இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
சென்னையின் இன்றைய பரபரப்பு ‘அரசன்’ பட போஸ்டர்கள் தான். சென்னை நகர் முழுக்க ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தான் இப்போது ரஜினி ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் ஹாட் டாபிக்.
மேற்கூறிய போஸ்டர் அநேகமாக சூப்பர் ஸ்டார் நடித்த ஏதாவது ஒரு ஹிந்தி படத்தின் தமிழாக்கத்தின் போஸ்டராகத்தன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
போஸ்டரில் காணப்படும் வாசகங்கள் “Black Man - Big History” என்பதற்கு ஏற்ப அமெரிக்க அதிபர் ஒபாமாவின் படமும் சூப்பர் ஸ்டாரின் படமும் இருபுறமும் காணப்படுகிறது. இருவரும் அடிப்படையில் கருப்பு நிறம் என்பதை இது குறிக்கிறது.
சும்மா பரபரப்புக்காக ஒபாமாவின் படம் சேர்க்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளது. மற்றபடி மேற்படி டப்பிங் படத்திற்கும் ஒபாமாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் கருப்பு நம் தலைவரும் கருப்பு என்பது சௌகரியமான ஒற்றுமையாய் போய்விட்டது அவ்வளவுதான். இருவரும் தத்தங்கள் துறையில் சாதித்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
அதுமட்டுமல்லாது, “இன்று வேட்டை, நாளை கோட்டை” என்ற பன்ச் டயலாக் வேறு சும்மா மிரட்டுகிறது. அதற்க்கு கீழே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் ‘அரசன்’ -The Don என்று காணப்படுகின்றது.
ஒரு டப்பிங் படத்தின் போஸ்டரே இவ்வளவு பரபரப்பு கிளப்புகிறது என்றால், அது நம் சூப்பர் ஸ்டார் ஒருவருக்காக மட்டுமே இருக்க முடியும்.
உங்கள் பார்வைக்கு போஸ்டர்களில் சில:

டிஸ்க்கி:
அரசன் - சுல்தான் தி வாரியர் படத்தின் தமிழ் வடிவ பேராக கூட இருக்கலாம்
நன்றி : onlyrajini.com & simplesundar
“நமக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அது தானா கிடைக்கும்” - அஜீத்தை மாற்றிய சூப்பர் ஸ்டாரின் வைர வார்த்தைகள்!
“சூப்பர் ஸ்டார் நாற்காலியை அடையாமல் விடமாட்டேன்…” என்று ஒரு காலத்தில் மனம் போனபடியெல்லாம் பேட்டி கொடுத்துகொண்டிருந்த அஜீத் இன்று அடக்கத்தின் சிகரமாய் காணப்படுகிறார். தேவையின்றி பத்திரிக்கைகளில் பேசுவதில்லை. யாருக்கும் சவால் விடுவதில்லை. தான் பாட்டுக்கு தனது கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இந்த மாற்றம் அவருள் எப்படி நிகழ்ந்தது?
இது பற்றி முன்னமே உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும், நண்பர்களின் தளங்களில் படித்திருப்பீர்கள். இருப்பினும் அது ஒரு ஆச்சரியமான விஷயம் என்பதால் ஒரு சிறிய ரீவைண்ட். “சூப்பர் ஸ்டார் கற்கும் பாடம்” பற்றிய பதிவில் நண்பர் ஒருவர் அளித்த கமெண்டை பார்த்த பிறகு எனக்கு இது தோன்றியது. பிற்சேர்க்கையாக தரவேண்டியதை அப்படியே ஒரு தனி பதிவாக தருகிறேன்.
அஜீத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
தொடர் தோல்வியால் துவண்டு போயிருந்த அஜீத்திடம், பில்லா ரீமேக் ஐடியாயாவை சிலர் கூறினார்கள். இதையடுத்து சூப்பர் ஸ்டாரிடம் அனுமதி கேட்டு அவரின் ஆசி பெறுவதற்கு அவரை நேரில் சந்தித்தார் அஜீத்.
சூப்பர் ஸ்டாரும் அஜீத்தை பரிவுடன் உபசரித்து, பில்லா ரீமேக்கிற்கு ஒப்புதலும் ஆசியும் வழங்கினார். அதுமட்டுமல்லாமல், “Living with Himalayan Masters” என்ற புத்தகத்தையும் பரிசளித்தார். (திரையுலகில் சத்யராஜ், விவேக் உள்ளிட்ட பலருக்கு ரஜினி இந்த புத்தகத்தை பரிசளித்திருக்கிறார் தெரியுமா?)
பின்பு அஜீத்திடம், “நமக்குன்னு எது விதிக்கப்பட்டிருக்கோ அது நமக்கு தவறாம கிடைக்கும். அதனால் நாம் எதுக்கும் அலட்டிக்கவோ கவலைப்படவோ கூடாது. நம்ம வேலைய நாம பாட்டுக்கு செஞ்சிகிட்டு போய்கிட்டே இருந்தா போதும். மத்தது தானா நடக்கும்” என்றார்.
மனநிறைவுடன் வீடு திரும்பிய அஜீத், ரஜினி பரிசளித்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார். முதலில் புத்தகத்தை ஆர்வமின்றி படிக்க துவங்கிய அஜீத் பிறகு, பக்கங்களை புரட்ட புரட்ட அசந்தேபோய் விட்டார். அவருக்கு தேவை எதுவோ அது அந்த புத்தகத்தில் கிடைத்தது. புத்தகத்தை முடித்த போது அவர் முழுதும் மாறிவிட்டிருந்தார். “இந்த மாற்றத்திற்கு காரணம் ரஜினி சார் தான்” என்றும் வெளிப்படையாக கூறினார்.
வாழ்க்கையிலும் கேரியரிலும் சூப்பர் ஸ்டார் கூறியதை ஓரளவு பின்பற்ற துவங்கினார். அவர் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் மெல்ல நடக்க ஆரம்பித்தது. பில்லா சூப்பர் ஹிட்டானது. அஜீத் தந்தையானார். (பில்லா ரிலீசின்போது தொலைக்காட்சிகளில் விரிவான பேட்டியளித்தார் அஜீத். அதில் சூப்பர் ஸ்டார் பற்றியும் அதில் நிறைய பேசினார்.)
அஜீத்தின் குழந்தையின் பெயர் அனுஷ்கா. பார்க்க அச்சு அசலாக அஜீத் போலவே இருக்கும் அந்த குட்டி தேவதைக்கு தற்போது ஒரு வயது நிரம்பி இரண்டாம் வயது ஆரம்பித்துவிட்டது.
இப்போது இந்த அஜீத் அதிகம் பேசுவதில்லை. பில்டப்புகளில் ஈடுபடுவதில்லை. இந்த அஜீத்தை அனைவருக்கும் பிடித்திருக்கிறது.
திருவள்ளுவர் கூறுவது போல,
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்” - குறள்
பொருள்: “அறிவிலும் அனுபவத்திலும் தம்மிலும் சிறந்த பெரியோரை போற்றி, மதித்து, தமது நட்பாக்கிகொள்ளுதல் என்பது பெறுவதற்ககரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரியது”
சூப்பர் ஸ்டாருடன் இவரது அணுகுமுறை விஷயத்தில் இந்த குறள் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: OnlyRajini.com (சிம்பிள்_சுந்தர்)
சூப்பர் ஸ்டார் தொடர்பான எத்தனையோ போஸ்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். பிறந்த நாள், பட ரிலீஸ், பட பூஜை, திருமண நாள் இப்படி பல தரப்பட்ட நாட்களுக்கு பலவிதமான போஸ்டர்களை நம் ரசிகர்கள் எழுப்புவர்.
ஆனால் சென்னையில் ஓட்டேரி மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட இந்த போஸ்டர் இது வரை நாம் பார்த்த போஸ்டர்களுள் சிறந்த ஒன்று என்று தாராளமாக சொல்லலாம். போஸ்டரில் புரட்சி ஏற்படுத்தும் திருச்சி ரசிகர்களுக்கு கூட இது தோன்றாதது ஆச்சரியம் தான்.
அப்படி என்ன இந்த போஸ்டரில் விஷேஷம் என்கிறீர்களா?
சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு (1970) புரட்சி தலைவர் எம்.ஜி.யாரை வைத்து முரசொலி மாறனின் தயாரிப்பில் வெளியான படம் எங்கள் தங்கம். அதில் எம்.ஜி.யாருக்கு ஜோடி ஜெயலலிதா.
இன்று 2009 இல் முரசொலி மாறனின் புதல்வன் கலாநிதி மாறனின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கும் எந்திரன். “History repeats itself” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. வரலாறு புதிதாக பிறப்பதில்லை. அது திரும்ப திரும்ப நடக்கூடிய ஒன்று என்று அதற்க்கு அர்த்தம்.
போஸ்டர் கூறும் செய்தி என்ன?
“அன்று முரசொலி மாறன் தயாரிப்பில் புரட்சி தலைவரின் எங்கள் தங்கம்.
இன்று கலா நிதி மாறன் தயாரிப்பில் புரட்சி வீரனின் எந்திரன் - வெற்றியடைய வாழ்த்துகிறோம்.”
தற்போது புரட்சி தலைவரைப் போல மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் படத்தை கலாநிதி மாறனின் தயாரிப்பது என்ன ஒரு ஒற்றுமை…!! வாவ்….!!!! இதை கண்டுபிடித்து போஸ்டர் எழுப்பிய அந்த ரசிகர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.
நன்றி : சுந்தர் ( http://onlysuperstar.com )
நம்ம சூப்பர் ஸ்டார் - தலைவர் ரஜினியின் ஜப்பானிய புகழ் அனைவரும் அறிந்ததே...
அதற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல், ஒரு ஜப்பானிய டிவியின் ரியாலிட்டி ஷோவ்வில் (அதாங்க... நம்ம ஊரு மானாட மயிலாட, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் போல) தலைவர் ரஜினியின் 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற பாடலை ஒரு ஜப்பானிய கலைஞர் தலைவர் ஸ்டைலில் மிமிக்ரி செய்யும் வீடியோ தொகுப்பு கீழே....
தலைவர் போல புகழ் பெற்ற கலைஞர் இந்தியாவில் வேறு யாரவது உண்டா????
நாட்களுக்கு முன்பு நாச்சிக்குப்பம் பற்றி சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை இது தான்; இது தான் என் பூர்வீக இடம். என் பெற்றோருக்கு இங்கு நினைவிடம் எழுப்ப ஆசைப்படுகிறேன்".
நேற்று வரை ஒரு சாதரண சிற்றூராக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த நாச்சிக்குப்பம், சூப்பர் ஸ்டாரின் பூர்வீக கிராமம் என்று தெரிந்த பின்னர் ஓவர் நைட்டில் ஒரு VVIP அந்தஸ்தை பெற்றுவிட்டது. அதுவும் அவர் அங்கு தன் பெற்றோருக்கு நினைவு மண்டபம் அமைப்பதாக அறிவிப்பு வெளியிட்டவுடன் கிட்டத்தட்ட ஒரு சுற்றுலாத் தலமாகிவிட்டது
கேட்பாரற்று கிடக்கும் இடத்தையே பிளாட் போட்டு பெரிய விலைக்கு விற்றுவிடும் நம்ம ரியல் எஸ்டேட்காரர்கள் நாச்சிக்குப்பம் பற்றி சூப்பர் ஸ்டார் கூறியவுடன் சும்மா இருப்பார்களா? அந்த இடத்தில் தற்போது காலியிடங்களின் விலை தாறுமாறாக எகிறிவருகிறது. மனைகளின் விலை மட்டுமின்றி நாச்சிக்குப்பத்தில் சொத்துக்களின் மதிப்பும் கடுமையாக உயர்ந்துவருகிறது. நாச்சிக்குப்பத்திற்கு கிடைத்துள்ள இந்த திடீர் நட்சத்திர அந்தஸ்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கடலில் திக்குமுக்காடிவருகின்றனர். ஒரு ஏக்கர் தற்போது நாசிக்குப்பத்தில் 40 லட்சத்துக்கு விலைபோகிறது. வருங்காலத்தில் இது மேலும் உயரக்கூடும் என்று தெரிகிறது.
நன்றி : onlyrajini.com & sundar
எந்திரனை வைத்து இன்னும் என்னென்ன கதைகள் பின்னப் போகிறார்களோ...
நமக்குத் தெரிந்து சுஜாதா எழுதிய என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்கள்தான் எந்திரனின் கதை.
ஆனால் இப்போது இன்னும் புதுசு புதுசாக, தினுசு தினுசாக கதை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இணைய தளங்களில்.
அப்படி வந்துள்ள ஒரு கதை இது. சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் தான் கையெழுதிய கம்யூட்டர் மானிட்டரில் தலையை மோதிக் கொண்டிருப்பார். நல்ல வேளை... மனிதர் அந்தக் கொடுமையை அனுபவிக்கவில்லை.
இதோ நம்மாளுங்க விடும் கரடி... ஸாரி கதை!
"ரஜினி ஒரு விஞ்ஞானி. அவர் புதுவகையான ஒரு 'ரோபோ'வை கண்டு பிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். வரும் 2,200ம் ஆண்டில் 'ரோபோ' எப்படி இருக்கும்? அது என்னவெல்லாம் செய்யும் என்பதை கற்பனையாக வைத்து, முடிவில் அவர் ஒரு எந்திர மனிதனை பிரமிக்கும் வகையில் கண்டு பிடித்து விடுகிறார். இதன் மூலம் அவர் உலகிலேயே மிகவும் தலை சிறந்த விஞ்ஞானி என்ற பட்டத்தை பெறுகிறார்.
ரஜினி கண்டுபிடித்த 'ரோபோ' எந்திரமும் ரஜினி போலவே உருவம் கொண்டது என்பது விசேஷ அம்சமாகும். இதன் மூலம் உலக நாடுகளில் ரோபோ தயாரிப்பு விஞ்ஞானிகளில் ரஜினி தவிர்க்க முடியாத மாபெரும் விஞ்ஞானியாக புகழ் பெற்று விடுகிறார்.
இதற்கிடையே ரஜினி-ஐஸ்வர்யாராய் இடையே காதல் மலர்கிறது. இருவரும் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் ரஜினி கண்டு பிடித்த 'ரோபோ'வாலேயே அவரது காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.
ஆமாம்! அந்த அரிய வகை ரோபோவை ஒரு வில்லன் கடத்திக் கொண்டு போய் விடுகிறான். வில்லன் கையில் சிக்கிய 'ரோபோ' அவன் இஷ்டப்படி நடக்க ஆரம்பித்து விடுகிறது. ரஜினி பேச்சை கேட்க மறுத்துவிடுகிறது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் காதல் உட்பட ரஜினி வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்சினையாகி விடுகிறது. ஒரு வழியாகப் போராடி, முடிவில் அந்த ரோபோவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரஜினி.
இந்தப் படத்தில் ரஜினி, ஐஸ்வர்யாராய் சந்திப்பு மற்றும் காதல் காட்சிகள் மட்டுமே 'அவுட்டோர்' படப்பிடிப்புகளில் நடத்தப்படுகிறது. எந்திரன் 'ரோபோ' ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில் அதனை மும்பையில் ஒரு பங்களாவுக்குள் ரகசியமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். 'ரோபோ'வுக்கு 'அவுட்டோர்' சூட்டிங் கிடையாது. இந்த 'ரோபோ' சிறியவர் முதல் பெரியவர் வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் பலவகை அட்டகாசங்களைச் செய்கிறது.
'ரோபோ' வில்லன் கையில் கிடைக்கும் போது 'இடைவேளை' விடுகிறார்கள். இதன் பின்னர் வில்லன் சொல்படி ஆடும் 'ரோபோ' ஒவ்வொரு காட்சியிலும் ஏகப்பட்ட காமெடி ரகளை பண்ணுகிறது. ரோபோவும், ஐஸ்வர்யாராயும் ஆடிப்பாடும் ஒரு காதல் காட்சி 'கம்யூட்டர் கிராபிக்ஸ்' யுக்தியில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கப்போகிறது. இந்தப்படத்தில் ஏ,ஆர்.ரகுமான் இதுவரை இல்லாத அளவுக்கு இசையில் 'காமெடி' கலந்து பல புதுமையான டியூன்களை உருவாக்கி உள்ளார். 'எந்திரன்' 2010ம் ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ரசிகர்களை மகிழ் விக்கும் வண்ணம் உருவாகி வருகிறான்."
இன்னும் என்னென்ன கதைகள் இவர்களிடம் ஸ்டாக் இருக்கிறதோ...!!







