சூர்யா 1: வித்தியாச நடிப்புக்கு விக்ரம்தான் தூண்டுகோல்
'நான் கடவுள்' - பாடல் வெளியிட்டு விழாவில் சூர்யா பேசியது - 'நான் கடவுள்' உருவாக்க தாமதமாகிவிட்டது என சொல்கிறார்கள். தீபாவளி, பொங்கலுக்காக தயாரிக்க சினிமா ஒன்றும் பட்டாசு, இனிப்பு அல்ல. சினிமாவை நான் நேசிக்க, நல்ல படங்களை தேர்வு செய்ய பாலாதான் காரணம். அவரது 'நந்தா' படத்தில் நடிக்காமல் போயிருந்தால் எனது சினிமா வாழ்க்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும்.
'சேது' படம் பார்த்தபோது இந்த மாதிரி வேடத்தில் நடிக்க வேண்டும் என விக்ரமை பார்த்து தோன்றியது. அவரை பார்த்துதான் இப்போதும் வித்தியாச வேடங்களை செய்ய வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கிறேன். அதற்குள் ஆர்யா வந்துவிட்டார். இனி அவரையும் தாண்டி ஓட முயற்சிக்க வேண்டும். ஆனால் 'நான் கடவுளி'ல் நான் நடித்திருந்தால் ஆர்யா அளவுக்கு நேர்மையாக செய்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
சூர்யா 2: இனி எந்த ஹீரோவையும் இயக்க மாட்டேன் ( இது S.J.சூர்யா )
'இனி எந்த ஹீரோவிடமும் கால்ஷீட்டுகாக நிற்கமாட்டேன், எந்த ஹீரோ படத்தையும் டைரக்ட் செய்ய மாட்டேன்' என்றார் எஸ்.ஜே.சூர்யா.
அஜீத் நடித்த 'வாலி', விஜய் நடித்த 'குஷி' உட்பட பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘புலி’ படத்தை இயக்கி வருகிறார். அவர் கூறியதாவது:
இப்போது நடித்துள்ள 'நியூட்டன் மூன்றாம் விதி' நிச்சயம் வெற்றி பெறும். தெலுங்கில் இயக்கிவரும் 'புலி' ஏப்ரல் மாதம் திரைக்கு வரும். அதே படத்தை, அதேபெயருடன் தமிழில் இயக்குகிறேன். போலீஸ் அதிகாரி வேடம் ஏற்று நடிக்கிறேன். 2 வருடங்களுக்கு முன்பு இக்கதையில் நடிக்க எனக்கு பக்குவம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டேன். அந்த பக்குவம் வந்திருக்கிறது. ஒவ்வொருவரும் தனது கடமையை சரியாக செய்தால் உலகில் எந்த பிரச்னையும் இருக்காது என்பதுதான் 'புலி' படத்தின் கரு.
திரையுலகுக்கு வந்தபோதே இயக்குனராக வேண்டும் என்று ஆசை இல்லை. ஹீரோவாக வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. அதை நோக்கித்தான் இனி எனது பயணம் இருக்கும்.
இனிமேல் எந்த ஹீரோவிடமும் கால்ஷீட்டுக்காக நிற்க மாட்டேன். எந்த ஹீரோவை வைத்தும் டைரக்ட் செய்ய மாட்டேன். என்னை நானே இயக்குவேன் அல்லது வேறு இயக்குனர் இயக்கத்தில் நடிப்பேன். 'இசை' என்ற கதை என்னிடம் இருக்கிறது. அதை இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இயக்கி நடிப்பேன். தமிழ் 'புலி'க்கு பிறகு எனது அடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும்.
குறிப்பு : தலைப்பை பார்த்துட்டு நீங்க வேற எதையாவது எதிர் பார்த்து வந்து இருந்தா நிர்வாகம் பொறுப்பு ஆகதுங்கோ....கோ.... கோ...(echo)
0 comments:
Post a Comment