"பாக்., அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அமெரிக்க செனட் உறுப்பினர் பெர்மன் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான். அணுசக்தி தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களையும், தொழில் நுட்பங் களையும் ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, இவர் கைது செய் யப்பட்டார். தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஏ.கியூ.கான் நெட்ஒர்க்கின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது. இதுபற்றி அமெரிக்க செனட்டரும், வெளியுறவு கமிட்டியின் தலைவருமான பெர்மன் கூறியதாவது: அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும், வரவேற்கத் தக்கது. ஆனால், இது போதுமானதல்ல. அணு ஆயுதம் தொடர்பான ரகசிய வர்த்தகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த விவகாரத்தில் ஈரான், வட கொரியா நாடுகளுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.கியூ.கானுடன் தொடர்புடையவர்கள், அணுசக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க, புதிதாக பொறுப்பேற்க உள்ள ஒபாமா தலைமையிலான அரசு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பெர்மன் கூறியுள்ளார்.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment