ஆஸ்கர் வாங்கிய ரகுமானுக்கு பல முனைகளிலிருந்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிகின்றன. சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் மார்ச் முதல் தேதி மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்துகிறது. (நடிப்பு திலகம் ???) விஜய் எல்லாம் டாக்டர் பட்டம் வாங்கும் பொது, மிகப் பெரிய வரலாற்று சாதனை புரிந்த நம்ம ரகுமானுக்கு டாக்டர் பட்டம் இல்லையா? என ஏங்கிய அவரது ரசிகர்கள் மனதில் பால் வார்க்கும் செய்தி தான் கீழே....
இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த ஒரே ‘இந்திய’ இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் கூறியுள்ளார்.
அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
ரஹ்மான் தவிர, டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளரும், முன்னாள் சாஹித்ய அகாதமி தலைவருமான பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அலிகார் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.
அப்புறம் என்ன கூடிய சீக்கிரம் நம்ம தமிழ் நாட்டு பல்கலைகழகங்களும் ஆளுக்கொரு டாக்டர் பட்டத்தோட கொடுக்க ரெடியா இருப்பாங்க...
வெயிட் அண்ட் சி
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
1 comments:
//விஜய் எல்லாம் டாக்டர் பட்டம் வாங்கும் பொது, மிகப் பெரிய வரலாற்று சாதனை புரிந்த நம்ம ரகுமானுக்கு டாக்டர் பட்டம் இல்லையா?//
நல்ல போடு போட்டீங்க போங்க...அவர் தளபதி ஆச்சே..என்ன இருந்தாலும் நீங்க இப்பிடியெல்லாம் எழுதப்படாது...அவர் அப்பா கொவிப்பாரா இல்லையா?
Post a Comment