின், பதான் சகோதரர்கள்.... )

நன்றி ஷாஜி. அனைத்தும் ஒரே இடத்தில். அற்புதம்.

//நிச்சயம் இது மிகப்பெரிய கவுரவம். (உல்க அலவில் சாதித்த மற்ற இஸ்லாமியர்கள் அப்துல் கலாம், சானியா மிர்சா, அஸாருதின், பதான் சகோதரர்கள்.... )//

:( .முஸ்லீம் என்ற குறுகிய வட்டத்திற்குள் ஏன் ரஹ்மானை அடைக்க பார்க்குறீர்கள். எந்த இந்துவும் இந்து விருது பெற்றான் என்று தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதில்லை. இந்தியன் என்று சொல்லி பழகுங்கள். தனித்து பிரித்து நிற்காதீர்கள். இந்தியா முழுக்க இன்று கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் முஸ்லீம் என்பதால் அல்ல. இந்தியர் என்பதால் தான்.

//Vetriselvan said...

:( .முஸ்லீம் என்ற குறுகிய வட்டத்திற்குள் ஏன் ரஹ்மானை அடைக்க பார்க்குறீர்கள். எந்த இந்துவும் இந்து விருது பெற்றான் என்று தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதில்லை. இந்தியன் என்று சொல்லி பழகுங்கள். தனித்து பிரித்து நிற்காதீர்கள். இந்தியா முழுக்க இன்று கொண்டாடுகிறார்கள் என்றால், அவர் முஸ்லீம் என்பதால் அல்ல. இந்தியர் என்பதால் தான்.

//

--ஒத்துக்கொள்கிறேன். அதே சமயம், ஒவ்வொரு தீவிரவாத சம்பவத்தின் போதும் முஸ்லிம் சமுதாய மக்கள் மற்ற சமூக மக்களால் கேவலமாக பார்க்கப்பட்டதை மறக்க முடியவில்லை..

இந்திய மற்றும் உலக மீடியாக்கலும், தீவிரவாதிகளை 'முஸ்லிம் திவிரவாதிகள்' என்றே குறிப்பிட்டுவருவதை நீங்கள் நிச்சயம் அறிந்திறிப்பீர்கள்.

//--ஒத்துக்கொள்கிறேன். அதே சமயம், தீவிரவாதிகளால் முஸ்லிம் சமுதாய மக்கள் மற்ற சமூக மக்களால் கேவலமாக பார்க்கப்பட்டதை மறக்க முடியவில்லை..//

அப்படி இப்படி என்று சித்தரிக்க நாலு பேர் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். இங்கு பினூட்டம் போட்டவர்கலையே பாருங்கள். நீங்கள் இசுலாமியர் என்று ஒதுங்கியா இருக்கிறார்கள். நூற்றில் ஒருவர் செய்யும் வேலைகளை வைத்து உங்களை நீங்களே ஒதுக்கி கொள்ளாதீர்கள் . தனிப்பட்ட முறையில் உங்கள் மதத்திற்கு தனி உருவம் கொடுக்க முயலும் போதுதான் இந்தியர்கள் ஒதுங்கி செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் .

//
Vetriselvan said...
நூற்றில் ஒருவர் செய்யும் வேலைகளை வைத்து உங்களை நீங்களே ஒதுக்கி கொள்ளாதீர்கள் . தனிப்பட்ட முறையில் உங்கள் மதத்திற்கு தனி உருவம் கொடுக்க முயலும் போதுதான் இந்தியர்கள் ஒதுங்கி செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் .//

---யோசிக்கவைக்கிறீர்கள்.

ரகுமானை முஸ்லிம் என்ற வட்டத்தில் அடைத்துவைக்க முயலவில்லை. மாறாக, (26/11 நிகழ்விற்கு பிறகு) அவரது இந்த சாதனையால் (தமிழக) முஸ்லிம் சமுகம் கொஞ்சம் கவுரவம் அடையும்...

ஷாஜி மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!

//வண்ணத்துபூச்சியார் said...

நன்றி ஷாஜி. அனைத்தும் ஒரே இடத்தில். அற்புதம்.//

//குசும்பன் said...

ஷாஜி மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!
//

-வருகைக்கும் பாராட்டுதலுக்கும் மிக்க நன்றி...

ealla pukalum eraivanukkeaaa
Thanks Dear....

இது உண்மையாகவே ஒரு சந்தோஷ தருணம்.

Please visit my blog: http://valibarsangam.wordpress.com & give me your support too

Wonderful compilation. Thanks a ton

ஏங்க, ரஸுல் குட்டி-னு ஒருத்தரும் ஆஸ்கர் வங்கினராமே, அவரும் இந்தியர்-னு கேள்வி பட்டேன். அவரபத்தி யாருமெ ஒன்னும் எழுதல......

ஏங்க, ரஸுல் பூகுட்டி-னு ஒருத்தரும் ஆஸ்கர் வங்கினராமே, அவரும் இந்தியர்-னு கேள்வி பட்டேன். அவரபத்தி யாருமெ ஒன்னும் எழுதல......

உங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் கவனித்தேன். ஒரு தனி நபரின் செயலையும் மதத்தையும் தொடர்பு படுத்தாதீர்கள். விருது வழங்கப்பட்டவருக்கு அவர் முஸ்லிம் என்ற காரணத்தால் விருது வழங்கப்படவில்லை. அவரது கலைக்காகவே வழங்கப்பட்டுள்ளது. இதே சாதனையை ஒரு இந்துவோ அல்லது கிறிஸ்தவனோ செய்திருந்தாலும் வழங்கப்பட்டிருக்கும். இதுபோன்ற செயல்களை வைத்து இஸ்லாத்துக்கு பெருமை சேர்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. மதங்களை அவற்றின் கொள்கைகளை வைத்து எடை போட வேண்டுமே ஒழிய தனி மனிதனின் செயலை வைத்து அல்ல. இங்கு பின்னூட்டமிட்ட முஸ்லிம் சகோதரர்கள் முதலில் இஸ்லாமின் அடிப்படையை அறிந்து கொள்ளட்டும்.

//ரஸுல் பூகுட்டி-னு ஒருத்தரும் ஆஸ்கர் வங்கினராமே, அவரும் இந்தியர்-னு கேள்வி பட்டேன். அவரபத்தி யாருமெ ஒன்னும் எழுதல......//

ம்.. அதுக்கு என்ன காரணம்னா அவர் தமிழர் இல்ல.
அவரப்பத்தி மலயாளத்துல நெறய எழுதறாய்ங்க.

ரஹ்மானப் பத்தி நெறய எழுதறதுக்குக் காரணமா அவர் மேடையில் பேசிய தமிழும் கூட. தமிழன் என்ற பெருமிதத்தை உண்டுபண்ணியதால

"ஆஸ்கர் மேடையில் ஒலித்த தமிழ் - 'எல்லா புகழும் இறைவனுக்கே'"

என்னாது, ஒலித்த தமிழா?
என்னா அநியாயங்க இது?
அங்கே ஒரு தீட்சிதர் கூடவா இல்லை??!!

"ஆஸ்கர் மேடையில் ஒலித்த தமிழ் - 'எல்லா புகழும் இறைவனுக்கே'"

- என்னாது தமிழா?
என்னா அநியாயங்க இது?
ஒரு தீட்சிதர் கூடவா இல்லை

- jokes apart

Best wishes to AR Rahman

//என்னாது, ஒலித்த தமிழா?
என்னா அநியாயங்க இது?
அங்கே ஒரு தீட்சிதர் கூடவா இல்லை??!!
//

ஆமா அதானே!

அது சரி, ஒரு அரபியனுமா இல்ல அரபுல பேசாம தமிழ்ல பேசியிருக்காரு.

"அது சரி, ஒரு அரபியனுமா இல்ல அரபுல பேசாம தமிழ்ல பேசியிருக்காரு.."

- அடடே!
ஏங்க ஏ ஆர் ரஹ்மான் தான் சார்ஜா துபாய்க்கு எல்லாம் போய் அதாவது அரபு நாட்டுக்கே போய் தமிழ் பாட்டெல்லாம் பாடியிருக்கிறாரே!!அரபி கிட்ட எல்லாம் தமிழ் ஒரு பிரச்சினையில்லைங்க..!!

//(உல்க அலவில் சாதித்த மற்ற இஸ்லாமியர்கள் அப்துல் கலாம், சானியா மிர்சா, அஸாருதின், பதான் சகோதரர்கள்.... )//

நாதஸ்வர மேதை ஷேக் சின்ன மௌலானா சாகிப் ;உலக மேடைகள் பலவற்றில் வாசித்தவர். இக்கலை மறக்கடிக்கப் படுவதுபோல்; இந்த மாமேதையையும் மறப்பது வேதனையே....
இது தான் ..;நம் குறை.. இதுவே..இந்தியா...

//- அடடே!
ஏங்க ஏ ஆர் ரஹ்மான் தான் சார்ஜா துபாய்க்கு எல்லாம் போய் அதாவது அரபு நாட்டுக்கே போய் தமிழ் பாட்டெல்லாம் பாடியிருக்கிறாரே!!அரபி கிட்ட எல்லாம் தமிழ் ஒரு பிரச்சினையில்லைங்க..!!//

அடடே! ப்ராமின் கிட்ட கூட ஒரு பிரச்னையும் இல்லீங்க. இங்க இந்தியாவிலே அவங்க மத்தியிலும் கூட இருந்துதான் இசைப்புயலாய் வளர்ந்தாரு.

ச்சும்மா ஷோ காட்டாதிங்க சார்!!

அணைத்து சகோதரர்களும் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும் இங்கு ஒரு இசுலாமியனோ அல்லது இசுலாம் அல்லதவனோ....... ஒரு இந்தியனாக எவர் இந்த பெருமைக்கு சொந்தக்காரனாக ஆனாலும் கண்டிப்பாக ஒரு இந்தியன் என்ற முறையில் அனைவரும் பெருமை பட வேண்டிய சந்தோஷ பட வேண்டிய விஷயம் இது. இதில் யாருக்கும் கருது வேறுபாடுகள் கிடையாது குறிப்பாக அவர் தமிழன் என்பதில் தமிழர்களாகிய நமக்கு இரட்டிப்பு சந்தோசம் ..... இசுலாமியன் என்பதால் இந்திய தமிழ் இசுலாமியர்களுக்கு மூட்டிப்பு சந்தோசம்... அவளவுதான் தவிர இதில் பார்பவர்களின் பார்வைகொலாருகல்தான் அதிகமாக உள்ளது .....இதை நாம் புரிந்துகொண்டோமோ இல்லையோ எ ஆர் ரஹுமான் நன்றாகவே புரிந்து கொண்டு அந்த மேடையிலே ஒரு இந்தியனாக ஒரு தமிழனாக ஒரு இசுலமியனாக அவர் பேசியது அமைந்துள்ளது ரசூல் பூகுட்டயும் ஒரு இசுலாமியன் தன் என்பது குறிப்பிடத்தக்கது ..........

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter