பீகார் மாநிலத்தில் பாகிஸ்தான் என்ற கிராமம் உள்ளது. இங்கு, குறைந்தளவு மக்களே வசிக்கின்றனர். அதிசயமாக இவர்களில் யாரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. பீகாரின் புர்னியா மற்றும் அராரியா எல்லைக்கு இடையே 30 கி.மீ., தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. புர்னியா மாவட்டத்தின் காஷ்மீர் வட்டத்துக்கு உட்பட்டது இந்த கிராமம் என்பது இன்னொரு வியப்பூட்டும் விஷயம்.இந்த கிராமத்தில் வைக்கோல் வேய்ந்த 18 வீடுகள் உள்ளன.
இங்கு மசூதியோ, கோவிலோ கிடையாது. அதே போல, மருத்துவமனையோ, பள்ளியோ கிடையாது.இந்த கிராமத்துக்கு பாகிஸ்தான் என்று எப்படி பெயர் வந்தது என்பது, இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர்களுக்குக் கூட தெரியவில்லை. 80 வயது முதியவர் ஜெய்பால் சோரன் என்பவர், ""பலப் பல ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் சிலர் இங்கு வந்து வசித்தனர். அதனால் இந்த பெயர் வந்திருக்கலாம்,'' என்றார். அரசின் வருவாய்த்துறை ஆவணங்களில் இந்த கிராமத்தின்பெயர்,"பாகிஸ் தான்' என்றே இடம் பெற்றுள்ளது. அதே போல இந்த கிராமம், "ஸ்ரீநகர்' வட்டத்துக்கு உட்பட்டது என்பதும் அதிகாரபூர்வமாக இடம் பெற்றுள்ளது. புர்னியா மாவட்ட கலெக்டரிடம் கேட்ட போது, ""நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இந்த கிராமம் குறித்த மேலும் பல உண்மைகளையும், பின்னணிகளையும் ஆராய வேண்டியுள்ளது,'' என்றார்."பாகிஸ்தான்' கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கல்வியறிவு இல்லாதவர்களே. குழந்தைகளைப் போல அப்பாவிகளாக இருக்கின் றனர். மும்பையில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்தும் இவர்களில் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. நாகேந்திர டுட்டு என்ற இளைஞரிடம் இது குறித்து கேட்ட போது, மிக ஆவேசமாக, கையை முறுக்கிக் காட்டினார். சிலர், "இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடந்து கொண்டு இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டோம்' என்று அப்பாவிகளாகக் கூறினர்.
0 comments:
Post a Comment