த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்து வரும் நிலையில் அந்தப் படத்தை விளாசித் தள்ளியிருக்கிறார் இந்தி(ய) சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான அமிதாப் பச்சன்.

இது குறித்து தனது ப்ளாக்கில் அவர் எழுதியுள்ளதாவது:

டேனி பாய்லே இயக்கி ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், இந்தியாவின் ஏழ்மையை, அழுக்கை, அதனால் ஏற்படும் வேதனைகளை வெளிச்சம் போட்டுக காட்டுகிறது. இந்தியாவில் இந்த நிலை என்றால், வளர்ந்த நாடுகளில் அதற்கேற்ற மோசமான எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால் அவற்றை யாரும் படம் பிடித்துக் காட்டி விருது வாங்க முயற்சிப்பதில்லை.

ஸ்லம்டாக் மில்லியனேர் படம் ஒரு இந்தியரால் எழுதப்பட்டு, மேற்கத்தியரால் படமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்று உலகின் பார்வை அதன்மீது பதிந்துள்ளது. இந்தியாவின் ஏழ்மையைப் படமாக்கினால் மட்டும் பாராட்டுகிற மேற்கத்திய உலகம், இந்தியாவின் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்று புகழப்பட்ட எத்தனையோ சிறந்த வணிகப் படங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்கு சத்யஜித்ரேயை மட்டுமே பாராட்டத் தெரிந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக பலவித உத்திகளைப் பயன்படுத்தி மக்களைச் சந்தோஷப்படுத்தி வரும் இந்திய கமர்ஷியல் சினிமா அவர்களுக்குத் தெரிவதே இல்லை.

சத்யஜித்ரே இயல்பான விஷயங்களைத் திரையில் காட்டினார். அவருக்கு தரப்பட்ட பாராட்டு நியாயமானதே. ஆனால் மற்றவர்கள் எடுத்த வணிகத் திரைப்படங்களை கேன்ஸ், வெனிஸ் உள்ளிட்ட எத்தனையோ திரைவிழாக்களில் பங்கேற்கக் கூட அனுமதிக்கவில்லை.

இப்போதும் பாருங்கள்... பல சர்வதேச தொலைக்காட்சிகள் இந்தித் திரைப்படங்களைத்தான் முதன்மை நேரத்தில் காட்டி வருகின்றன. வசூலைக் குவிக்கின்றன. கொட்டும் பனியில் லீசெஸ்டர் ஸ்கொயரில் இந்திப் பட பிரியமிருக்கு காத்திருக்கிறார்கள் ஹாலிவுட் படங்களை மட்டுமே பாராட்டும் வெள்ளைக்காரர்களும்.

ஆனால் சர்வதேச அங்கீகாரம் தருவதற்கு மட்டும் யோசிக்கிறார்கள்..., என அமிதாப் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தட்ஸ்தமிழ் டாட் காம்

5 comments:

//இந்தியாவின் ஏழ்மையைப் படமாக்கினால் மட்டும் பாராட்டுகிற மேற்கத்திய உலகம், இந்தியாவின் மாஸ் எண்டர்டெயின்மெண்ட் என்று புகழப்பட்ட எத்தனையோ சிறந்த வணிகப் படங்களை கண்டுகொள்ளவே இல்லை. அவர்களுக்கு சத்யஜித்ரேயை மட்டுமே பாராட்டத் தெரிந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக பலவித உத்திகளைப் பயன்படுத்தி மக்களைச் சந்தோஷப்படுத்தி வரும் இந்திய கமர்ஷியல் சினிமா அவர்களுக்குத் தெரிவதே இல்லை//

நல்லா கேட்டாரு கேள்வி... இவனுக நம்மை மட்டம் தட்டுற படத்துக்கு மட்டும் தான் விருது தருவாங்க..எத்தனையோ நல்ல படங்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ளன, அதெல்லாம் இவர்களுக்கு கண்ணு தெரியாது.

அவனுக ஊரு ஆஸ்காருக்கு அலைவதை முதல்ல நிறுத்தனும்..நம்ம நாட்டு தேசிய விருதை போல அவர்கள் நாட்டு விருது ஆஸ்கர் ..இதுக்கென்னமோ இது உலக விருது மாதிரி தாங்கிட்டு இருக்காங்க....

Don't agree with Amitabh.

poverty does exist even in richer nations but then their citizens get the basic amenities without struggling too much.

இவட் நடித்த படத்திற்கு விருது கிடைக்காத கோபம் தான்.

வாங்க கிரி, புருனோ

அமிதாப் போன்றவர்கள் நடிக்கும் மசாலா படங்களுக்கு விருது கொடுக்கவெண்டும் என நினைக்கிறார்கள். அது தான் பிரச்சினையே.

விருது கிடைத்தாலும் புலம்பல். இல்லையென்றாலும் புலம்பல்.

இந்த படத்தை நேற்று பார்த்தேன். மிகவும் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது. மும்பையில் இருந்தபோது இதுபோன்ற இடங்களையும் ஆட்களையும் நேரடியாகவே சந்தித்த அனுபவம் இருக்கிறது. படத்தில் காண்பிக்கப்படும் குடிசை பகுதி பின்னாளில் எப்படி மாறுகிறது என்பதையும் அங்கிருந்தவர்கஓள் எவ்வாறு மாறுகிறார்கள் என்பதும் விவரமாகவே காட்டப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன் ரசிகனாக இருக்கும் படத்தின் கதாநாயகனான சிறுவன் கழிவறையில் இருக்கும் போது ஹெலிகாப்டரில் அமிதாப் வந்திருக்கிறார் என தெரிந்து கழிவறை கதவு அடைப்பட்ட நிலையில் கழிவுகுழிக்குள் இறங்கி வெளிவந்து அமிதாப்பிடம் புகைப்படத்தில் கையெழுத்து வாங்கவருவது கொஞ்சம் அதிகப்படியாக இருந்தாலும் இப்படியும் நடக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மிக நன்றாக படம்பிடித்திருக்கின்றனர்.
பாராட்டுவோம்.


குத்தாட்டம், ஒருவன் ஆயிரம் பேரை அடிப்பது, கொல்வது, பெண்கள் முக்கால் நிர்வாணத்துடன் வருவது போன்ற படங்களுக்கு தான் விருது கொடுக்கவேண்டும் என அமிதாப் எதிர்ப்பார்க்கிறார் போல.

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter