இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் 33 சதவீதம் அதிகரித்து ரூ. 1,641 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.
இந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு வரவு-செலவு அறிக்கையை இன்போசிஸ் இன்று வெளியிட்டது. சந்தையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட இன்போசிஸ் வருவாயும் லாபமும் அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இன்போசிஸ் வருமானம் 36 சதவீதம் உயர்ந்து ரூ. 5,429 கோடியாகியுள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 3,999 கோடியாக இருந்தது.
அதே போல லாபமும் ரூ. 1,641 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் ரூ. 1,231 கோடியாக இருந்தது. உலக அளவிலான பொருளாதாக மந்த நிலையிலும் கூட அதன் லாபம் 33 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த காலாண்டில் இன்போசிஸ் கூடுதலாக 30 கிளையன்டுகளை (ஆர்டர்கள்) பெற்றுள்ளது.
மேலும் 2,772 புதிய ஊழியர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இன்போசிஸ், அதன் துணை நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 1,03,078 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்திலிருந்து வேலையை விட்டுச் செல்வோர் எண்ணிக்கையும் இந்த காலாண்டில் பெருமளவில் குறைந்துவிட்டது.
இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து இன்று இன்போஸிஸ் பங்குகள் விறுவிறுப்பாக கைமாறத் தொடங்கின. ஒரே நேரத்தில் 19.75 லட்சம் பங்குகள் அதிகபட்சமாக தலா ரூ.1,218 வீதம் விற்பனையாகின. இது நேற்றைய விலையை விட 5.31 சதவீதம் அதிகமாகும்.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment