கந்தசாமி பாடலுக்கு சொந்தம்கொண்டாடி கோர்ட் படியேறியுள்ளார் ஒரு கவிஞர்.
கலைப்புலி தானு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கிவரும் படம் கந்தசாமி. விக்ரம்-ஸ்ரேயா ஜோடிப்போடும் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரியா, மெக்சிகோ என பல நாடுகளில் படமாக்கப்பட்டு வரும் இதில் விக்ரம் பெண் வேடமேற்று நடித்துள்ளாராம்.
படத்தில் "எக்ஸ்யூஸ் மி மிஸ்டர் கந்தசாமி..." என்ற பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. விக்ரம்-ஸ்ரேயாஆடிப்பாடும் இப்பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். ஆனால் இந்த பாடலை தான்தான் எழுதியதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் பாடலாசிரியர் வி.இளங்கோ. பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம்பெறும் "மஞ்சக்காட்டு மைனா என்னை கொஞசி கொஞ்சி போனா..." பாடலை எழுதியவர்தான் இளங்கோ.
கந்தசாமி பாடல் குறி்த்து நீதிமன்றத்தில் இளங்கோ தாக்கல் செய்துள்ள மனுவில், "விரைவில் வெளிவரவுள்ள கந்தசாமி படத்தில் இடம்பெறும் எக்ஸ்கியூஸ் மி மிஸ்டர் கந்தசாமி பாடல் நான் எழுதியபாடல். ஆனால் வேறு ஒரு பாடலாசிரியர் எழுதியுள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது, எனவே இந்தப் பாடலை தடுத்து நிறுத்தவேண்டும். இதற்காக ரூ.1 லட்சம் நஷ்டஈடும் வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், இது குறித்து பதில் தருமாறு இயக்குனர் சுசிகணேசன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், தயாரிப்பாளர் தானு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
கதையதான் காப்பி அடிச்சுட்டு இருந்தாங்க, இப்போ கவிஞர்களின் பாடல்களிலும் இப்படியொரு பிரச்சனையா சாமி...?
நன்றி : சிநிசௌத் டாட் காம்
1 comments:
ஏன் சகா தமிழ்மணத்துல இணைக்கல?
Post a Comment