முந்தையது : மறக்க முடியாத-2008 (நவம்பர்)
டிசம்பர்:
1 மகாராஷ்டிர துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் பதவி விலகினார்.
3 - மகாராஷ்டிர முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் பதவி விலகினார். அசோக் சவான் புதிய முதல்வரானார்.
8 - டெல்லி, ராஜஸ்தான், மிஸோரம் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி. மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக வென்றது.
11 - மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர் இ தொய்பாவின் முகமூடியான ஜமாத் உத் தவா அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. லஷ்கர் தலைவர் சயீத் உள்ளிட்ட 4 தலைவர்களை சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவித்தது.
13 - ஆந்திராவில் 2 என்ஜீனியரிங் கல்லூரி மாணவிகள் மீது ஆசிட் வீசிய 3 மாணவர்களை போலீஸார் சுட்டு வீழ்த்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 - தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.
- மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் கர்னல் பட்டம் வழங்கப்படும் என ராணுவம் அறிவித்தது.
15 - ஓட்டுக்கு நோட்டு விவகாரத்தில் அடிபட்ட சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங், சோனியாவின் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் அப்பாவிகள் என நாடாளுமன்றக் குழு அறிவித்தது.
- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பாக்தாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஈராக் டிவி நிருபர் முன்டாஸர் அல் ஜய்தி, ஷூக்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
- திருமங்கலம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
16 - சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
- திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளராக லதா அதியமான் அறிவிக்கப்பட்டார்.
- தெலுங்கு நடிகை பார்கவி குத்திக் கொல்லப்பட்டார். அவரது காதலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
17 - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என சன் குழும தலைவர் கலாநிதி மாறன் அறிவித்தார்.
- சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிய பெண் ரவுடி பரமேஸ்வரி அவரது தம்பிகளாலேயே வெட்டிக் கொல்லப்பட்டார்.
- திருமங்கலம் தொகுதி தேமுதிக வேட்பாளராக தனபாண்டியன் அறிவிக்கப்பட்டார்.
18 - இந்திய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம் ரத்து செய்யப்பட்டது.
19 - ஹேமந்த் கர்கரே மரணம் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் அந்துலே ராஜினாமா செய்து கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினார். ஆனால் அது பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
- இத்தாலி அருகே கடலுக்கடியில் போடப்பட்ட கேபிள்கள் நாசமடைந்ததால், இன்டர்நெட் சேவை பெரும் பாதிப்பை சந்தித்தது.
20 - சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் பெரியார் தி.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 - போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட குழந்தைகள் பலியானதாக தமிழகம் முழுவதும் பரவிய வதந்தியால் மக்கள் பெரும் பீதியடைந்து மருத்துவமனைகளை முற்றுகையிட்டனர்.
- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதி சென்னை வந்தார்.
22 - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தமிழறிஞர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து பூரண மது விலக்கு கோரி மனு அளித்தனர்.
- பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
24 - உ.பியில், முதல்வர் மாயாவதியின் பிறந்த நாள் விழாவுக்கு நன்கொடை தர மறுத்த பொதுப்பணித்துறை என்ஜீனியர் மனோஜ் குப்தா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. சேகர் திவாரி மற்றும் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
25 - மலேசியாவில் சிக்கித் தவித்த 21 தமிழக இளைஞர்கள் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர்.
26 - திருமங்கலம் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 26 பேர் களத்தில் இருந்தனர்.
27 - திமுக பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வானார். 10வது முறையாக தலைவரானார் முதல்வர் கருணாநிதி.
- திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவகாரத்தில் திமுக, அதிமுகவினர் பயங்கர மோதல்.
- அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, முன்னாள் பிரதமர் தேவெ கெளடா சந்தித்துப் பேசினார்.
- மும்பை சிறையில், தீவிரவாதி கஸாப்பை, 35 சாட்சிகள் அடையாளம் காட்டினர்.
28 - ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.
- பெங்களூரில் போலீஸாருக்குப் பயந்து ராணுவ அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்த கல்லூரி மாணவரை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
- கொழும்பு தற்கொலைப் படைத் தாக்குதலில் 8 பேர் பலி.
==>நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...
Posted by
ஷாஜி
0 comments:
Post a Comment