த்தோடா.....

இந்த கடை சரக்கும் நல்லா இருக்கே....

இவங்களுக்கு எல்லாம் பிடிக்குதாம்...

தமிழனின் எண்பது ஆண்டுகால 'பிளாக் அண் ஒயிட்' கனவில், தன்னையே வண்ணமாக நிரப்பி, நமது நீண்டகால 'கன்னித்தீவு' கனவை நிறைவேற்றியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்! கோடம்பாக்கத்திலிருந்து 'கொடாக்' (ஆஸ்கர் விருதுகள் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம்) வரைக்கும் பயணித்த ரஹ்மான், உலகமே கவனித்து வந்த அந்த மேடையில் தமிழில் பேசியதுதான் ஹைலைட்!

"நான் இங்கு ஒருவித அச்சத்துடனும், அதே நேரத்தில் பெரும் மகிழ்ச்சியுடனும் வந்தேன். ஏதோ எனது திருமணத்திற்கு வருவது போல படபடப்பாக இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் தாயின் ஆசிர்வாதம். எனக்கு தாயை தவிர வேறு எதுவும் பெரிதில்லை. இந்த அரங்கில் அவரும் அமர்ந்திருக்கிறார். அவருக்கு நன்றி. அவரது ஆசிர்வாதத்துக்கு நன்றி"



"இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" என்ற ரஹ்மான், நான் தமிழில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்று கூறிவிட்டு 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தனது தாய் மொழியில் பேசினார். புரியாவிட்டாலும் கைதட்டி ரசித்தது உலகம்!

ஆஸ்கர் பரிசு தொகை :

ஆரம்பகாலங்களில் ஸ்டுடியோவில் ரெக்கார்ட் பிளேயரை இயக்குவதற்காக ரஹமான் வாங்கிய சம்பளம் வெறும் ஐம்பது ரூபாய். இன்றைய தேதிக்கு ஆஸ்கர் விருதின் மதிப்பு என்னவென்று தெரியுமா? கிட்டதட்ட நு£று கோடிகள்! (இதில் ஒரு ரூபாயை கூட வரியாக வசூலிக்க கூடாது என்று முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. அதுமட்டுமல்ல, இசைப்புயலுக்கு நிரந்தர வரிவிலக்கு அளிக்கவும் யோசித்து வருகிறது)



ஆஸ்கர்
சலுகைகள்:
பணமாக இவ்வளவு என்றால், பிற சலுகைகள் அம்மாடியோவ்... மூன்று வருடங்களுக்கு இலவசமாக எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும், எந்த ஃபிளைட்டில் வேண்டுமானாலும் பறக்கலாம். உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் எத்தனை ஸ்டார் அந்தஸ்து உள்ள ஹோட்டலில் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம். மொத்த பில்லையும் ஆஸ்கர் கமிட்டியே ஏற்றுக் கொள்ளும்! அதுமட்டுமல்ல, உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் வைக்கப்படுவார் ரஹ்மான்! செல்லும் நாடுகளில் எல்லாம் கவுரவ பிரஜையாக அங்கீகரிக்கப்படுவார்! இப்படி சலுகை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரராகிவிட்ட ரஹ்மானின் ஆரம்ப காலமும் சரி, வெற்றியின் உச்சத்தில் இருக்கும் போதும் சரி, அவர் ஒரே மாதிரிதான் என்று வியக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.



S
.A.ராஜ்குமாருடன்...
இசைஞானி இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் கீ போர்டு பிளேயராக இருந்தவர் ரஹ்மான். ஆஸ்கர் நாயகனின் ஆரம்பகாலங்கள் பற்றி நம்மிடம் பேசினார் எஸ்.ஏ.ராஜ்குமார். "சின்னப்பூவே மெல்லப் பேசு, புது வசந்தம், மனசுக்குள் மத்தாப்பூ போன்ற படங்களுக்கு நான் இசையமைத்தபோது என் குருப்பில் கீ போர்டு வாசித்தார் ரஹ்மான். புதுமையான சிந்தனையுள்ளவர். எல்லாவற்றையும் புதுசா செய்யனும் என்ற நோக்கம் அவரிடம் அப்பவே இருந்திச்சு. நாங்க ஏழு மணியிலிருந்து ஒரு மணிக்குள்ளே ரெக்கார்டிங் செய்வோம். ஆனால் அவரு வருவதே பதினொரு மணிக்குதான். அவரு மேலே கோபமே வராது. ஏன்னா, அவரது திறமைக்கு முன்னாடி இந்த லேட் பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அவரு உச்சத்துக்கு போன பிறகும் கூட, விடிய விடியதான் ரெக்கார்டிங் செய்வார். அவர் ஒரு இரவு பறவை" என்றார் மலரும் நினைவுகளோடு.

தொடர்ந்து ரஹ்மானின் நினைவுகளில் மூழ்கிய எஸ்.ஏ.ராஜ்குமார், "நான் இப்போ திரை இசை கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராக இருக்கேன். கோடம்பாக்கத்தை சேர்ந்த இசைக்கலைஞர்களுக்கான சங்கம் இது. இதில் ஆரம்ப காலத்திலிருந்தே உறுப்பினராக இருக்கிறார் ரஹ்மான். எந்த இசையமைப்பாளர் ரெக்கார்டிங் செய்தாலும், சங்கத்திற்கென்று குறிப்பிட்ட தொகையை கட்டணும்ங்கிறது எங்க சங்கத்தோட சட்டம். ஆச்சர்யம் என்னவென்றால், அவர் பாலிவுட், ஹாலிவுட் வரைக்கும் போனாலும், ஒவ்வொரு ரெக்கார்டிங்குக்கும் எங்களுக்கு பணத்தை கரெக்டாக அனுப்பி வைத்துவிடுவார்"

திரை இசை கலைஞர்கள் சங்கத்தின் பாராட்டு விழா:
"ஓரளவுக்கு வளர்ந்திட்டாலே, வளர்ந்த இடத்தை மறந்துவிடுகிறவர்களுக்கு மத்தியிலே ரஹ்மானின் இந்த செயலை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்? நாங்க எல்லாரும் சேர்ந்து திரை இசை கலைஞர்கள் சங்கம் சார்பாக மார்ச் ஒன்றாம் தேதி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா வச்சிருக்கோம். கோல்டன் குளோப் வாங்கிய அன்னிக்கு அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அப்படியே இந்த விழாவுக்கும் தேதி வாங்கினோம். அப்போது "யானை மீது உங்களை உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து வரப்போறோம்" என்று சொன்னதற்கு அவர் வெட்கப்பட்டு பதறியதை பார்க்கணுமே! இந்த விழாவில் பாலமுரளி கிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, ஏவிஎம்.சரவணன் ஆகியோர் கலந்துக்கிறாங்க" என்றார் எஸ்.ஏ.ராஜ்குமார்.






இசைஞானி
இளையராஜா:
இசையை பற்றி பேசுகிறபோது இசைஞானி இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையே ஒரு ஒப்பீடு எப்போதுமே இருந்து வருகிறது மக்கள் மத்தியில். அப்படியிருக்க, இளையராஜா ஒப்புக் கொண்டாரா? இந்த கேள்வியை ராஜ்குமாரிடம் வைத்தோம்.

"மற்றவர்கள் நினைப்பது போல அல்ல ராஜா அண்ணன். அவரது திருவாசகம் இசை வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஹோட்டலில் நடந்தது. அவரை மேடையில் கொண்டு போய் உட்கார வைக்க இரண்டு இசையமைப்பாளர்கள் போக வேண்டும். எல்லாருக்குமே ஆசை இருந்தது. ஆனால், இசைஞானி விரும்பியது என்னையும் ரஹ்மானையும்தான். நாங்கள் கைபிடித்து அவரை அழைத்து சென்று அமர வைத்தோம். இந்த விழாவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் அழைத்தபோது முகமெல்லாம் மலர, "கண்டிப்பா வரேன்" என்று அவர் சொன்னது இப்போதும் என் கண்களில் நிற்கிறது" என்றார் ராஜ்குமார்.

நம்பிக்கை vs தன்னம்பிக்கை:
'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்ற உங்கள் நம்பிக்கை தன்னம்பிக்கையை குறைப்பதாக இல்லையா? என்று கேட்கப்பட்டது ரஹ்மானிடம். அதற்கு அவர் சொன்ன பதில், "தன்னம்பிக்கையே இறைவன் கொடுத்ததுதான்!"

ரஹ்மானின் கோடானு கோடி ரசிகர்களில் ஒருவன் அந்த இறைவனும்தானே!

நன்றி: cenimafun

இளையராஜாவின் இசைக்கு முன்பு ஆஸ்கர் விருது மிகச் சாதாரணமானது. சர்வதேச எல்லைகளைக் கடந்தவர் இளையராஜா. ஆஸ்கர் விருதை விட உயர்ந்தது இளையராஜாவின் இசை என்று இசைப் புயல் .ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.


இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று தாயகம் திரும்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிற்பகல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்புக்கு செய்தியாளர்ககள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் என குவிந்து விட்டனர். ஆங்கிலத் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஹ்மானின் பேட்டியை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.

ஐம்பது, நூறல்ல… 450க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், வீடியோகிராபர்கள், எப்எம் ரேடியாக்காரர்கள், வட இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சிகளின் பிரதிநிதிகள்… க்ரீன் பார்க் கட்டப்பட்ட இத்தனை ஆண்டுகளில் முதல்முறையாக இந்தளவு பெரும் கூட்டத்தை இப்போதுதான் பார்ப்பதாகச் சொன்னார் ஓட்டல் சிப்பந்தி.

ஆஸ்கர் தமிழனை சிறப்பித்த பெருமை தனக்கே கிடைக்க வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக இந்த பத்திரிகையாளர் கூட்டத்தை தங்கள் ஓட்டலில்தான் நடத்த வேண்டும் என கிரீன் பார்க் வேண்டிக் கேட்டுக் கொண்டதாம்.

3 மணிக்கு வருவதாக இருந்த இசைப்புயல், மக்கள் வெள்ளம், ரசிகர்கள் அன்புப் பிடியிலிருந்து விடுபட்டு வர கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

ஹோட்டலுக்கு வந்தவர், அங்கே கூடியிருந்த கூட்டம் பார்த்து ஒரு நிமிடம் அசந்துபோய்விட்டார்.

‘என்னபா… இவ்ளோ பிரஸ்காரங்க இருக்காங்களா…’ என வியந்தபடி உள்ளே நுழைந்த தமிழரின் செல்லப் பிள்ளையை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள். அளவுக்கதிகமான அன்பும் ஆர்வமுமே ஒருவரை மூச்சுமுட்டச் செய்துவிடுமல்லவாஅப்படி!

கிட்டத்தட்ட 20 நிமிடங்கள், ரஹ்மானால் எதுவும் பேச முடியவில்லை. பத்திரிகையாளர்களே பரம ரசிகர்களாகிவிட்டதன் விளைவு அது.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் ரஹ்மானால் பொறுக்க முடியவில்லை.

நான் எதுக்கு இவ்வளவு அவசரமா அங்கிருக்க முடியாம சென்னைக்கு வந்தேன்இந்த சந்தோஷத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தானேநீங்க சண்டை போடாம இருந்தாதான் என்னால எதுவும் பேச முடியும். நான் எங்கேயும் போயிடப் போறதில்லை. இனிமேலும் இந்தச் சென்னையிலதான் இருக்கப் போறேன்இதுக்கு மேலயும் இப்படியே நீங்க சத்தம் போட்டுக்கிட்டிருந்தா, நான் கிளம்பறேன்என்று அவர் எழ, ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்களும், நிருபர்களும் அமைதியானார்கள்.

அடுத்து கேள்வி பதில் நேரம்:

கேள்விகள் சுமாராக இருந்தாலும் கூட, அவற்றுக்கு ரஹ்மான் அளித்த பதில்களில் அவரது பக்குவம் வெளிப்பட்டது.

‘எப்பவோ ஒரு முறை.. ஆரம்ப காலத்தில்… உலகத் தரத்துக்கு இந்திய இசையைக் கொண்டு செல்வதுதான் என் லட்சியம் என்று கூறினேன். பின்னர் அந்த வார்த்தைகளைக் காப்பாற்ற நான் பெரும் பாடுபட வேண்டியிருந்தது. இன்று அந்த வார்த்தையை நிறைவேற்றிவிட்டேன். ஆனால் இனி எப்போதும் இந்தமாதிரி வார்த்தைகளை விடாமல் பார்த்துக் கொள்வேன். சொல்லிவிட்டுச் செய்வதில் எந்த த்ரில்லும் இல்லை. ஆனால் செய்த பிறகு அதற்கான அங்கீகாரம் கிடைத்த பிறகு, வெளியில் சொன்னால்தான் ஒருவர் மீது மதிப்பும் மரியாதையும் வரும்’, என்ற அறிமுக உரையோடு கேள்வி பதிலைத் தொடங்கினார் ரஹ்மான்.


ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு விருது கிடைக்கும் என நம்பினீர்களா?

உண்மையில் ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று 5 சதவீதம் மட்டுமே நம்பிக்கை இருந்தது. ஆனால் இரண்டு விருதுகள் கிடைத்துவிட்டன.

அது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம். ரொம்ப சந்தோஷப்பட்டேன். உண்மையில் ஆஸ்கர் விருது வாங்கியபோது இருந்ததை விட, அந்த ஜெய்ஹோ பாடலைப் பாட மேடையில் நின்றபோதுதான் நான் மிகவும் நெர்வஸாக இருந்தேன்.

எவ்வளவு பரிசு கிடைத்தது?

ஆஸ்கர் விழா முடிந்ததும் நிறைய பேர் எனக்கு பாராட்டு தெரிவித்து ஷாம்பைன் பாட்டில்கள் கொடுத்தனர். திரும்ப அவர்களிடமே கொடுத்து விட்டேன். விருது மூலம் பரிசாக 500 டாலர் கிடைத்துள்ளது. அதற்கும் வரிவிலக்கு கொடுத்துள்ளது அரசு.

மைக்கேல் ஜாக்சன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க் என நிறைய ஹாலிவுட் கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ரஜினி சார், கமல் போன்றவர்கள் உடனே வாழ்த்துச் சொன்னார்கள். ஆஸ்கர் விருது கிடைத்ததும், இயக்குனர் மணிரத்தினத்திற்குதான் முதலில் போன் செய்தேன், இணைப்பு கிடைக்கவில்லை. பிறகு அவரே எனக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜா வாழ்த்துச் சொன்னாரா?

இளையராஜாவும் அவரது மகன்கள் இருவரும் எஸ்.எம்.எஸ். மூலம் உடனே வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் எனக்கு இந்த விருது கிடைத்ததற்காக இளையராஜா பெரிதும் மகிழ்ந்ததாக இமெயில் மூலம் தனது வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்.

ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தை ஒரு இந்தியர் இயக்கியிருந்தால் இத்தனை பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்குமா?

அந்த இயல்பு மாறாமல், திரைக்கதையின் உணர்வு மாறாமல் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும். ஆனால் படமெடுத்தால் மட்டும் போதாது. அதை சிறப்பான முறையில் அங்கே வெளிக்காட்ட வேண்டும்.

ஸ்லம்டாக்கைப் பொறுத்தவரை அந்தப் பெரும் பொறுப்பை பாக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. இந்தப் படம் ஆஸ்கருக்குப் போகக் காரணம், அமெரிக்காவில் இந்தப் படம் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரப்படுத்தப்பட விதம் என்பதை மறுக்க முடியாது.

பாக்ஸ் நிறுவனம் சொன்னது இதுதான்: படத்தை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றார்கள். அந்த அணுகுமுறை இருந்தால் இந்திய இயக்குநரின் படங்களும் ஆஸ்கர் போகும்.

இந்தியக் கதைக் கருவை மையமாக வைத்து இந்தியாவிலேயே எடுக்கப்படுகிற இந்தியப் படங்களுக்கும் ஆஸ்கர் கிடைக்குமா?

அடிப்படையில் ஆஸ்கர் விருதுக் குழுக்கு ஒரு படம் போக சில விதிமுறைகள் உள்ளன. அவற்றைப் பூர்த்தி செய்யும் விதததில் இருந்தால் நிச்சயம் ஆஸ்கர் விருதுத் தேர்வாளர்கள் இந்தியப் படங்களையும் தேர்வு செய்வார்கள்.

இந்த விருது உங்கள் இசைக்கு வழங்கப்பட்டது குறித்து சில சர்ச்சைகள் உள்ளனவே... உங்கள் திறமைக்கான அங்கீகாரமா இது?

ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இது என் திறமைக்கான விருது அல்ல... நான் அப்படி நினைக்கவுமில்லை. காரணம், இந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதைச் சரியாக செய்ததற்கு எனக்குக் கொடுத்துள்ள விருது இது அவ்வளவுதான். என்னுடைய டேலண்டுக்கு தரப்பட்டதல்ல.

இளையராஜாவுக்கு இந்த விருது கிடைக்காமல் உங்களுக்குக் கிடைத்துள்ளது பற்றி சிலர் பேசுகிறார்களே...

இளையராஜா இசை ரொம்பப் பெரிய விஷயம். சர்வதேச அளவில் பெரிய ரீச் இருக்கு அவரோட இசைக்கு. சிம்பொனி, திருவாசகம்னு நிறைய புராஜக்ட் பண்ணியிருக்கார் சர்வதேச அளவில்.

அவர் ஆஸ்கருக்கு அப்பாற்பட்டவர். அவரது இசையும் அப்படித்தான்... அவருக்கும் சர்வதேச வாய்ப்பு வந்து, அந்த இசை பாக்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்தின் மூலம் அகாடமிக்கு கொண்டு போகப்பட்டிருந்தால் நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.

ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.

ஸ்லம்டாக் மில்லியனேர் என்ற தலைப்பு, மற்றும் இந்தப் படத்தின் மூலம் இந்திய ஏழ்மையை ஹாலிவுட்டில் விற்று காசு பார்த்ததாக எழுந்த விமர்சனங்கள், குறிப்பாக அமிதாப் கூறியது குறித்து...

இந்த சர்ச்சைகள் தேவையில்லை. நாம்தான் நாயை இழிவாக நினைக்கிறோம். வெளிநாட்டில் நாய் செல்லப் பிராணி. நிறைய செலவு செய்து வாங்கி வளர்க்கின்றனர். படத்தில், குடிசைப் பகுதியில் வாழும் இளைஞன் சிரமப்பட்டு எப்படி வெற்றி பெறுகிறான் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. பிரச்னைக்குரிய கருத்துக்கள் ஏதும் சொல்லப்படவில்லை. ஒரு பெரிய வல்லரசு நாட்டில் நிலவும் ஏழமைப் பிரச்சினைகளை, இளைஞர்கள் எப்படி தாண்டி வந்து சாதிக்கிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறோம். இதில் தவறாக ஒன்றுமில்லை.

இசை மூலம் மக்களிடையே வேற்றுமைகளை களைவதே நோக்கம். ஜாதி மதம், இனம் தாண்டி இசை இருக்கவேண்டும். பேதம் கூடாது. அன்புதான் முக்கியம். அன்பால்தான் எந்த தடையும் உடைத்தெறிய முடியும்.

அடுத்த நீங்கள் என்னென்ன படங்கள் செய்கிறீர்கள்...?

இரண்டு ஹாலிவுட் படங்களில் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். நிறைய வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் கவனமாகத்தான் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. ஆஸ்கர் கிடைத்திருப்பதால் வந்துள்ள பயம் அது.

தமிழில் மணிரத்னம் படம், ரோபோ... எந்திரன், கவுதம் மேனன் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்கிறேன். இந்தியில் ப்ளூ என்ற படத்துக்கு இசையமைக்கிறேன்.

இதைத் தவிர, திருக்குறளை இசைப்படுத்தியுள்ளேன். குணங்குடி மஸ்தான் பாடல்களை இசைப்படுத்த உள்ளேன். உலகத் தமிழர்களுக்காக கவிஞர் வைரமுத்து எழுதும் பாடலை, அவர் எழுதி முடித்ததும் இசையமைத்து கொடுப்பேன்.

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?

உண்மையில் இசைக்கு மொழி பேதம் கிடையாது என்பதால் எந்த மொழியில் இசையமைப்பதிலும் பிரச்சனை இல்லை. என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.

இசைப்புயல், ஆஸ்கர் தமிழன் - எதை நீங்கள் விரும்புகிறீர்கள்?


இரண்டையுமே விரும்பவில்லை. இந்தப் பட்டம் சூட்டுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

நீங்களே ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்... சினிமாவில் நடிப்பீர்களா?

(பலத்த சிரிப்புடன்) அப்படியா?... எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசைத்துறையில் மட்டுமே எனது முழுக் கவனமும்.

ஆஸ்கர் விருது வாங்கியதை கெளரவித்து எம்.பி. பதவி கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா?

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

உங்கள் இசையில், `சிம்பொனி' எப்போது வரும்?

அதற்கு இன்னும் `டைம்' ஆகும்.

ஆஸ்கார் கேட்'டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?

நிறைய பேர் வாங்கப் போகிறார்கள்.

ஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இடம்பெற்ற ஜெய் ஹோ பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?

ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.' `ரோஜா' படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது...

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

இலங்கை தமிழர்களுக்காக நான், வெள்ளை பூக்கள் என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.

உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?


உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?

லகான்.

ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

என் மூன்று குழந்தைகளும் எனக்கு இ-மெயில் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

உங்கள் அடுத்த இலக்கு என்ன?

தமிழ் சினிமாவின் இசையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவேண்டும். ஆனால் அது என் ஒருவனால் மட்டுமே முடிகிற காரியமல்ல. அனைவரும் இணைந்து செயவ்பட வேண்டும். அதற்கான முயற்சிகளைத் தொடர்வேன். தொடர்ந்து இளஞர்களுக்கு வாய்ப்பளிப்பேன்.

நன்கு திட்டமிட்டு எடுத்து, உரிய முறையில் சந்தைப்படுத்த வேண்டும். இன்னொரு பக்கம் ஆஸ்கர் போன்ற விருதுக் கமிட்டிகளை முறையான வழியில் அணுக வேண்டும். நிச்சயம் அப்போது தமிழிலும் இந்தியாவிலும் என்னை தொடர்ந்து பலர் ஆஸ்கர் விருது வாங்கும் நிலை ஏற்படும் என்றார் ரஹ்மான்.

பேட்டியின் நிறைவில், செய்தியாளர்கள் வேண்டுகோளுக்கிணங்க ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் இடம் பெற்ற ஜெய் ஹோ பாடலின் சில வரிகளைப் பாடி கைத்தட்டல்களை அள்ளினார் ரஹ்மான்.

அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பிய ஏ. ஆர். ரகுமானுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் பரிதி இளம் வழுதி பொன்னாடை அணிவித்து ரகுமானை வரவேற்றார். சிம்பு, பாடகர் அஸ்லம், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டனர். கேரள மாநில பாரம்பரிய இசையான கொட்டு மேளம் முழங்க ரகுமானுக்கு அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.































ஆஸ்கர் வாங்கிய ரகுமானுக்கு பல முனைகளிலிருந்து வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிகின்றன. சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் மார்ச் முதல் தேதி மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்துகிறது. (நடிப்பு திலகம் ???) விஜய் எல்லாம் டாக்டர் பட்டம் வாங்கும் பொது, மிகப் பெரிய வரலாற்று சாதனை புரிந்த நம்ம ரகுமானுக்கு டாக்டர் பட்டம் இல்லையா? என ஏங்கிய அவரது ரசிகர்கள் மனதில் பால் வார்க்கும் செய்தி தான் கீழே....


இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த ஒரே ‘இந்திய’ இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

ரஹ்மான் தவிர, டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளரும், முன்னாள் சாஹித்ய அகாதமி தலைவருமான பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அலிகார் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

அப்புறம் என்ன கூடிய சீக்கிரம் நம்ம தமிழ் நாட்டு பல்கலைகழகங்களும் ஆளுக்கொரு டாக்டர் பட்டத்தோட கொடுக்க ரெடியா இருப்பாங்க...

வெயிட் அண்ட் சி



எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.

அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கலவிக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்


ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது


தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)


ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு, உலக அளவில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பிரதமர் வாழ்த்து:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட இந்தியத் தலைவர்கள் அனைவரும் ரஹ்மானுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி வாழ்த்து:

தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப பூத்து, மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்துக்கே சென்று, சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்தக்களைப் பெறுகிற, சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது.

சிறுபான்மை சமுதயாத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.

குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப்பெரிய கீர்த்தி, சிறப்பு, பெருமை. ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதிந்துள்ள மாணிக்க, மரகதக் கற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன்.

தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகத் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து, மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து, தாயாக நின்று வாழ்த்துகிற போது,அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது.

ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.


தமிழக சட்டசபை பாராட்டு:

இந்த பாராட்டை வாசித்த சட்டமன்ற திமுக தலைவரும், நிதியமைச்சருமான அன்பழகன்,இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஓர் இந்தியர், அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் திரைப்படத் துறையில் உலகத்திலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இரண்டினை, தான் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக பெற்றுள்ளார்.

ஒரு தமிழன் தமிழ் திரையுலகினையே உலக அரங்கில் தலை நிமிர வைத்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்ற இரு ஆஸ்கார் விருதுகளை பெற்று தந்தமைக்கு, தமிழ்த் திரையுலகினர் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் அவர்கள் உயர்வையே தன் எண்ணமாகக் கொண்டு வாழ்ந்து வரும் முதல்வர் கலைஞர் சார்பாகவும், பேரவையின் உறுப்பினர்கள் சார்பாகவும் என் சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர் மேன்மேலும் பல்வேறு விருதுகளை பெற வேண்டுமென்று பேரவையின் சார்பில் வாழ்த்துகிறேன்
என்றார்.

சென்னை மாநகராட்சி பாராட்டு தீர்மானம்:

இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் .ஆர். ரஹ்மான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுவதாகக் கூறி அதனை வாசித்தார்.



தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா:

இந் நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானால் தமிழ் திரையுலகம் பெருமை அடைந்துள்ளது. தமிழர்கள் தலைமை நிமிர்ந்து நிற்கிறார்கள். உலக அளவில் தமிழன் புகழை கொண்டு சென்ற முதல் தமிழர் அவர். இளைஞர்களுக்கு வழி காட்டியாக அவர் மாறியுள்ளார்.

இவ்வளவு பெருமை யிலும் ஆஸ்கார் விருது பெறும் போது அவர் காட்டிய அடக்கமும் எளிமையும் மெய்சிலிர்க்க வைத்தது. அந்த மேடையில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்லி தமிழை மறக்காமல் பேசி இருப்பது நமக்கெல்லாம் பெருமை அளிப்பதாகும். அவரால் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.

அந்த மாபெரும் தமிழ னுக்கு தமிழ் திரையுலகம் தந்த கலைஞனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப் படும். திரையுலகில்உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள்
என்று கூறப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து வாழ்த்து:
(வைரமுத்துக்கும்
ஏ.ஆர்.ரகுமானுக்கும் லடாய் என்பது பழைய கோலிவுட் செய்தி )

விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு தமிழன் இந்தியாவுக்கு ஈட்டித்தந்திருக்கும் மிகப்பெரிய பெருமை. இது ஏ.ஆர்.ரகுமானின் உழைப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

அவர் இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் ஆஸ்கர் விருதுகளால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. அந்த பழியை இந்த விருது துடைத்திருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த விருதால், தமிழகத்தின் பெருமை, இந்தியாவின் பெருமை, உலக கலையுலகில் வெளிச்சத்தை காட்டியிருக்கிறது. மீண்டும் மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


ஏ.ஆர்.ரகுமானுக்கு வரி விலக்கு அளிக்க பரிந்துரை: ப.சிதம்பரம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு வரி விலக்கு அளிக்க நிதியமைச்சரிடம் பரிந்துரை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நேரடி வரிமற்றும் கலால் வரிவாரியங்களுக்கான கட்டிடஅடிக்கல் நாட்டு விழாநடந்தது. அதில் பேசியமத்திய உள்துறைஅமைச்சர் .சிதம்பரம்,
இந்தியாவை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு பணம் பரிசாக வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதிமந்திரியிடம் பரிந்துரைசெய்வேன் என்றார்.

தமிழகத்தில் உற்சாகம்-கொண்டாட்டம்!!

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.



விருது அறிவிக்கப்பட்ட பின் ரஹ்மான் வீட்டை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்துகொண்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும் ரஹ்மானை வாழ்த்தியும்கோஷமிட்டபடி உள்ளனர். கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையில் திரையுலகைச் சேர்ந்த அனைவரும், ஏ.ஆர்.ரகுமானிடமும், அவரது குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு திரும்பும் ஏ.ஆர்.ரகுமானுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்க திரையுலகமும், அவரது ரசிகர்களும் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

தமிழ் கலைஞர் ஒருவர் செய்துள்ள இந்த அரிய சாதனையை தனது சொந்த சாதனையாகவே தமிழ் திரைப்பட உலகம் கொண்டாடி வருகிறது. இன்று காலை முதலே ஒவ்வொரு கலைஞரும் ரஹ்மானுக்கு தங்கள் வாழ்த்துக்களைக் கூறி வருகிறார்கள்.

சாமியார் மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கே போய் பலர், ரஹ்மான் குடும்பத்தாரிடம் வாழ்த்துக்களையும், மலர்க் கொத்துக்களையும் அளித்தனர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே ரஹ்மானுக்கு தங்கள் இதயப் பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இருவரும் ரஹ்மானுக்கு போன் செய்து தங்கள் சந்தோஷத்தையும், வாழ்த்துக்களையும் கூறினர். ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான் என ரஜினி கூறியுள்ளார்.

கே.பாலசந்தர்:

நான் தயாரித்த ரோஜா படத்திற்காக மணிரத்னம் இளைஞரான ரஹ்மானை அறிமுகம் செய்தபோதே அவர் என்னை கவர்ந்து விட்டார். ரஹ்மான் பல சாதனைகளை படைப்பார் என அப்போதே நினைத்தேன். அது இப்போது உண்மையாகி விட்டது. விருது வழங்கும் நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். ரஹ்மானுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தேன என்றார்.

சரத்குமார்:


திரைப்பட துறையின் உலகின் மிக உயர்ந்த விருதான ஆஸ்கார் விருதுகளை இந்தியாவுக்கு பெற்று தந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் தமிழ் மண்ணில் பிறந்து இந்தியாவின் பெருமையை உலகளவில் உயர்த்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எங்கள் பாராட்டுக்கள்.

மாதவன்:

என்னால நம்பவே முடியலை.. இந்த விருதை பெற ரஹ்மான் முழுக்க முழுக்கத் தகுதியானவர். இந்தியாவுக்கே பெருமை தேடித் தந்துவிட்டார்.

எஸ்.ஜே.சூர்யா:


ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன். அவர் மிகவும் எளிமையானவர். இந்த விருது வென்ற பிறகு கூட மிகவும் அமைதியாக, அடக்கமாக பேசியிருக்கிறார். அந்த குணம் யாருக்கும் வராது என்றார்.

அசின்:

ரஹ்மான் எப்பவும் என்னோட பேவரிட். அவரது அனைத்துப் பாடல்களும் என் இதயத்தில் நின்றவை. ஆஸ்கர் விருதினை அவர் நிச்சயம் பெற்றுவிடுவார் என்று நம்பினேன். அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.

கேஜே யேசுதாஸ்:

ரஹ்மானுடைய தந்தை ஆர்கே சேகருடன் பல படங்களில் பணியாற்றியவன் நான். பின்னர் அவர் பிள்ளை ரஹ்மானுடனும் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இப்போது என்னைத் தலை நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார். இன்னும் உயரட்டும் அவர் புகழ்.

மோகன்லால்:

ரஹ்மானுடன் இரு படங்களில் பண்யாற்றியுள்ளேன். இரண்டுமே மிகப் பிரமாதமான பாடல்களுடன் வந்து ரசிகர்களைக் கவர்ந்தன. மிக எளிமையான மனிதர். இந்த விருதுக்கு முழுவதும் ஏற்றவர் என்றார்.



ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் மிகச் சிறந்த இசையமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்ககு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவி்ல் ஒரு விருதும், 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஒரு விருதுமாக ரஹ்மான் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஜெய் ஹோ பாடலுக்கான விருதை ரஹ்மானுடன் சேர்த்து அதை எழுதிய பாடலாரிசியர் குல்சாரும் பெற்றுள்ளார்.



விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.



எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.


இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார். ஆஸ்கர் மேடையில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். (மேடையில் தமிழில் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்ற போது உண்மையிலேயே புல்லரிக்க தான் செய்தது.)

அந்த வீடியோ காட்சி கீழே ...






ஒரிஜினல் ஸ்கோருக்கான முதல் விருதை வென்ற ரஹ்மான் ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் தியேட்டரில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது. (வீடியோ கீழே.. )




முதல் தமிழ் கலைஞர்!

இந்தியக் கலைஞர்கள் இருவர் மட்டுமே இதுவரை ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளனர். கடந்த 1982-ம் ஆண்டு ‘காந்தி’ படத்துக்காக சிறந்த காஸ்ட்யூம் டிசைனருக்கான ஆஸ்கர் விருதை பானு அதையா வென்றார்.

கடந்த 1992-ல் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான சத்யஜித் ரே-வுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ ஆஸ்கர் வழங்கியது. சத்யஜித்ரே இருந்த மருத்துவமனைக்கே ஆஸ்கர் விருதுக் குழுவினர் தேடிவந்து இந்த விருதினை வழங்கினர்.

இந்த நிலையில், ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்திய திரைப்பட இசைக் கலைஞர் என்ற பெருமையை, தமிழகத்தைச் சேர்ந்த தமிழர் ஏ.ஆர்.ரஹ்மான் பெறுகிறார்.


அவருடன், ஸ்லம்டாக் படத்தில் சவுண்ட் மிக்சிங்கிற்கான ஆஸ்கர் விருதைப் பெறுபவர்களில் ஒருவர், இந்தியாவின் ரெசுல் பூக்குட்டி என்பது பெருமைக்குரியது.


ஒரே படத்துக்காக, இரண்டு பிரிவுகளின் கீழ் மூன்று ஆஸ்கர் பரிந்துரைகளைப் பெற்று இரண்டு விருதுகளைப் பெற்ற இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையையும் ரஹ்மானையே சேரும்.


ஏற்கெனவே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக, கோல்டன் குளோப், பாஃப்டா உள்ளிட்ட உயரிய விருதுகள் பலவற்றையும் வென்று, ரஹ்மான் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்ததும் குறிப்பிடத்தக்கது.






விருதைப் பெற்ற பின் ரஹமான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன். நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்ச விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான்,

''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தமிழில் உணர்ச்சிப்பூர்வமாய் மேடையில் பேசி தனது தமிழ் பற்றையும் காட்டினார்.

இதன்மூலம் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் கூடுதல் பெருமை சேர்த்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

ரஹ்மான் விருதை வென்றதையடுத்து சென்னையில் உள்ள ரஹ்மானின் வீட்டில் பெரும் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. அவரது வீட்டில் குவிந்துள்ள ரசிகர்களும் உறவினர்களும் நண்பர்களும் கேக் வெட்டி ஆடிப் பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவரது வீட்டின் வெளியில் ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

ரஹ்மானின் தங்கை ரெஹனா கூறுகையில், இந்த விருதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறோம் என்றார்.

ஏ.ஆர். ரஹ்மான் - மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்


1992ல் வெளியான ரஹ்மானின் முதல் படம் ரோஜாவிலிருந்து இன்று வரை அவரது இசைக்கு செவிமடுத்துவரும் ரசிகர்களுக்கும் இந்த விருது எவ்வித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. அவரது திறமைக்கு, இசை பங்களிப்புக்கு கோல்டன் குளோப் விருது ஒரு தொடக்கம் மட்டுமே என்ற மனப்பதிவே அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.

ரஹ்மானின் இசையார்வம் அவரது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்குகிறது. அவரது தந்தை ஆர்.கே. சேகர் பிரபல இசையமைப்பாளர். மலையாளப் படங்கள் பலவற்றில் பணிபுரிந்திருக்கிறார். ரஹ்மானுக்கு அவரது தந்தையே முதல் குருவாகவும் இருந்துள்ளார். சிறுவனாக இருந்தபோது தன்ரா‌‌ஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை பயின்றார் ரஹ்மான்.

ரஹ்மானின் முதல் திரைப்பிரவேசம், மணிரத்னத்தின் ரோஜா. விளம்பரப் படங்களுக்கு அவர் இசையமைத்திருந்ததை கேட்டே இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரோஜாவுக்கு இசையமைக்கும் முன் (1991ல்) தனது வீட்டின் பின்புறம் சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பித்தார் ரஹ்மான். அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்டிருந்த அந்த ஸ்டுடியோ இன்று இந்திய அளவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஸ்டுடியோவாக திகழ்கிறது.

இசையமைப்பாளர் ஒருவருக்கு இசையறிவுடன் நவீன தொழில் நுட்பம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும் என்பது ரஹ்மானின் நிலைப்பாடு. தொழில்நுட்ப விஷயத்தில் காலத்தோடு ஒழுகினால் மட்டுமே சர்வதேச இசையுலகில் நிலைத்து நிற்க இயலும். இதனை ரியாக புரிந்து கொண்டவர் ரஹ்மான். அவர் தொடங்க இருக்கும் இசைப்பள்ளியில் இசையையுடன், நவீன தொழில்நுட்பம் குறித்தும் கற்பிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.


திரையிசையில் மரபான நடைமுறையை ரஹ்மான் நிராகரித்த போதெல்லாம் கடுமையான விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டி வந்தது. இசையில் அளவுக்கதிகமாக தொழில்நுட்பத்தை கலக்கிறார் என்பது முக்கியமான குற்றச்சாட்டு. அவர் இசையமைப்பாளர் அல்ல, வெறும் கம்போஸர் மட்டுமே இசைத்துறையில் உள்ளவர்களாலேயே விமர்சிக்கப்பட்டார். இன்று அந்த குற்றச்சாட்டுகள் நிறமிழந்து விட்டன. மேலும், அவரது உலகளாவிய புகழுக்கு அவரது தொழில்நுட்ப அறிவும் ஒரு காரணமாக இருப்பதை அவரை விமர்சித்தவர்களே ஒப்புக் கொள்வர்.

ரஹ்மானால் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இசையமைக்க முடியும், தமிழ் கிராமிய இசை அவருக்கு வெகு தூரம் என்பது பொதுவான கருத்து. இது ஒரு குறையாக முன்வைக்கப்பட்டபோது அவர் இசையமைத்த படங்கள் கிழக்குசீமையிலே மற்றும் கருத்தம்மா. இந்தப் படங்களின் இசையும், பாடல்களும் ரஹ்மானுக்கு கிராமிய இசையில் அறிமுகமில்லை என்ற விமர்சனத்துக்கு பதிலாக அமைந்தன. என்றாலும், தமிழ் கிராமிய இசை முழுமையாக அவருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே உண்மை.



இந்திப் பாடல்களுக்கு செவிமடுத்து வந்த தமிழர்களை தமிழ் திரையிசையின் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்திப் பாடல்களை மட்டும் கேட்டு வந்த வட இந்தியர்களை தமிழ் திரையிசையின்பால் ஈர்த்தவர் ரஹ்மான். நேரடி இந்திப் படங்களுக்கு அவர் இசையமைக்கும் முன்பே ரோஜா, ஜென்டில்மேன், காதலன், பம்பாய் ஆகிய படங்களின் வாயிலாக அவர் இந்தியா முழுவதும் ரசிக்கப்படும் இசையமைப்பாளராகியிருந்தார்.


ரஹ்மான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா ஆகிய மொழிகளில் தயாரான படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரது முதல் இந்திப்படம் ராம்கோபால் வர்மாவின்ரங்கீலா. ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று ஆடிய அதிசயத்தை பாலிவுட்காரர்கள் அனுபவப்பட்டது இந்தப் படத்தில்தான்.


இன்று பாலிவுட்டில் நல்ல திரைப்படம் ஒன்று தயாரானால் இசை .ஆர். ரஹ்மான் என்பது எழுதப்படாத விதி. ஃபயர், லகான், ரங் தே பசந்தி, ஸ்லம் டாக்மில்லியனர் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ரஹ்மானின் இசைப் பயணத்தில் 2002ம் ஆண்டு முக்கியமானது. இந்த ஆண்டில்தான் அவரதுபாம்பேட்ரிம்ஸ் பிரிட்டனில் அரங்கேறியது. ஆண்ட்ரூ லாயிட் வெப்பரின் பாம்பே ட்ரிம்ஸ் நாடகம் சர்வதேச அளவில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது.

1997ல் வெளியான ரஹ்மானின் வந்தே மாதரம் இசை ஆல்பம் குறிப்பிடத்தகுந்த முயற்சி. இதையடுத்து அவர் வெளியிட்ட ஜன கன மண ஆல்பமும் ரசிகர்களின் பெருத்த ஆதரவை பெற்றது. திரையிசையில் பாடல்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் கொடுப்பவர் ரஹ்மான். 2005 ஆம் ஆண்டுடைம்ஸ் பத்திரிகை வெளியிட்டடாப் டென் மூவிஸ் சவுண்ட் ட்ராக்ஸ் ஆஃப் ஆல் டைம்பட்டியலில் ரஹ்மானின் ரோஜாவும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இசையமைத்த முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றியவர் என்றபெருமை ரஹ்மானுக்கு உண்டு. ரோஜா (1992), மின்சாரக் கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003) என நான்கு தேசிய விருதுகள், ஆறு தமிழக அரசு விருதுகள், இருபத்தியிரண்டு ஃபிலிம்பேர் விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, இப்போது கோல்டன் குளோப் விருது என ரஹ்மானின் விருது பட்டியல் மிக நீண்டது.




இந்த கௌரவம் அத்தனை எளிதில் அவருக்கு கிடைத்துவிடவில்லை. 1966 ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் நாள் சென்னையில் பிறந்த திலீப் குமார், .ஆர்.ரஹ்மானாக புகழின் உச்சியை வந்தடைந்ததற்குப் பின்னால் கடின உழைப்பு, விமர்சனத்துக்கு துவளாத மனம், பெருமைகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் மனப்பக்குவம் என இளைய தலைமுறை கற்றுக் கொள்ளும் பல விஷயங்கள் இருக்கின்றன.

ரஹ்மானின் ஒன்பதாவது வயதில் அவரது தந்தை மரணமடைகிறார். இளையராஜாவிடம் கீ போர்ட் ப்ளேயராக அவர் சேரும்போது வயது பதினொன்று. இருபத்தியிரண்டாவது வயதில் இஸ்லாம் மதத்தை தழுவி திலீப் குமார் என்ற தனது பெயரை .ஆர். ரஹ்மான் என மாற்றிக் கொள்கிறார். இருபத்தி ஆறாவது வயதில் முதல் திரைப்பிரவேசம்.


இன்று ரஹ்மான் என்பது அகிலம் முழுவதும் தெரிந்த பெயர். ஹாலிவுட் சினிமா அவரை விரும்பி அழைக்கிறது. ‌‌ இன்சைட் மேன், லார்ட் ஆஃப் த ‌ரிங்ஸ், திஆக்சிடெண்டல் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களில் ரஹ்மானின் இசை கோவைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். ‌ புகழ்பெற்றடைம் பத்திரிகை அவருக்கு தந்திருக்கும்பட்டம், மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ்.


ரஹ்மானின் திரையிசை சாதனை என்பது, எம்.எஸ்.வி., இளையராஜா என்ற இருபெரும் மேதைகள் உருவாக்கி வைத்திருந்த இசைப்பாதையிலிருந்து விலகி திரையிசைக்கு முற்றிலும் புதிதான ஒரு திறப்பை ஏற்படுத்தியதே ஆகும். இந்த சாதனையின் வெளிச்சத்தில் சர்வதேச ரசிகர்களை தன்வயப்படுத்தி வருகிறார் ரஹ்மான். இசை என்பது சாகரம். அதை உணர்ந்தவராக ஒரு மாணவனுக்குரிய ஆர்வத்துடன் அவரது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நெடியபயணத்தில் கோல்டன் குளோப், ஆஸ்கர் என்பதெல்லாம் மைல் கற்கள்மட்டுமே, எல்லைக் கோடுகள் அல்ல.


டிஸ்க்கி:


  • உலகத்திலேயே, அதிக எண்ணிக்கையில் பாடகர்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் என்றால் அது ரஹ்மானாகத்தான் இருக்கும். அதற்கு அவர் சொன்ன காரணம். "திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் போறப்ப ஏற்படுற வலி எனக்கு தெரியும்".

  • பொதுவாக, ஒரு படத்தின் இசையமைப்பாளரை இயக்குனர் தேர்ந்தெடுப்பார். இயக்குனரை இசையமைப்பாளர் தேர்ந்தெடுத்திருக்கிறார்களா? மின்சார கனவு படத்தில் முதலில் புக் செய்தது ரஹ்மானை. ரஹ்மானிடம், யாரை இயக்குனராக போடலாம் என்று கேட்ட போது, அவர் சொன்னது, தன்னுடைய ஆரம்ப கால நண்பரும், விளம்பரப்பட இயக்குனருமான ராஜிவ் மேனனை.

  • ஹ்மானின் இசை காதில் விழாமல் ஒரு தமிழனால், இந்தியனால் ஒரு நாளை கழிக்க முடியாது. சன் டிவியின் டைட்டில் மியூசிக்கும் அவருடையதே. ஏர்டெல்லின் ரிங் டோனும் அவருடையதே.





Twitter-ல் என்னை தொடர...

    follow me on Twitter

    இணையத்தில் சம்பாதிக்க...

    என்னை பற்றி...

    My photo
    Bangalore, Karnataka, India
    நீங்க நம்ப பிளாக்க படிக்க வந்ததே பெரிசு! இதுல என்னையப் பத்தி வேற படிக்கணுமா? என்ன கொடுமை சார் இது?

    முந்தைய பதிவுகள்

    statistics

    Site Counter

    Free Counter