இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆகப் போகும் நான் கடவுள் திரைப்படத்தை எதிர்க்க இப்பவே தயாராகி கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிக கண்மணிகள்...
ஏற்கனவே சில இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்புகளை சமாளித்து ரிலீஸ் ஆகும் நான் கடவுளுகு புதிய பிரச்சினை ரெடி..
அஜித்துக்கும் நான் கடவுளுக்கும் உள்ள தொடர்பை பார்க்க ஒரு ஃப்ளாஸ்பேக் ...
2006 - ஆண்டு தொடக்கத்தில் நான் கடவுள் படம் அஜித் தடிப்பில் உருவாக இருந்தது.. 'அஜித் - பாலா' காம்பினஷன் கோலிவுட் - இல் பரபரப்பாக பேசப்பட்டது... இந்த படத்திற்காக அஜித் நீண்ட தலை முடி வளர்த்து வந்தார். (அந்த முடியுடன் தான் வரலாறு , பரமசிவன் , திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார்) . மே மாதம் தொடங்கவேண்டிய படபிடிப்பு தொடங்கவில்லை.. ரொம்ப நாள் வெயிட் பண்ணி பார்த்த அஜித்; இனி இது ஒத்து வராது என எண்ணி பாலா-விடம் பேசி விட்டு படத்திலிருந்து விலகி கொண்டார்..
இதன் பிறகு தான் பிரச்சினை ஆரம்பமானது..
அஜித்தை ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார் பாலா.. ஹோடேலில் காத்திருந்த அஜித்திற்கு அதிர்ச்சி... பாலா, தன்னுடன் சில தயாரிப்பு நிவாகிகள் , விநியோகஸ்தர்கள் புடை சூழ வந்து.. அஜித்திடம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் இப்பவே காட்ட சொல்லி காட்டமாக நடந்துகொண்டனர்; பணம் கட்டினால் தான் வெளியே போக முடியும் என எச்சரித்தனர் பாலா கோஷ்டியினர்; இதை முற்றிலும் எதிபார்க்காத அஜித் மிகவும் அதிர்த்து போனார். (பணச்சிக்களில் மாண்டிகொண்டு பாடபிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு தன் சொந்த பணத்தில் உதவி புரிந்துள்ளார் அஜித் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ...)
லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட 'அஜித்'திற்கே இந்த நிலைமையா? என யோசித்த மற்ற நடிகர்கள் இதில் உடனடியாக 'நடிகர் சங்கம்' நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்; புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என அதன் தலைவர் அறிக்கை கொடுத்தார்; இதை பெரிய பிரச்சினையாக்க விரும்பாத அஜித் புகார் கொடுக்காமல் பிரச்சினைக்கு அப்போது முற்று புள்ளியிட்டார்..
இந்த காட்டுமிராண்டி தனத்தை கேள்வி பட்ட அஜித் ரசிகர்கள் கொந்தளித்தனர். சென்னையில் பாலா அலுவலகம் முன் ஆர்பாட்டம் நடத்தினர்; போலீஸ் வந்தும் இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை; பின்னர் அஜித்தின் வேண்டுகோளுக்கு இணங்க அப்போது சமாதனமாயினர்.. ஆனால் பாலா-வின் 'நான் கடவுள்' ரிலீஸ் ஆகும் போது பார்த்துகொள்ளலாம் என நினைத்து ரசிகர்கள் சமாதனமாயினர் என்பதே உண்மை...
இப்போது 'நான் கடவுள்' ரிலீஸ் ஆக உள்ளதால்; Revenge' எடுக்க ரசிகர்கள் தயாராகிவிட்டனர்... என்ன மாதிரியான 'Revenge' என்பது போக போகத் தான் தெரியும்...
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
10 comments:
அநாகரிகதின் உச்சம் அது. பிதாமகன் படம் முடிந்தும் கூட விக்ரமிற்கு தர வேண்டிய பணத்தை பாலா தரவில்லை. விக்ரமும் பெருந்தண்மையாக விட்டு கொடுத்து பிரச்சணையை முடித்து கொடுத்தார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அணானி நண்பா(நண்பி...
என்னய்யா பீதிய கெளப்புறீங்க!
ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை நிச்சயம் காட்ட வேண்டும். அதனால் படம் ஓடுவதற்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும், அவர்கள் தங்கள் எதிர்ப்பை நிச்சயம் காட்ட வேண்டும். தல இந்த விஷயத்தில் இன்னும் அமைதியாக எந்த ஒரு கருதும் சொல்லாமல் இருப்பது இன்னும் உறுத்துகிறது
பரமசிவன் படத்தை தாயரித்தது பாலாவின் நிறுவனம்தான். அந்த படித்தில் நடித்ததுகூட பாலவின் நிர்பந்தத்தில்தான்.
பாலா நடத்திய அந்த கட்டபஞ்சாயத்தில் தம்பி பட இயக்குனர் சீமான்னும் சேர்ந்து மிரட்டியதாக கேள்விபட்டேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி 'விஜய் ரசிகன்'
//பாலா நடத்திய அந்த கட்டபஞ்சாயத்தில் தம்பி பட இயக்குனர் சீமான்னும் சேர்ந்து மிரட்டியதாக கேள்விபட்டேன்//
---'டைமண்ட்' பாபு - என்ற விநியோகஸ்தர் பேரு கூட அடிபட்டிச்சி...
//பாலா நடத்திய அந்த கட்டபஞ்சாயத்தில் தம்பி பட இயக்குனர் சீமான்னும் சேர்ந்து மிரட்டியதாக கேள்விபட்டேன்//
--இப்போ அவரு 'கம்பி' எண்ணிகிட்டு இருக்காரு...
தலயை வைத்து ஆரம்பிக்க யோசித்து பின்பு தல கழண்டு கொண்ட படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்கள்தான். உதாரணம் : கஜினி, நந்தா.
நீங்கள் சொன்ன இந்த மோசமாக episode பற்றி முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. அஜித்தின் அணுகுமுறையே தனி. இதே போன்ற ஒரு நிலை விஜய், சூர்யா போன்ற நடிகர்களுக்கு வந்திருந்தால் நிலையே வேறாக இருந்திருக்கும். பொறுத்திருப்போம்
Post a Comment