த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

புதிய சிஇஓ


சத்யம் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகியாக விப்ரோவின் முன்னாள் துணைத் தலைவர் விவேக் பால் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே விவேக் பாலின் பெயர் இந்தப் பதவியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது என்றும், சத்யம் நிறுவன தலைமைப் பொறுப்பை ஏற்பது குறித்துப தான் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

1999-2005 ஆண்டுகளில் விப்ரோவின் துணைத் தலைவராக இருந்தவர் விவேக் பால். விப்ரோ டெக்னாலஜிஸ் தலைமை நிர்வாகியாகவும் இருந்தார். விப்ரோ மெடிக்கல்ஸ் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர்.

விப்ரோவிலிருந்து விலகி பின்னர், டிபிஜியில் இணைந்தார். சத்யம் - மேடாஸ் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, இவர்தான் ராமலிங்க ராஜூவுக்கு பதில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.அரசு நியமித்துள்ள சத்யம் இயக்குநர் குழுவின் சிஇஓ தேர்வுப் பட்டியலில் விவேக்கின் பெயர் முதலிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, எம்பஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜெர்ரி ராவ் பெயரும் சத்யம் தலைமைப் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ராமலிங்கராஜு உள்ளிட்ட மூவரின் சிறைக் காவல் நீட்டிப்பு

சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ராமலிங்க ராஜு, அவரது தம்பி ராமராஜு உள்ளிட்ட 3 பேரின் சிறைக் காவலும் ஜனவரி 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணையும் அன்றைக்கே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜு சகோதரர்ளை செபி விசாரிக்கவும் ஹைதராபாத் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது.

ஜனவரி 12ம் தேதி ராமலிங்கராஜு, ராமராஜு, சத்யம் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி வட்லாமணி சீனவாஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை இன்றைக்கு ஹைதராபாத் கோர்ட் தள்ளி வைத்தது.

ஜனவரி 23ம் தேதி வரை 3 பேரும் சிறைக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரின் ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. மேலும், ராஜு உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க அனுமதி கோரி செபி தாக்கல் செய்துள்ள மனுவும் இன்றே விசாரணைக்கு வந்தது.

செபி விசாரணைக்கு அனுமதி மறுப்பு

முதலில் செபியின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

செபி சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ராஜு நீதிமன்றக் காவலில்இருப்பதால் விசாரணை தாமதமாகிறது. எனவே அவரை விசாரிக்க அனுமதி தர வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் சார்பில் ஆஜரான வக்கீல் பரத் குமார், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்றார்.

இதையடுத்து வருகிற 19ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார் நீதிபதி. மேலும் அதுவரை செபியை விசாரிக்க அனுமதிக்க முடியாது எனவும் கூறி விட்டார்.

இதையடுத்து ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அப்போது, போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிக்க கோரி காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராமலிங்க ராஜுவின் வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கையும் ஜனவரி 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். போலீஸ் காவலில் ராமலிங்க ராஜுவை அனுமதிப்பது தொடர்பாக ஜனவரி 17ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

இதையடுத்து ஜனவரி 19ம் தேதி வரை ராமலிங்க ராஜுவின் சிறைக் காவல் நீட்டிக்கப்பட்டது.

மேலும் 3 புதிய இயக்குநர்கள்

இதற்கிடைய சத்யம் இயந்குநர்கள் குழுவில் மேலும் 3 புதிய இயக்குநர்களை நேற்று அரசு நிர்ணயித்துள்ளது.

சிஐஐயின் நிறுவனர் தருண் தாஸ், இந்திய தணிக்கை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிஎன் மனோகரன், எல்ஐசியின் சூர்யகாந்த் பாலகிருஷ்ண மைனாக் ஆகியோர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

சத்யத்தை மீட்க நிதியுதவிக்கு முன்வரும் நிறுவனங்கள்

தொடர்ந்து ஒரு வாரகாலமாக அதிர்ச்சி மேல் அதிர்ச்சி செய்தியாக கொடுத்துக் கொண்டிருந்த சத்யம் தரப்பிலிருந்து முதல்முறையாக ஒரு நல்ல செய்தி...

புதிய இயக்குநர்கள் நியமனத்தால் சற்று நம்பிக்கை பெற்ற நிதி நிறுவனங்கள் சில, சத்யத்தை நெருக்கடியிலிருந்து மீட்க நிதியுதவி தர முன்வந்திருக்கின்றன.

இதைவிட முக்கியமான செய்தி, சத்யம் நிறுவனத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேண்டிய ரூ.1700 கோடி உடனடியாகக் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரியத் துவங்கியிருப்பதுதான்.

சத்யம் இயக்குநர் குழுவுக்கு அரசு மேலும் 3 இயக்குநர்களை நியமித்ததைத் தொடர்ந்து, சத்யம் நிறுவனத்தின் பெரிய வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப் போவதாக இல்லை என தற்காலிகமாக முடிவெடுத்துள்ளனர். இதுவே அந்த ஊழியர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் கைவிட்டுப் போகவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட சத்யம் நிறுவன பேங்கர்கள், மீண்டும் கணிசமான முதலீட்டை இறக்கத் தயாராகியுள்ளனர். ஆனால் இது சத்யம் நிறுவனத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் அல்ல. அரசு அளித்துள்ள உறுதியினால்.

இன்னொருபக்கம், சத்யம் நிறுவனத்துக்கு, வரவேண்டிய பாக்கித் தொகை எவ்வளவு என்று புதிய இயக்குநர்கள் குழு கணக்குப் பார்க்கத் துவங்கியுள்ளது.

இதுவரை, ரூ.1700 கோடி அந்நிறுவனத்துக்கு வரவேண்டியிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தத் தொகை கூடிய விரைவில் வந்துவிடும் என்றும், இதே போல இன்னும் பலகோடி ரூபாய் பாக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் இயக்குநர் குழுவின் உறுப்பினர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.

'சத்யம் நிறுவனத்துக்கு வரவேண்டியுள்ள தொகை முழுவதுமாகக் கிடைத்தாலே போதும், எந்த நிதியுதவியும் அந்த நிறுவனத்துக்குத் தேவையில்லை. சத்யம் மூடப்பட்ட நிறுவனம் அல்ல. இன்னும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிற நாட்டின் பெரிய ஐடி நிறுவனம். எனவே நிதிப் பிரச்சினை விரைவில் தீரும் என்றே நம்புகிறேன்', என்றார் பரேக்.

'மைனாம்பதி ஓடவில்லை!!'

இந்நிலையில் சத்யம் முன்னாள் இடைக்கால தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுவது குறித்து தீபக் பரேக்கிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், 'மைனாம்பதியும், சில மூத்த அதிகாரிகளும் வெளிநாடுகளில் உள்ள சத்யம் நிறுவன வாடிக்கையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கி அவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் உள்ளனர். அவர்களில் பலரும் என்னுடன் பேசிக்கொண்டுதான் உள்ளனர், மைனாம்பதி உள்பட', என்றார் பரேக்.

நன்றி ; தட்ஸ்தமிழ் டாட் காம்

2 comments:

படத்திலை நடக்கிறபோலேயே இருக்கே

வருகைக்கு நன்றி kajan...

//படத்திலை நடக்கிறபோலேயே இருக்கே//

---சீக்கிரம் ஒரு படம் இந்த கதைய base வரும்...

Post a Comment

Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter