சினிமாவில், கட்டுமஸ்தான உடற்கட்டுடன் வரும் இளம் ஹீரோக்கள் போல, தங்களின் மார்பை அழகுபடுத்திக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் மோகம் இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.பாலிவுட் ஹீரோக்கள் ஷாருக்கான், அக்ஷய் குமார், அமீர் கான் போன்றவர்கள், கடும் உடற்பயிற்சி மூலம், பரந்துவிரிந்த மார்பு கொண்டுள்ளனர். இவர்கள் திறந்த மார்புடன் திரையில் தோன்றும் போது, கவர்ச்சிகரமாக தோற்றம் அளிக்கின்றனர்.அவர்களைப் போல, தங்களின் மார்புகளை அழகுபடுத்திக் கொள்வதில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பெரு நகரங்களில் வசிக்கும் 20 வயதுகளில் இருப்பவர்கள் இதற்கான சிகிச்சைக்காக ஏராளமாக செலவிட தயாராக உள்ளனர்.இதற்காக, மருத்துவமனைகளில் பிரத்யேக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. "தற்போதைய நிலையை ஒப்பிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சிகிச்சைகளுக்கு வந்தவர்கள் வெறும் 10 சதவீதம் மட்டுமே. பெரும்பாலான இளைஞர்கள், பரந்து விரிந்து, திடமான, முடிகளற்ற மார்பு வேண்டும் என்று விரும்புகின்றனர்' என்று கூறினார், இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் காஸ்மடிக் சர்ஜரி துறை மூத்த டாக்டர் அனுப் திர்.""தங்கள் உடற்கட்டை அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு முன் பெண்கள் தான் இதுபோன்ற அழகு சிகிச் சைக்கு வந்து கொண்டிருந்தனர். தற்போது ஆண்களுக்கென்று தனிப்பிரிவே துவக்கிவிட்டோம்,'' என்றும் அவர் கூறினார்.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment