ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரிப்பு மற்றும் இரட்டை வேட நடிப்பில் சரித்திரம் படைத்த அடிமைப் பெண் படம் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸாகிறது.
டி.டி.எஸ் இசை மற்றும் சினிமாஸ்கோப் தொழில் நுட்பத்துக்கு இந்தப் படத்தை மறுபடியும் மாற்றும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், வெளியான அடிமைப்பெண், வசூலில் புதிய சாதனைப் படைத்தது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருந்தனர். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை கே.வி.மகாதேவன் இசை.
இன்றைய படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வகையில் டிஜிட்டல் மற்றும் டி.டி.எஸ் தொழில் நுட்பத்தில் இந்தப் படமும் கலக்க வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு முயற்சியில் இறங்கியுள்ளது டைமண்ட் பிக்சர்ஸ்.இந்தப் படத்தைத் தொடர்ந்து எம்ஜிஆர் பிக்சர்ஸ் தயாரிப்பில், மக்கள் திலகம் இயக்கத்தில் உருவான முதல் படமான நாடோடி மன்னனையும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றப் போகிறார்கள்.
ரீமிக்ஸ் , ரீமேக் என பழைய கல்லை புதிய ஜாடியில் தரும் கோலிவுட்டின் இந்த புதிய முயர்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
2 comments:
//ரீமிக்ஸ் , ரீமேக் என பழைய கல்லை புதிய ஜாடியில் தரும் கோலிவுட்டின் இந்த புதிய முயர்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... //
உண்மை....
வருகைக்கு நன்றி சுரேஷ்..
Post a Comment