இந்தியா - நியூசிலாந்து 4வது ஒரு நாள் போட்டியில் சேவாக்கின் அதிரடி சதத்தால் இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர்கள் மெக்கல்லம், ரைடர் அணிக்கு நல்ல துவக்கம் தந்தனர். ரைடர் 46 ரன்களும், மெக்கல்லம் 77 ரன்களும் எடுத்தனர். இரண்டு முறை மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் இருதரப்புக்கும் 47ஆக குறைக்கப்பட்டன. கடைசி ஓவர்களில் மெக்கிளஷான், எல்காட் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 270 ரன் எடுத்தது.
இந்திய தரப்பில் இஷாந்த சர்மா 2 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங், பதான், ஜாகிர்கான் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மழை காரணமாக இந்தியாவிற்கு 36 ஓவர்களில் 220 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என் நிலையில் களமிறங்கிய இந்தியா. சேவாக் அதிரடியாக விளையாடி 60 பந்துகளில் சதம் அடித்தார். இந்தியா 23.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 201 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. சேவக் (125), காம்பிர் (63) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்த மழை பெய்ததால் "டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டநாயகன் விருது சேவாக்கிற்கு வழங்கப்பட்டது.
சாதனை : இப்போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 3-0 கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
மழை குறுக்கீடு : இன்றைய போட்டியில் வருண பகவானின் விளையாட்டே சிறப்பாக இருந்தது. மழை குறுக்கீடு காரணமாக நியூசிலாந்திற்கு 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் இந்திய விளையாடிய போது பல முறை மழை குறுக்கிட்டதால் முதலில் 47 ஓவர்களில் 281 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும், அடுத்து 43 ஓவர்களில் 263 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும் இறுதியில் 36 ஓவர்களில் 220 ரன்கள் எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு இலக்கு மாற்றப்பட்டது. மீண்டும் 23.3 ஓவர்களில் மழை பெய்ததால் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
1 comments:
இந்தியாவுக்கு நெடுங்காலமாக சோதனை பூமியாக இருந்தது நியூஸிலாந்து. அந்த மண்ணில் பெற்ற இந்த வெற்றி முக்கியமானது. அதே நேரம் 3வது போட்டியில் ஃபீல்டிங்கில் வட்ட குறைகள் நிறுத்தப்படவேண்டும்
Post a Comment