கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் அவர்களுடைய டிரீம் கம்பேனியை (கனவு நிறுவனம்) பற்றி கேட்டால் அவர்கள் கூறும் பதில் ‘Infosys, TCS, Satyam’. இந்த பதிலை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். காரணம், இந்த மூன்றுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் தான். ஆனால், இன்று ராமலிங்க ராஜூவின் ராஜினாமாவும், பல ஆண்டுகள் நடந்த மோசடிகளும் அதில் வேலை செய்யும் 50,000 ஊழிகளின் வாழ்க்கை கேள்வி குறியாக்கியுள்ளது.
நெற்று 178 ரூபாய் இருந்த சத்யம் பங்கு இன்று நாற்பது ரூபாயாக உள்ளது. அவரது சகோதரின் முன்னால் நிறுவனமான சிஃபி பங்குகள் கூட உலக பங்கு சந்தையில் வீழ்ச்சியை கண்டது. ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ மீண்டும் அதன் பங்கு ஏறலாம். முதலீட்டாளர்களுக்கு லாபம் வரலாம். ஆனால், அங்கு வேலை செய்பவர்கள் நிலை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எந்த பதிவுகளும் அவர்களுக்காக வருத்தம் கூட தெரியவில்லை. இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை போனால் பல பேரின் வாழ்க்கை என்னாகும், அவர்கள் வேலைக்கு பாதுகாப்பு உள்ளதா என்று எந்த ஊடகமும் செய்தி தரவில்லை.
இரண்டு மாதங்களாக சத்யம் ஊழியர்களை எப்படி வேலையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று பலருக்கு தெரியாது. Dress Code அடிப்படையில் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர். ஷூ போடாமல் அலுவலகத்திற்கு வருவது, ஷர்ட்டை டக் இன் செய்யாமல் இருப்பது, அரை மணி நேரம் காலதாமதம் போன்ற விஷயங்களை பெரிதாக்கி வேலையை விட்டு போக சொன்னார்கள். மதியம் 2 மணிக்கு தனிப்பட்ட முறையில், ஒரு ஊழியருக்கு ஹெச்.ஆரிடம் இருந்து போன் வரும், 'மாலை 5 மணிக்குள் வேலையை விட்டு போகவில்லை என்றால் உன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் (Termination)' என்று மிரட்டுவர்.
Termination கொடுத்து விட்டால் எந்த நிறுவனத்திற்கு சென்று வேலை வாங்க முடியாது. அதனால், தங்கள் பயம் காரணமாகவே பல சத்யம் ஊழியர்கள் வேலையை விட்டு சென்றனர். வேலையில்லாமல் சத்யம் நிறுவனத்தில் இருப்பவர்களின் நிலை இன்று வரை இது தான். எந்த நேரமும் தங்களுக்கு ஹெச்.ஆரிடம் இருந்து இப்படி ஒரு போன் வரலாம் என்ற பயத்தில் தான் அங்கு வேலை செய்கிறார்கள்.
மிக அமைதியாக பத்திரிக்கைகளுக்கு தெரியாமல், தொலைக்காட்சி மீடியாவை ஏமாற்றி தனது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜூ "எல்லா பணத்தை என் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக செலவு செய்தேன். அதில் இருந்து ஒரு பைசா கூட நான், என் உறவினர்கள் எடுக்கவில்லை” என்று கூறுகிறார். தனது நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக இருந்தால் வளர்ந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் (M&A) கொண்டு இருக்கலாம். பொய்யான லாபத்தை காட்டி சத்யம் பங்குகளின் விலையை உயர்த்தி மக்கள் பணத்தை ஏன் ஏப்பம் விட வேண்டும்? இனி தவறு மறைக்க முடியாத நிலையில் "ஊழியர்களின் பெயரை சொல்லி கருணை சம்பாதிக்க பார்க்கிறார்”. தன் தவறு தனது ஊழியர்களிடம் இருந்து ஆதரவு எதிர்பார்க்கிறார்.
தனது நிறுவனம் செய்த மோசடிக்கு யாரூக்கு சம்மந்தமில்லை என்பது எல்லோர் காதிலும் (செஃபி உட்பட) பூ சுத்துவது போல் தனது ராஜினாமா கடிதத்தில் ஒன்று குறிப்பிடுயிருந்தார். தன் நிறுவனத்தில் நடந்த மோசடி எந்த போர்ட் மெம்பர்ஸ்க்கும் தெரியாது என்று கூறியுள்ளார். சத்யம் ஆடிட் செய்த ஆடிட்டர்கள், போர்ட் மெம்பர்ஸ் எல்லோருக்கும் இதில் கண்டிப்பாக பங்கு இருக்க வேண்டும். மாதம் சம்பளம் வாங்கும் நாமே வீட்டு வரவு, செல்வை பார்க்கும் போது கோடி கணக்கில் முதலீட்டு செய்த போர்ட் மெம்பர்ஸ் ஆண்டு நிதி கணக்கை பார்க்காமல் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்பது மிக அபத்தமாக உள்ளது. படிக்காத பாமரன் கூட எவ்வளவு செலவானது என்று கேள்வி கேட்பான். அந்த கேள்வி கூட கேட்க தெரியாதவர்கள் போர்ட் மெம்பர்ஸ்யில் இருக்கிறார்களா ? அல்லது கேள்வி கேட்காதவர்களை போர்ட் மெம்பர்ஸாக வைத்திருக்கிறார்களா ? என்று புரியவில்லை.
சிறு முதலீட்டாளர்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய சுதந்திர போர்ட் இயக்குநர் (Independent Board Director) சில நாட்களுக்கு முன்பு தான் தன் வேலையை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகள் நடந்த மோசடியை கேள்வியை கேட்காமல் அமைதியாக இருந்தவர், திடீர் நல்லவன் போல் சத்யம் விட்டு ஒதுங்கிய அந்த Independent Board Director மீதும் தவறு இருக்கிறது.
இப்படி சத்யம் நிறுவனத்தில் பல பேர்களுக்கு பங்கு உண்டு என்பது தெளிவாக புரிக்கிறது. ஆனால், ராமலிங்க ராஜூ தன் மீது தவறை சுமத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்ற நினைக்கிறார். சத்யம் நிறுவனத்தின் மோசடியால் உலக வர்த்தக பார்வையில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் நேர்மையை சந்தேகிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.
முதலீட்டாளார்களின் பணத்திற்கு செஃபி தலையிட்டு ஒரு தீர்வு காணும். சத்யம் நிறுவனத்தை வாங்க வேறு ஒரு நிறுவனம் முன் வரும். ஆனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலை போனால்...... இன்னும் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாகும். பண மோசடி போன்ற போன்ற பிரச்சனை வரமால் செஃபி எடுக்கும் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். வேலையில்லாத திண்டாட்டம் வரமால் இருக்க என்ன செய்ய போகிறார்கள் ????
கேள்விகள் மட்டுமே உள்ளன. பதில் பண முதலைகளிடம் உள்ளது. விழுங்கிய பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பதால் விடைக்காக பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி ; குகன்
கொசுறு செய்தி :
சத்யம் நிறுவனத்தில் 10 ஆயிரம் பேர் பணிநீக்கம் |
சம்பளம் கொடுப்பதற்கே, சத்யம் நிறுவனத்திடம் பணம் இல்லை. எனவே, அடுத்த மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீக்கப்படக்கூடும். உபரியாக சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் இருப்பதால், சம்பளம் 10 சதவீதம் குறைக்கப்படக்கூடும். இவற்றை எல்லாம் எதிர்பார்த்து, சத்யம் நிறுவன ஊழியர்கள் வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலைவரை, சத்யம் ஊழியர்கள் 7,800 பேர் வேலைவாய்ப்பு இணையதளத்தில் விண்ணப்பித்திருந்தனர். புதன்கிழமை பிற்பகலுக்குள் இந்த எண்ணிக்கை 14 ஆயிரமாக உயர்ந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பண நிலைமை திருப்திகரமாக இல்லை என்று சத்யம் நிறுவனத்தின் இடைக்கால தலைவர் ராம் மைனாம்பதி ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையே, ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஐ.டி.-பிபிஓ சங்கம் அறிவித்துள்ளது.
நன்றி : அதிகாலை
0 comments:
Post a Comment