ஷக்தி சிதம்பரத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பில், ராகவ லாரன்ஸின் நடிப்பி்ல் உருவாகி வரும் ராஜாதி ராஜா படத்தின் இசையமைப்பாளராகியுள்ளார் நடிகர் கருணாஸ்.
87ம் ஆண்டே மெட்ராஸுக்கு வந்து விட்டவர் கருணாஸ். வந்தவருக்கு இருந்த ஒரே கனவு, எப்படியாவது நல்ல இசையமைப்பாளராகி விட வேண்டும் என்பதே.
ஆனால் சினிமாவில் அதற்கான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இருந்தாலும் தடைக்கற்களை, படிக்கற்களாக்கிக் கொள்ளும் வித்தை தெரிந்திருந்த கருணாஸ், அப்படியே பாப், கானா பாடல்களுக்கு களம் மாறினார்.
மேடைகளில் பாப், காணா பாடல்களைப் பாடி கலக்க ஆரம்பித்தார். இப்படியே கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாப், காணா, ஜிங்கிள்ஸ் உள்ளிட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார் கருணாஸ்.
கருணாஸுக்கு இசையும் நன்கு வரும் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. காரணம், நந்தாவில் அவர் காட்டிய நடிப்புத் திறமை, அந்த அளவுக்கு கருணாஸின் இசை பரிமாணத்தை மறைத்து விட்டது.
நடிப்பில் முங்கிப் போய் விட்ட கருணாஸ், சமீபத்தில்தான் திண்டுக்கல் சாரதி மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார்.
ஆனால் ஷக்தி சிதம்பரம்தான், கருணாஸை, ஒரிஜினல் தளத்திற்குக் கூட்டிப் போயுள்ளார். ராஜாதி ராஜா படத்தின் இசையமைப்பாளராக கருணாஸை புக் செய்துள்ளார் ஷக்தி சிதம்பரம். தனது இசை நண்பரான பால்.ஜேவுடன் இணைந்து கருணாஸ் இசையமைக்கவுள்ளார்.
இப்படத்திற்கு முதலில் இசையமைப்பதாக இருந்தவர் தினா. தற்போது தினா நீக்கப்பட்டு விட்டார்.
இந்த புதிய வாய்ப்பு குறித்து கருணாஸ் கூறுகையில், இந்த வாய்ப்பை அளித்த ஷக்தி சாருக்கு முதலில் எனது நன்றிகள். இதை நான் எதிர்பார்க்கவில்லை.
3 பாடல்களை முடித்து விட்டேன். எனக்கும் பால்.ஜேக்கும் நல்ல நட்பும், தோழமையும் உண்டு. நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டுள்ளோம். எனவே இந்தப் புதிய பணி எங்களுக்கு சுமையாக இல்லை.
மயிலாப்பூரில்தான் எனது இசைக்கு பிள்ளையார் சுழி போட்டேன். அம்புஜம் மாமி என்பவர்தான் எனக்கு கர்நாடக இசை கற்றுக் கொடுத்தார் என்றார் கருணாஸ்.
கருணாஸும், பால்.ஜேவும் சேர்ந்து இசையுலகின் புதிய புயலைக் கிளப்புவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி : தட்ச்த்தோல் டாட் காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment