பிப்ரவரி 22 ம் தேதி நடைபெறவுள்ள 81 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை ஒட்டி சற்று முன் அனைத்து பிரிவுகளிலும் பரிந்துரைப்புகள்(Nomination) வெளியிடப்பட்டுள்ளன.A.R.ரஹ்மான் சிறந்த இசையமைப்பு, சிறந்த பாடல் என இரு பிரிவுகளில் மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
Slumdog Millionaire படத்திற்காக சிறந்த இசையமைப்பு பிரிவின் கீழ் ஒரு முறையும், சிறந்த பாடல் பிரிவின் கீழ் இரண்டு பாடல்களுக்காக (இரண்டும் Slumdog Millionaire படத்திலிருந்து)இரு முறையும் என மூன்று முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.Slumdog Millonaire திரைப்படம் சிறந்த திரைப்படம்,இயக்குனர்,ஒளிப்பதிவு,எடிட்டிங்,ஓலிப்பதிவு எடிட்டிங்,ஒலி இணைப்பு,திரைக்கதை என்ற பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப்படமான ஸ்லம்டாக் மில்லியனர், உலக அளவில் பேசப்படும் திரைப்படமாக உருமாறி உள்ளது. மும்பை குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற இளைஞன் ஒருவன் (டீ பாய்) கோன்பனேகா குரோர்பதி போன்ற டிவி பரிசுப் போட்டியில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லி பல கட்டங்களைக் கடந்து கோடீஸ்வரன் ஆவதே கதை.
லண்டனைச் சேர்ந்த டேனி போய்லே என்பவர் இயக்கிய இந்தத் திரைப்படத்தில் அனில் கபூர், தேவ் படேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ என்ற பாடலின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த வாரத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது. இது ஆஸ்கர் விருதுக்கான முன்னோட்டம் எனக் கூறப்பட்டது.
அதற்கேற்றவாறு தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் 3 விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை (சைமன்), சிறந்த படத்தொகுப்பு, சவுண்ட் எடிட்டிங் மற்றும சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இயக்குநர் உள்பட மொத்தம் 10 பிரிவுகளில் இந்தத் திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவின்போது ஸ்லம்டாக் மில்லியனருக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பது தெரியவரும்.
இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ”இந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இறைவன் கருணையாலும், மக்களின் பிரார்த்தனையாலும் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்லது நடந்துள்ளது. இது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
http://www.oscars.org/awards/81academyawards/nominees.html
நன்றி :
2 comments:
நல்ல பதிவு.
ரஹ்மானால் ஆஸ்கருக்கே பெருமை...
இதனால் அனைத்து இந்தியருக்கும் பெருமை.
நட்புடன்
--குரங்கு
வருகைக்கு நன்றி குரங்கு...
Post a Comment