இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
சந்த்ராயன்-1 விண்கலம் தனது ஏவப்பட்ட முதல் 75 நாட்களில் 40,000படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை வேறு எந்த நாட்டை சேர்ந்த செயற்கோளும் இவ்வளவு படங்கள் அனுப்பியதில்லை என்பதால் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
கடந்த அக்டோபர் 22ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்த்ராயன்-1 விண்கலம், நவம்பர் 8ம் தேதி நிலவின் 100 கி.மீ. சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.
நவம்பர் 14ம் தேதி விண்கலத்தில் இருந்து பிரிந்து எம்ஐபி (Moon Impact Probe) துணைக் கலம் வீடியோ, ரேடார், ஸ்பெக்ட்ரோமீட்டர் ஆகியவற்றுடன் நிலவில் தரையிறங்கியது.
தற்போது இது டெரைன் மேப்பிங் கேமரா (Terrain Mapping Camera) மூலம் படங்களை எடுத்து பெங்களுரூக்கு அருகில் உள்ள பயாலலுவில் இருக்கும் இந்திய ஆழ் விண்வெளி மையத்துக்கு அனுப்பி வருகிறது. பின்னர் அங்கிருந்து இஸ்ரோவுக்கு அனுப்படுகிறது.
எம்ஐபி எடுத்த படங்களில் சில 5 மீட்டர் அளவுக்கு துல்லியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்த்ராயன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ 2012ல் சந்த்ராயன் 2 விண்கலனையும், 2020ல் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை தயாரித்து வருகிறது. இது குறித்து சந்த்ராயன் திட்டக் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறுகையில், 2015ல் பூமிக்கு மேல் 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் இந்தியர் ஒருவரை கொண்ட விண்கலம் செலுத்தப்படும். நிலவுக்கு இந்தியர் ஒருவரை அனுப்புவதிலும் இஸ்ரோ ஆர்வமாக இருக்கிறது. அடுத்த கட்டம் இது தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை.
டிஸ்க்கி :
இந்த செய்தியை கேள்வி பட்ட வில்லு-விஜய், "நான் Flightல fight எல்லாம் போட கத்து வச்சிருக்கேன்; so நான் தானுங்கன்னா நிலவுக்கு போவேன்" என்று அடம்பிடிப்பத்கவும்; விஜயகாந்த் அவர்கள், "டேய் நான் தாண்ட கேப்டன், so எனக்கு தான் எல்லா rights இருக்கு' என்று கூறி சென்னையில் ஆர்ப்பட்டம் ஒன்றை அறிவித்து இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன...
நீங்க என்ன சொல்றீங்க...
பலருடைய நோக்கியா கைத்தொலைபேசி புதிதாக வாங்கி சில மாதங்களிலேயே காலை வாரத்தொடங்கிவிடும்.ஆனால் சிலருடையது வாங்கி ஐந்து வருஷம் சென்றாலும் அப்படியே இருக்கும்.
நீங்கள் பயன்படுத்தும் Nokia கைத்தொலைபேசி அசலா ? போலியா ? ? என நீங்கள் சோதித்திருக்கிறீர்களா ? இல்லையெனில் இதோ அருமையான முறை
* பின்வரும் இலக்கங்களை அழுத்துங்கள் *#06#
* 7வது 8வது இலக்கங்களில் உள்ளவற்றை கவனமாக பார்த்து கீழுள்ளவற்றோடு ஒப்பிடுங்கள்.
Number---------Phone serial no
1 ----------------------x
2 ----------------------x
3 ----------------------x
4 ----------------------x
5 ----------------------x
6 ----------------------x
7th------ --------------?
8th------- -------------?
9 -------- ------ -------x
10----------------- ----x
11 ---------------------x
12 ---------------------x
13 ---------------------x
14------------- --------x
- உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 02 அல்லது 20 ஆக இருந்ததால் உங்களுடைய போன் ஐக்கிய அரபு நாடுகளில் தயாரிக்கப்பட்டது மிகவும் கூடாதது. விரைவில் பழுதடையும்.
- சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 08 அல்லது 80 ஆக இருந்ததால உங்களுடைய போன் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை .
- சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வது இலக்கம் 01 அல்லது 10 ஆக இருந்ததால உங்களுடைய போன் பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. நல்லது சில வருடங்கள் பாவிக்கலாம்.
- உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 00 ஆக இருந்தால் உங்கள் போன் ஒரிஜினல் கம்பனியில் தயாரிக்கப்பட்டது. பல வருடங்கள் பாவிக்கும்.
- உங்களுடைய மொபைலின் சீரியல் இலக்கத்தில் 7 வது 8 வாதி இலக்கம் 13 ஆக இருந்தால் உங்கள் போன் Azerbaijan இல் தயாரிக்கப்பட்டது. மிகவும் மோசமானது. உங்களுடைய உடல் நலத்துக்கு ஆபத்தானது.
நன்றி: honey தமிழ்
நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் web page-ஐ லைவ் -ஆகா edit செய்ய, கீழே உள்ள code-ஐ copy செய்து உங்கள் address bar -இல் பேஸ்ட் செய்யவும்.
javascript: document.body.contentEditable = 'true';document.designMode = 'on'; void 0
அதன் பிறகு, அந்த web page-ஐ நீங்கள் word pad-இல் எடிட் செய்வது போல் எடிட் செய்யலாம்..
உதாரணத்திற்கு தினமலர் வெப்சைட்-இல் உங்களைப்பற்றிய செய்தியை நீங்கள் எடிட் செய்து (அல்லது உருவாக்கி) கொள்ளவும் . பின் அந்த screen-shot எடுத்து நண்பர்களுக்கு மெயில் அனுப்பி பிலிம் கட்டலாம்.
நன்றி : நட்டு.



