முருகதாஸ் இப்போதைக்கு தமிழுக்கு வருவதாகத் தெரியவில்லை!
கஜினி வெற்றியால் இந்திப்பட உலகில் நிலையான இடத்தைப் பிடித்துவிட்டார் முருகதாஸ். அமீர் கானை இயக்கிய கையோடு அடுத்து ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார்.
மிகவும் பிரமாண்டமான முறையில் தயாராகும் இப்படத்திற்கான கதை விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு கதைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தியில் பெரிய தயாரிப்பாளரான யாஷ் சோப்ரா தயாரிக்க இருக்கிறார்.
இந்தி கஜினி கூட்டணியே இந்தப் படத்திலும் தொடர்கிறது. அதாவது, கஜினிக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு செய்த ரவி.கே. சந்திரன், ஷாருக்கான் படத்திற்கும் வேலை செய்ய இருக்கின்றனர்.
நாயகி நிச்சயம் அசின் இல்லையாம். இந்தியில் உள்ள ஒரு முன்னணி நடிகையே நடிக்கவுள்ளார்.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment