இன்று நியுசிலாந்தில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் 60 பந்துக்களில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆட்டத்தின் 18.4 வது பாலில் இமாலய சிக்ஸர் அடித்து இந்த சதத்தை சேவாக் பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் குறைந்த பந்துகளில் அதிவேக சதம் அடித்ததில் இந்தியாவில் 1 மற்றும் உலகில் 7-வது வீரர் என்ற சாதனை படைத்தார் சேவாக்.
இதற்கு முன் 1988-இல் அசாருதின் 62 பந்துகளில் அதிவேக சதம் அடித்த முதல் இந்தியர் ஆவார்.(vs New Zealand - 17/12/1988)
37 பந்துகளில் அதிவேக சதம் அடித்த பாகிஸ்தானின் 'சையத் அபிரிடி' முதல் இடத்தில் உள்ளார். (vs ஸ்ரீலங்கா - 04/10/1996)
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
3 comments:
//ஆட்டத்தின் 38.4 வது பாலில் //
அய்யா இன்னைக்கு இந்தியாவுக்கு நியூசிலாந்து போட்டதே 23.3ஒவரு தேன்
//எட்வின் said...
//ஆட்டத்தின் 38.4 வது பாலில் //
அய்யா இன்னைக்கு இந்தியாவுக்கு நியூசிலாந்து போட்டதே 23.3ஒவரு தேன்
//
மன்னிக்கவும் ; எழுத்துப்பிழை - இப்போது திருத்திவிட்டேன்.
சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி
அதான பாத்தேன்... :)
நானே இன்னைக்கு கிரிக்கெட் பாதி தூக்கத்தில தான் பாத்திட்டு இருந்தேன்.(சாம்பியன்ஸ் லீக் football match விடிய விடிய பாத்ததால) பாதி தூக்கத்தில 38 ஓவரு போட்டுட்டாங்களோ நு சின்ன சந்தேகம் வேற. scoreboard பாத்த அப்புறம் தான் தெளிவாச்சிது.
உங்க பெருந்தன்மைக்கு man of the series குடுக்கலாம் :)
Post a Comment